வெளுக்குது விற்பனை.. வெறும் ரூ.22,000 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. 3D டிஸ்பிளே.. SONY கேமரா.. எந்த மாடல்?
அமேசான் விற்பனையில் (Amazon Sale) பட்டையை கிளப்பும் டிஸ்கவுண்ட் போக 3டி கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே, 6000mAh பேட்டரி, சோனி சென்சார் கேமரா, IP69 ரேட்டிங் வாட்டர் ரெசிஸ்டன்ட் கொண்ட ரியல்மி 14 ப்ரோ 5ஜி (Realme 14 Pro 5G) போன் கிடைக்கிறது. நேரடியாக விலை குறைப்பில் கிடைப்பதால், டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டு இல்லாமலேயே கம்மியான பட்ஜெட்டில் வாங்கி கொள்ள முடியும். இதற்கு முன்பு இந்த ரியல்மி 14 ப்ரோ போனில் கிடைக்கும் பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம்.
டிசைனை பொறுத்தவரையில் 3டி கர்வ்ட் டிஸ்பிளே மட்டுமல்லாமல், பேர்ல் டிசைனில் கலர் சேஞ்சிங் பேனல் கிடைக்கிறது. அதேபோல நைட் போட்டோகிராபிக்காக 3 ரியர் ஃபிளாஷ் கிடைக்கிறது. ஆல்-ரவுண்ட் வாட்டர், ஷாக் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் கொடுக்கும்படி IP69, IP68 & IP66 ரேட்டிங் கொடுக்கிறது. ஷாக் ரெசிஸ்டன்ட் மற்றும் ரக்கட் சர்டிபிகேஷன் வருகிறது.

ரியல்மி 14 ப்ரோ 5ஜி அம்சங்கள் (Realme 14 Pro 5G Specifications): இந்த ரியல்மி போனில் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 எனர்ஜி 4என்எம் (Octa Core MediaTek Dimensity 7300 Energy 4nm) சிப்செட் மற்றும் மாலி ஜி615 ஜிபியு (Mali G6 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. ஏஐ அல்ட்ரா கிளாரிட்டி 2.0, ஏஐ ஸ்னாப் மோட், ஏஐ எரைசர் 2.0 போன்ற பீச்சர்களுடன் ரியல்மி யுஐ 6.0 (realme UI 6.0) வருகிறது.
சமீபத்தில் வெளியான மாடலாக இருப்பதால், ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கிடைக்கிறது. இந்த ரியல்மி 14 ப்ரோ 5ஜி போனில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்கள் மட்டுமே விற்பனைக்கு கிடைக்கின்றன. 3டி கர்வ்ட் டிசைனில் 6.7 இன்ச் (2412 x 1080 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது.
இந்த டிஸ்பிளேவில் 3840Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி மற்றும் 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. மேலும், வழக்கமாக கிடைக்கும் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 240Hz டச் சாம்பிளிங் ரேட் ஆகியவற்றுடன் கேமிங் பிரியர்களுக்காக 2000Hz இன்ஸ்டன்ட் டச் சாம்பிளிங் ரேட் கிடைக்கிறது. டூயல் ரியர் கேமரா + டிரிபிள் ஃபிளாஷ் கிடைக்கிறது.
50 எம்பி மெயின் கேமராவில் சோனி ஐஎம்எக்ஸ்882 (Sony IMX882) சென்சார் கிடைக்கிறது. அதேபோல வீடியோ பிரியர்கள் விரும்பும்படி ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) சப்போர்ட் கிடைக்கிறது. இதுபோக 2 எம்பி மோனோகுரோம் கேமரா செகண்டரியாக கிடைக்கிறது. இந்த ரியல்மி 14 ப்ரோ 5ஜி போனில் 16 எம்பி செல்பீ ஷூட்டர் உள்ளது.
இதுகிட்டத்தட்ட மிட்-ரேஞ்ச் பீச்சர்களை கொடுப்பதாலும், 3டி கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே வருவதாலும் பேட்டரி கேபாசிட்டி குறைவாக இருக்கும் என்று நினைக்கலாம். ஆனால், இதில் 6000mAh பேட்டரி மற்றும் 45W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது. டைப்-சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், ஹை-ரெஸ் சர்டிபிகேஷன் போன்ற ஆடியோ பீச்சர்கள் உள்ளன.
8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் மார்கெட் விலை ரூ.24,999ஆக இருக்கிறது. ஆனால், இப்போது அமேசான் விற்பனையில் ரூ.22,496 பட்ஜெட்டில் கிடைக்கிறது. இது நேரடி விலை குறைப்பு சலுகையாகும். ஆகவே, டெபிட் அல்லது கிரெடிட் மூலம் ஆர்டர் செய்ய வேண்டியது இல்லை. கூடுதலாக ரூ.1000 டிஸ்கவுண்ட் பெறுவதற்கு எச்டிஎப்சி கிரெடிட் கார்டை பயன்படுத்தலாம்.


Click it and Unblock the Notifications








