ஆர்டர் அதிருது.. ரூ.14,999 போதும்.. 12GB ரேம்.. OIS கேமரா.. 6000mAh பேட்டரி.. 30W சார்ஜிங்.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் விற்பனையில் (Flipkart Sale) கிடைக்கும் இந்த டிஸ்கவுண்ட் ஒட்டுமொத்த மோட்டோ பிரியர்களையும் அடித்து பிடித்து ஆர்டர் போட வைக்கும்படி இருக்கிறது. ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் கேமரா, 12 ஜிபி ரேம், 6000mAh பேட்டரி மற்றும் 30W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட மோட்டோ ஜி64 5ஜி (Moto G64 5G) பட்டையை கிளப்பும் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.
இந்த மோட்டோ போனின் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.16,999ஆக இருந்தது. இப்போது, பிளிப்கார்ட் விற்பனையில் ரூ.15,999 பட்ஜெட்டில் ஆர்டருக்கு கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டிலும் ரூ.1000 பேங்க் டிஸ்கவுண்ட் பெற்று கொள்ளலாம். ஆகவே, ரூ.2000 விலை குறைப்பு போக ரூ.14,999 பட்ஜெட்டில் ஆர்டர் செய்து கொள்ளலாம்.

எச்டிஎப்சி கிரெடிட் கார்டுக்கு இந்த ரூ.1000 டிஸ்கவுண்ட் கொடுக்கப்படும். ரூ.10,600 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் சலுகையை பெற்று கொள்ளலாம். 12 ஜிபி ரேம் மட்டுமல்லாமல், பக்கா பேக்கப் கொடுக்கும் பேட்டரி சிஸ்டம், கேமரா பிரியர்களுக்கான பக்கா பீச்சர்கள் மட்டுமல்லாமல், பிரீமியம் லுக் கொடுக்கும் மாடலாக இந்த மோட்டோ ஜி64 5ஜி இருக்கிறது.
மோட்டோ ஜி64 5ஜி அம்சங்கள் (Moto G64 5G Specifications): இந்த மோட்டோ 5ஜி போனில் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் கொடுக்கும் 6.5 இன்ச் (2400 × 1080 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே வருகிறது. எல்சிடி பேனல் வந்தாலும், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 560 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. மேலும் 240Hz டச் சாம்பிளிங் ரேட் உள்ளது.
ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் மற்றும் 1080p வீடியோ ரெக்கார்டிங் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா கிடைக்கிறது. இந்த கேமராவில் மேக்ரோ மற்றும் டெப்த் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. 1080p வீடியோ ஷூட் கொடுக்கும் 16 எம்பி செல்பீ கேமரா வருகிறது. ஆகவே, கேமராவில் குறையில்லை.
ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) பேஸ்டு மோட்டோ நிறுவனத்தின் மை யுஎக்ஸ் (My UX) சப்போர்ட் கிடைக்கிறது. ஆக்டா கோர் 6என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி 7025 (Octa Core 6nm MediaTek Dimensity 7025) சிப்செட் மற்றும் ஐஎம்ஜி பிஎக்ஸ் ஜிபியு கிராபிக்ஸ் கார்டு வருகிறது. 12 ஜிபி ரேம் மாடல் மட்டுமல்ல, 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மாடலும் கிடைக்கிறது.
மேலும், 1 டிபி மெமரியை கூடுதலாக பயன்படுத்தி கொள்ள மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் (microSD Card Slot) கிடைக்கிறது. இந்த மோட்டோ ஜி64 5ஜி போனில் 30W டர்போ சார்ஜிங் (Turbo Charging) கிடைக்கிறது. இந்த சார்ஜிங்குக்கு 6000mAh பேட்டரி வருகிறது. அதேபோல டைப்-சி போர்ட் (Type-C Port) உள்ளது. 3.5எம்எம் ஹெட்போன் ஜாக் பயன்படுத்தலாம்.
IP52 ஸ்பிளாஷ் & டஸ்ட் ரெசிஸ்டன்ட், டூயல் மைக்ரோபோன்கள் (Dual Microphones), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) மற்றும் டால்பி அட்மோஸ் (Dolby Atmos) கிடைக்கிறது. சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side Mounted Fingerprint Sensor) மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 (Corning Gorilla Glass 3) பாதுகாப்பை இந்த மோட்டோ கொடுக்கிறது.


Click it and Unblock the Notifications








