Home
Mobile

விலை ரொம்ப கம்மி.. 50எம்பி கேமரா.. 5000mAh பேட்டரி.. ஆஃபரில் Motorola 5ஜி போன்.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் தளத்தில் மோட்டோரோலா ஜி35 5ஜி (Motorola G35 5G) ஸ்மார்ட்போன் ஆனது தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. அதுவும் இந்த மோட்டோரோலா போன் 50எம்பி கேமரா, 6.72 இன்ச் டிஸ்பிளே, 5000mAh பேட்டரி உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் வெளிவந்தது. இப்போது மோட்டோரோலா ஜி35 5ஜி போனுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களை இங்கே பார்க்கலாம்.

பிளிப்கார்ட் தளத்தில் மோட்டோரோலா ஜி35 5ஜி போனுக்கு 20 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.9,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த வாங்கினால் 5 சதவீதம் தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த மோட்டோரோலா ஜி35 5ஜி போனை குறைந்த விலையில் வாங்கிவிட முடியும்.

விலை ரொம்ப கம்மி.. ஆஃபரில் Motorola 5ஜி போன்.. எந்த மாடல்?

மோட்டோரோலா ஜி35 5ஜி அம்சங்கள் (Motorola G35 5G specifications): 6.72-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே உடன் இந்த மோட்டோரோலா ஜி35 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்தது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1000 நிட்ஸ் பிரைட்னஸ், எச்டிஆர் 10, கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு, 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் பல்வேறு சிறப்பான அம்சங்கள் உள்ளன.

யுனிசாக் டி760 (Unisoc T760) சிப்செட் உடன் இந்த மோட்டோரோலா ஜி35 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 14 (Android 14) இயங்குதள வசதியுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

இந்த மோட்டோரோலா ஜி35 5ஜி போன் 50எம்பி மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

மேலும் டால்பி அட்மாஸ் (Dolby Atmos) ஆதரவு கொண்ட டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா ஜி35 5ஜி ஸ்மார்ட்போன். எனவே இந்த போன் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். பின்பு சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (side-mounted fingerprint sensor) கொண்டு வெளிவந்துள்ளது இந்த போன். IP52 தர டஸ்ட் மற்றும் ப்ளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust And Splash Resistant) உடன் இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

விலை ரொம்ப கம்மி.. ஆஃபரில் Motorola 5ஜி போன்.. எந்த மாடல்?

4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா ஜி35 5ஜி ஸ்மார்ட்போன. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது. லீஃப் கிரீன் (Leaf Green), குவாவா ரெட் (Guava Red), மிட்நைட் பிளாக் (Midnight Black) நிறங்களில் இந்த போனை வாங்கலாம்.

5000mAh பேட்டரி உடன் இந்த மோட்டோரோலா ஜி35 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 20W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. 5ஜி, டூயல் பேண்ட் வைஃபை, புளூடூத் 5.0, ஜிபிஎஸ், குளோனாஸ் (GLONASS), கலிலியோ (GALILEO), 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.

More from GizBot

Best Mobiles in India

English summary
23 Percent Discount on Motorola G35 5G in Flipkart sale : check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X