தூக்கி சாப்பிட்ட பட்ஜெட்.. வெறும் ரூ.21997 போதும்.. 3D டிஸ்பிளே.. SONY கேமரா.. 5500mAh பேட்டரி.. எந்த மாடல்?
ரெட்மி பிரியர்களை தூக்கி சாப்பிடும்படியான பட்ஜெட்டில் சோனி சென்சார் கேமரா, 3டி கர்வ்ட் டிஸ்பிளே, 5500mAh பேட்டரி போன்ற பீச்சர்களை கொண்ட ரெட்மி நோட் 14 ப்ரோ 5ஜி (Redmi Note 14 Pro 5G) போனானது பிளிப்கார்ட் தளத்தில் கிடைக்கிறது. இப்போது, ஆர்டர் செய்தால், ரூ.3000 விலை கம்மியாக கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டில் பீச்சர்களை கேட்டால் மூக்கில் விரல் வைத்துவிடுவீர்கள். ஆகவே, இதன் விலையை பார்த்துவிட்டு, பீச்சர்களுக்கு செல்லலாம்.
ரெட்மி நோட் 14 ப்ரோ 5ஜி விலை (Redmi Note 14 Pro 5G Price): இந்தியாவில் வெளியானபோது 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலானது ரூ.24,999 பட்ஜெட்டிலும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலானது ரூ.26,999 பட்ஜெட்டிலும் களமிறங்கியது. ஆனால், பிளிப்கார்ட்டில் நடக்கும் விற்பனையில் ரூ.2002 விலை குறைப்பு செய்யப்பட்டு, ரூ.22,997 ஆரம்ப விலையில் கிடைக்கிறது.

இதுபோக எஸ்பிஐ பேங்கின் கிரெடிட் கார்டுக்கு ரூ.1000 உடனடி டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. இந்த டிஸ்கவுண்ட் போக ரூ.21,997 விலையில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட மாடலை வாங்கி கொள்ளலாம். வீகன் லெதர் பேனல் கொண்ட பாண்டம் பர்பிள் (Phantom Purple) கலர் வருகிறது. மேலும், ஐவி கிரீன் (Ivy Green) மற்றும் டைட்டன் பிளாக் (Titan Black) கலர்கள் உள்ளன.
ரெட்மி நோட் 14 ப்ரோ 5ஜி அம்சங்கள் (Redmi Note 14 Pro 5G Specifications): பிரீமியம் லுக் கொடக்கும்படி 3டி கர்வ்ட் (3D Curved) டிசைனில் 6.67 இன்ச் (2712 x 1220 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 (Corning Gorilla Glass Victus 2) புரொடெக்சன் கொண்ட இந்த டிஸ்பிளேவில் 3000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது.
மேலும், 1.5K ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 240Hz டச் சாம்பிளிங் மற்றும் 446 பிபிஐ பிக்சல் டென்சிட்டி கிடைக்கிறது. கண்களுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க 1920Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கிடைக்கிறது. கர்வ்ட் டிஸ்பிளேவாக இருப்பதால், ஓடிடி பிரியர்களை தட்டித்தூக்க எச்டிஆர்10பிளஸ் (HDR10+) மட்டுமல்லாமல் டால்பி விஷன் (Dolby Vision) பேக் செய்துள்ளது.
ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) பேஸ்டு சியோமி ஹைபர் ஓஎஸ் (Xiaomi Hyper OS) மற்றும் மாலி ஜி615 எம்சி2 (Mali G615 MC2) ஜிபியு கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. இந்த அவுட்புட்டுக்கு ஏற்ப பர்ஃபாமென்ஸ் கொடுக்கும்படி 4என்எம் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 அல்ட்ரா (4nm Octa Core MediaTek Dimensity 7300 Ultra) சிப்செட் வருகிறது.
இந்த ரெட்மி நோட் 14 ப்ரோ 5ஜி போனில் சோனி எல்ஒய்டி 600 (Sony LYT 600) சென்சார் மற்றும் 8 எம்பி அல்ட்ரா வைடு சப்போர்ட் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது. இதுபோக 2 எம்பி மேக்ரோ கேமராவை கொடுக்கிறது. மேலும், 4K வீடியோ ரெக்கார்டிங் மற்றும் 20 எம்பி செல்பீ ஷூட்டரை கொடுக்கிறது. இப்போது பேக்கப் பீச்சர்களை பார்ப்போம்.
8.55 எம்எம் தடிமனில் 5500mAh பேட்டரியை கொடுக்கிறது. இந்த பேட்டரிக்கு 45W டர்போசார்ஜிங் கிடைக்கிறது. ஆல்-ரவுண்ட் வாட்டர் ப்ரூப் கொடுக்கும்படி IP66 ரேட்டிங் + IP68 ரேட்டிங் மற்றும் IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. டால்பி அட்மோஸ் மற்றும் ஸ்ட்ரீயோ ஸ்பீக்கர்களை கொடுக்கிறது.
அஃபிலியேட் லிங்க் வெளிப்படுத்துதல்: இந்த வலைத்தளத்தில் உள்ள அஃபிலியேட் லிங்க் மூலம் செய்யப்படும் கொள்முதல்களில் இருந்து கிஸ்பாட் வலைத்தளம் கமிஷன்களை சம்பாதிக்கிறது. தயாரிப்புகள் நேர்மையான கருத்துக்கள் மற்றும் தனிப்பட்ட அனுபவத்தின் அடிப்படையில் பரிந்துரைக்கப்படுகின்றன, உங்களுக்கு எந்த கூடுதல் செலவும் இல்லாமல்.


Click it and Unblock the Notifications








