ஆர்டர் போட்ருங்க.. 50எம்பி கேமரா.. 68W சார்ஜிங்.. ஆஃபரில் Motorola 5ஜி போன்.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் தளத்தில் மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ (Motorola Edge 50 Neo) ஸ்மார்ட்போன் மாடலுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதாவது இந்த போன் 50எம்பி டைமன்சிட்டி சிப்செட், ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்தது. இப்போது மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ மாடலுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.
அதாவது பிளிப்கார்ட் தளத்தில் மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ போனுக்கு 20 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.23,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.1250 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த போனை ரூ.22749 விலையில் வாங்கிவிட முடியும்.

மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ அம்சங்கள் (Motorola Edge 50 Neo Specifications): தரமான மீடியாடெக் டைமன்சிட்டி 7300 (Mediatek Dimensity 7300 chipset) சிப்செட் உடன் இந்த புதிய மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ ஸ்மார்ட்போன் வெளிவந்தது. இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் Hello UI சார்ந்த ஆண்ட்ராய்டு 14 (Android 14) இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த போன். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் கிடைக்கும்.
8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ ஸ்மார்ட்போன் மாடல். மேலும் பான்டோன் நாட்டிகல் ப்ளூ (Pantone Nautical Blue), பான்டோன் லட்டே (Pantone Latte), பான்டோன் பயின்சியானா (Pantone Poinciana), பான்டோன் Grisaille போன்ற நிறங்களில் இந்த மோட்டோரோலா போன் வாங்கக் கிடைக்கும்.
அதேபோல் 6.4-இன்ச் 1.5கே பிஒஎல்இடி டிஸ்பிளே (pOLED display) உடன் இந்த புதிய மோட்டோரோலா எட்ஜ் 50 நியோபோன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate), 3000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் (3000 nits peak brightness), கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 புரொடெக்சன் (Gorilla Glass 3 protection) உள்ளிட்ட பல டிஸ்பிளே அம்சங்கள் உள்ளன. குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.
இந்த மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ ஸ்மார்ட்போன் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization - OIS) ஆதரவு உடனான 50எம்பி பிரைமரி கேமரா + 13எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 10எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது . இதுதவிர 3X ஆப்டிகல் ஜூமிங் (Optical Zoom) ஆதரவு கொண்டுள்ளன இந்த ரியர் கேமராக்கள். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அசத்தலான படங்களை எடுக்க முடியும்.
செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ ஸ்மார்ட்போன். பின்பு எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது மோட்டோரோலா நிறுவனம்.

குறிப்பாக IP68 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் (Water and dust resistant) உடன் மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் MIL-STD 810H சான்றிதழ் பெற்றுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதேபோல் டால்பி அட்மாஸ் (Dolby Atmos) ஆதரவு கொண்ட டூயல் ஸ்பீக்கர்கள் (Dual speakers) கொண்டுள்ளது இந்த சாதனம்.
4310mAh பேட்டரி உடன் இந்த புதிய மோட்டோரோலா போன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 68W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 15W வயர்லெஸ் சார்ஜிங் வசதியும் உள்ளது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதியுடன் மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ போன் வெளிவந்துள்ளது. பின்பு என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல சிறப்பான வசதிகளை கொண்டுள்ளது இந்த போன்.


Click it and Unblock the Notifications








