Home
Mobile

தலைவன் வேற ரகம்.. ரூ.22000 பட்ஜெட்ல pOLED டிஸ்பிளே.. SONY கேமரா.. 30X சூப்பர் ஜூம்.. எந்த மாடல்?

கேமரா பிரியர்களுக்கு பட்டையை கிளப்பும் அவுட்புட் கொடுக்கும் சோனி எல்ஒய்டிஐஏ 700சி சென்சார், ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன், குவாட் பிக்சல் டெக்னாலஜி, 3X ஆப்டிகல் ஜூமிங், 30X சூப்பர் ஜூமிங் பீச்சர்கள் மட்டுமல்லாமல், மோட்டோ ஏஐ கேமரா பீச்சர்களுடன் வெளியான மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ (Motorola Edge 50 Neo) போனின் விற்பனை டிஸ்கவுண்ட் உடன் தொடங்கி இருக்கிறது. இந்த கேமரா பீச்சர்களுடன் பிஓஎல்இடி டிஸ்பிளே, 68W சார்ஜிங், 4310mAh பேட்டரி போன்ற பீச்சர்களும் வருகின்றன.

மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ அம்சங்கள் (Motorola Edge 50 Neo Specifications): இந்த மோட்டோவின் டிசைன் லெதர் பேனலுடன் அல்ட்ரா பிரீமியம் லுக் கொடுக்கிறது. IP68 டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் மட்டுமல்லாமல், MIL-STD 810H மிலிட்டரி கிரேடு சர்டிபிகேஷன் பெற்றுள்ளது. ஆகவே, பக்காவான பில்ட் குவாலிட்டி மற்றும் டியூரபிலிட்டி எதிர்பார்க்கலாம்.

தலைவன் வேற ரகம்.. ரூ.22000 பட்ஜெட்ல pOLED டிஸ்பிளே.. SONY கேமரா மாடல்!

கூடவே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 (Corning Gorilla Glass 3) புரொடெக்சன் வருகிறது. டிஸ்பிளேவை பொறுத்தவரை 1.5K ரொசொலூஷன் கொண்ட 6.4 இன்ச் (1200 × 2670 பிக்சல்கள்) பிஓஎல்இடி (pOLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 300Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 3000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் பேக் செய்யப்பட்டுள்ளது.

மேலும், எச்டிஆர்10பிளஸ் (HDR10+) வருவதால், வீடியோ அவுட்புட் பிரீமியமாக இருக்கும். முன்போ சொன்னது போல, கேமராவில் மிரள விட்டிருக்கிறது. சோனி எல்ஒய்டிஐஏ 700சி (Sony LYTIA 700C) சென்சார் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) கொண்ட 50 எம்பி மெயின் கேமரா வருகிறது. 4K வீடியோ ரெக்கார்டிங் செய்து கொள்ளலாம்.

இந்த மெயின் கேமராவுடன் 13 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 10 எம்பி டெலிபோட்டோ கேமரா கொண்ட டிரிபிள் ரியர் சிஸ்டம் (Triple Rear System) பேக் செய்யப்பட்டுள்ளது. மேக்ரோ ஆப்ஷன் வருகிறது. குவாட் பிக்சல் டெக்னாலஜி (Quad Pixel Technology) உள்ளது. இந்த கேமராவில் 3X ஆப்டிகல் ஜூமிங் செய்து கொள்ளலாம். 30X சூப்பர் ஜூம் (Super Zoom) சப்போர்ட் உள்ளது.

மோட்டோ ஏஐ (Moto AI) பீச்சர்கள் வருகின்றன. மேஜிக் எரைசர் (Magic Eraser), போட்டோ அன்பிளர் (Photo Unblur), மேஜிக் எடிட்டர் (Magic Editor), போர்ட்ராய்டு பிளர் (Portrait Blur), போர்ட்ராய்டு லைட் ஸ்கை (Portrait Light Sky) போன்ற பீச்சர்கள் வருகின்றன. இந்த மோட்டோரோலா எட்ஜ் 50 நியோவில் 4K வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் கொண்ட 32 எம்பி செல்பீ கேமரா வருகிறது.

மிட்-பிரீமியம் பர்ஃபாமென்ஸ் கொடுக்கக்கூடிய ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 4என்எம் (Octa Core MediaTek Dimensity 7300 4nm) சிப்செட் பேக் செய்யப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மற்றும் மாலி ஜி615 எம்சி2 ஜிபியு (Mali G615 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு உள்ளது. 68W வயர்டு சார்ஜிங் மற்றும் 15W வயர்லெஸ் சார்ஜிங் கொண்ட 4310mAh பேட்டரி வருகிறது.

இந்த மோட்டோவின் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.23,999ஆக இருக்கிறது. பிளிப்கார்ட் தளத்தில் ரூ.1000 டிஸ்கவுண்ட் போக ரூ.22,999 பட்ஜெட்டில் கிடைக்கிறது. ஈஎம்ஐ மூலம் வங்கினால், ரூ.1500 டிஸ்கவுண்ச் கிடைக்கும். நாட்டிகல் ப்ளூ (Nautical Blue), கிரிசெயில் (Grisaille), லாட்டே (Latte) மற்றும் பாயின்சியானா (Poinciana) ஆகிய கலர்களில் ஆர்டர் செய்யலாம்.

Best Mobiles in India

English summary
20 Percent Discount on Motorola Edge 50 Neo With 50MP Camera in Flipkart Sale Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X