Home
Mobile

ரூ.4,000 ஆஃபர் ரேட்ல பிச்சிக்குது சேல்.. AMOLED டிஸ்பிளே.. OIS கேமரா.. 4900mAh பேட்டரி.. எந்த மாடல்?

பிரீமியம் பீச்சர்களுடன் கூடிய சாம்சங் ஸ்மார்ட்போனை பட்ஜெட் விலையில் வாங்க திட்டமிட்ட கஸ்டமர்களுக்கு சரியான நேரம் வந்துவிட்டது. ரூ.4,000 ஆஃபர் விலைக்கு சாம்சங் கேலக்ஸி எஸ்25+ (Samsung Galaxy S25+) ஸ்மார்ட்போன் விற்பனைக்கு கிடைக்கிறது. கேமரா மற்றும் டிஸ்பிளே பர்ஃபாமென்ஸ் அல்ட்ரா பிரீமியமாக இருக்கும். இந்த சாம்சங் மாடல் குறித்த விவரங்களை பார்க்கலாம்.

இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் 20 சதவீத தள்ளுபடி விலைக்கு 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட மாடல் கிடைக்கிறது. ஆகவே, ரூ.79,999 விலைக்கு வாங்கலாம். மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.4,000 தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.75,999 விலைக்கு இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்25+ ஸ்மார்ட்போனை வாங்கி கொள்ளலாம்.

ரூ.4,000 ஆஃபர் ரேட்ல பிச்சிக்குது சேல்.. AMOLED டிஸ்பிளே.. OIS கேமரா!

சாம்சங் கேலக்ஸி எஸ்25+ அம்சங்கள் (Samsung Galaxy S25+ Specifications): கியூஎச்டிபிளஸ் (QHD+) ரெசொலுஷன் கொண்ட 6.7 இன்ச் (3120 x 1440 பிக்சல்கள்) இன்பினிட்டி-ஓ டைனாமிக் அமோலெட் (Infinity-O Dynamic AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. 120Hz அடாப்டிவ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 2600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 (Corning Gorilla Glass Victus 2) பாதுகாப்பு வருகிறது.

ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் 3என்எம் (Octa Core Qualcomm Snapdragon 8 Elite 3nm) சிப்செட் கொண்ட மாடலாக இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்25+ கிடைக்கிறது. மேலும், அட்ரினோ 830 ஜிபியு (Adreno 830 GPU) கிராபிக்ஸ் கார்டு மற்றும் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கொடுத்துள்ளது. 7 வருடங்களுக்கான ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட் மற்றும் 7 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்கள் வருகின்றன.

கேலக்ஸி ஏஐ (Galaxy AI) பீச்சர்களுடன் ஒன் யுஐ 7 (One UI 7) கிடைக்கிறது. நவ் ப்ரீப் (Now Brief) மற்றும் நவ் பார் (Now Bar) போன்ற பீச்சர்கள் கிடைக்கின்றன. 50 எம்பி மெயின் கேமரா + 12 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 10 எம்பி டெலிபோட்டோ லென்ஸ் கொண்ட டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் (Triple Rear Camera System) கிடைக்கிறது. ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) டெக்னாலஜி கொடுக்கப்பட்டு உள்ளது.

3X ஆப்டிகல் ஜூம் கொடுத்துள்ளது. 4K 60 FPS வீடியோ ரெக்கார்டிங் மட்டுமல்லாமல், 8K 30 FPS வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் கொண்ட மாடலாகவும் இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்25+ இருக்கிறது. 12 எம்பி செல்பீ ஷூட்டர் கொடுக்கப்பட்டு உள்ளது. IP68 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) கொடுக்கப்பட்டு உள்ளது. 45W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது.

4900mAh பேட்டரியை பேக் செய்துள்ளது. இந்த பேட்டரிக்கு கியூஐ வயர்லெஸ் சார்ஜிங் (Qi Wireless Charging), வயர்லெஸ் பவர்ஷேர் (Wireless PowerShare) சப்போர்ட் கொடுக்கப்பட்டு இருக்கிறது. 7.3 எம்எம் தடிமன் மற்றும் 190 கிராம் எடை கொடுத்துள்ளது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார், டைப்-சி ஆடியோ உள்ளிட்ட பீச்சர்கள் உள்ளன. 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ, 4ஜி வோஎல்டிஇ உள்ளது.

Best Mobiles in India

English summary
20 Percent Discount on Samsung Galaxy S25 Plus With 12GB RAM on Flipkart Check Price Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X