விஸ்வரூப விற்பனை.. ரூ.18,999 பட்ஜெட்ல SONY கேமரா.. GLASS டிசைன்.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
டூயோ டச் கிளாஸ் பேக் பேனல், அரிசோன் கிளாஸ் டிசைன் போன்ற அல்ட்ரா பிரீமியம் லுக் மட்டுமல்லாமல், சோனி கேமரா, அமோலெட் டிஸ்பிளே, டைமன்சிட்டி 7050 சிப் போன்ற அம்சங்களுடன் ரியல்மி நார்சோ 70 ப்ரோ 5ஜி போன் தள்ளுபடியில் விற்பனையாகிறது.
ரியல்மி நார்சோ 70 ப்ரோ 5ஜி டிசைன் (Realme NARZO 70 Pro 5G Design): இந்த ரியல்மி மாடலில் டூயோ டச் கிளாஸ் பேக் (Duo Touch Glass Back) வருகிறது. மிரர் கிளாஸ் டாப் (Mirror Glass Top) மற்றும் மேட் பினிஷிங் பாட்டம் (Matte Finish Bottom) டெக்சர் கொண்டிருக்கிறது.

மொத்தமாக அல்ட்ரா பிரீமியம் அரிசோன் கிளாஸ் டிசைனில் (Horizon Glass Design) பின்னியெடுக்கிறது. இந்த நார்சோ 70 ப்ரோ மாடலில் ஏர் கெஸ்ச்சர் சப்போர்ட் (Air Gesture Support) கொடுக்கப்பட்டுள்ளது. டச்லெஸ் ஸ்வைப் கன்ட்ரோல் (Touchless Swipe Control) செய்து கொள்ளலாம்.
ரியல்மி நார்சோ 70 ப்ரோ 5ஜி அம்சங்கள் (Realme NARZO 70 Pro 5G Specifications): ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7050 6என்எம் (Octa Core MediaTek Dimensity 7050 6nm) சிப்செட், ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மற்றும் ரியல்மி யுஐ 5.0 (Realme UI 5.0) கொண்டிருக்கிறது.
இந்த நார்சோ மாடலில் OIS சப்போர்ட் மற்றும் சோனி ஐஎம்எக்ஸ்890 (Sony IMX890) சென்சார் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா வருகிறது. அதோடு 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா (Macro Camera) கொண்ட டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் வருகிறது.

6.7 இன்ச் (2400 × 1080 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) அமோலெட் (AMOLED) டிஸ்பிளேவானது, 120Hz ரெஃப்ரெஷ் ரேட் சப்போர்ட் உடன் வருகிறது. அதோடு 2000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் ரெயின் வாட்டர் ஸ்மார்ட் டச் (Rain Water Smart Touch) சப்போர்ட் உள்ளது.
16 எம்பி செல்பீ வருகிறது. இந்த ரியல்மி நார்சோ 70 ப்ரோ 5ஜி போனில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன. 5000mAh பேட்டரியானது, 67W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் டைப்-சி சார்ஜிங் கொண்டிருக்கிறது.
வழக்கமான இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor), யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C Audio), ஸ்ட்ரீயோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) மற்றும் IP54 டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் (Dust & Splash Resistant) வருகிறது. கிளாஸ் கிரீன் (Glass Green), கிளாஸ் கோல்டு (Glass Gold) ஆகிய 2 கலர்கள் வருகிறது.
இந்த நார்சோ 70 ப்ரோ போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.19,999ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.21,999ஆகவும் இருக்கிறது. இப்போது, அமேசான் (Amazon) தளத்தில் ரூ.1000 உடனடி டிஸ்கவுண்ட் உடன் விற்பனையாகிறது. எச்டிஎப்சி கிரெடிட் கார்டுக்கு இந்த தள்ளுபடி கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








