Home
Mobile

பிளிப்கார்ட் பிச்சுக்கும் பாருங்க.. 108எம்பி கேமரா.. 33W சார்ஜிங்.. ஆஃபரில் REDMI 5ஜி போன்.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் தளத்தில் பிளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் சேல் (Flipkart Big Saving Days)எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல் மிகவும் அதிகம் எதிர்பார்த்த ரெட்மி நோட் 13 5ஜி போனுக்கும் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதாவது தற்போது பிளிப்கார்ட் தளத்தில் 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 13 5ஜி போனுக்கு 20 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ. 16,747 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் 5 சதவீதம் கேஷ்பேக் சலுகையும் உள்ளது.

பிளிப்கார்ட் பிச்சுக்கும் பாருங்க.. ஆஃபரில் REDMI 5ஜி போன்..

ரெட்மி நோட் 13 5ஜி அம்சங்கள் (Redmi Note 13 5G Specifications): தரமான மீடியாடெக் டைமன்சிட்டி 6080 ஆக்டோ-கோர் 5ஜி (Mediatek Dimensity 6080 6nm Octa-core 5G) சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது இந்த ரெட்மி போன். அதேபோல் MIUI 14 சார்ந்த ஆண்ட்ராய்டு 14 இயங்குதள வசதியுடன் இந்த போன் வெளிவந்தது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

ளது இந்த ரெட்மி நோட் 13 5ஜி மாடல் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்டுள்ளது. பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ரெட்மி நிறுவனம்.

பெரிய டிஸ்பிளேவுடன் வெளிவந்துள்ளது இந்த ரெட்மி போன். அதாவது 6.67-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது ரெட்மி நோட் 13 5ஜி. மேலும் 1080x2400 பிக்கசல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1000 நிட்ஸ் ப்ரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு உள்ளிட்ட பல டிஸ்பிளே அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போன். குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளே சிறந்த டிஸ்பிளே அனுபவத்தை வழங்கும்.

ரெட்மி நோட் 13 5ஜி ஸ்மார்ட்போன் 108எம்பி பிமைரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த ரெட்மி நோட் 13 5ஜி ஸ்மார்ட்போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம். குறிப்பாக இந்த போனின் கேமரா உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்களை எடுக்க முடியும்.

பிளிப்கார்ட் பிச்சுக்கும் பாருங்க.. ஆஃபரில் REDMI 5ஜி போன்..

அதேபோல் 5000எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது ரெட்மி நோட் 13 5ஜி ஸ்மார்ட்போன். எனவே இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். குறிப்பாக 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி இதில் உள்ளது. எனவே ரெட்மி நோட் 13 5ஜி போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.

ரெட்மி நோட் 13 5ஜி ஸ்மார்ட்போனில் IP54 தர டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust And Splash Resistant), சைடு மவுண்ட்டெட் ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் (Side Mounted Fingerprint Scanner), இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
20 Percent Discount on REDMI Note 13 5G in flipkart big saving days Sale 2024 Check Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X