Home
Mobile

வெச்சி செஞ்சிட்டாங்க.. ரூ.10,999-க்கு MOTO போன்.. 50MP கேமரா.. 5000mAh பேட்டரி.. 18W சார்ஜிங்.. எந்த மாடல்?

இதுக்கு மேல என்னங்க வேணும், ஆஃபர்ல வெச்சி செஞ்சிட்டாங்க என்று சொல்லும்படி 50 எம்பி மெயின் கேமரா, 5000mAh பேட்டரி, 18W ஃபாஸ்ட் சார்ஜிங், 1 டிபி மெமரி போன்ற பீச்சர்களுடன் வெளியான மோட்டோ ஜி45 5ஜி (Moto G45 5G) போனுக்கு டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. அடிமட்ட பட்ஜெட்டில் லெதர் பேக் பேனலுடன் பிரீமியம் லுக் கொடுக்கும் இந்த மோட்டோ ஜி45 5ஜி போனின் முழு பீச்சர்கள், விலை மற்றும் டிஸ்கவுண்ட் விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

இந்த மோட்டோ போனின் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் மார்கெட் விலை ரூ.10,999ஆகவும், 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் மார்கெட் விலை ரூ.12,999ஆகவும் இருக்கிறது. இப்போது, 8 ஜிபி மாடலுக்கு ரூ.1000 டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஈஎம்ஐ ஆப்ஷனில் வாங்கினால், ரூ.1150 டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.

வெச்சி செஞ்சிட்டாங்க.. ரூ.10,999-க்கு MOTO போன்.. 50MP கேமரா.. மாடல்?

ஆகவே, இந்த மோட்டோ ஜி45 5ஜி போனை ரூ.10,999 பட்ஜெட்டில் ஆர்டர் செய்யலாம். இதுபோக ரூ.10,300 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் சலுகையும் கொடுக்கப்படுகிறது. இந்த பட்ஜெட்டுக்கு வேகன் லெதர் பேனல், 50 எம்பி கேமரா, 5000mAh பேட்டரி மற்றும் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் மட்டுமல்லாமல், வேறு என்னென்ன பீச்சர்களை எதிர்பார்க்கலாம்.

இந்த பட்ஜெட்டிலும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 (Corning Gorilla Glass 3) புரொடெக்சன் மட்டுமல்லாமல், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.5 இன்ச் (1600 x 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே வருகிறது. இந்த ஐபிஎஸ் (IPS) மாடலில் எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் உள்ளது.

மேலும், 500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 269 பிபிஐ பிக்சல் டென்சிட்டி கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மட்டுமல்லாமல், ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) அப்டேட் மற்றும் 3 வருடங்களுக்கான செக்யூரிட்டி அப்டேட்கள் வருகின்றன. லேட்டஸ்ட் பீச்சர்களுடன் மை யுஎக்ஸ் (My UX) கிடைக்கிறது.

இந்த மோட்டோ ஜி45 5ஜி போனில் 6என்எம் ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 6எஸ் ஜென் 3 ( 6nm Octa Core Qualcomm Snapdragon 6s Gen 3) சிப்செட் மற்றும் இந்த விலைக்கு ஏற்ப அட்ரினோ 619 ஜிபியு (Adreno 619 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. இந்த சிப்செட்டுக்கு ஏற்ப 8 ஜிபி விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) கிடைக்கிறது.

குவாட் பிக்சல் டெக்னாலஜி (Quad Pixel Technology) கொண்ட 50 எம்பி மெயின் கேமரா உள்ளது. மேலும், 2 எம்பி மேக்ரோ கேமரா மற்றும் 16 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. இந்த மோட்டோவில் மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் (microSD Card Slot) மற்றும் ஹைபிரிட் டூயல் சிம் (Hybrid Dual SIM) சிலாட் பேக் செய்யப்பட்டுள்ளது.

ஆடியோ பீச்சர்களை பார்க்கையில் மிட்-ரேஞ்ச் மாடல்களில் இருப்பதை போலவே ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio) மற்றும் டால்பி அட்மோஸ் (Dolby Atmos) கொண்ட ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) கிடைக்கிறது. 18W ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளது. இந்த மோட்டோவில் 5000mAh பேட்டரி இருக்கிறது. மூன்று கலர்களில் வாங்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
20 Percent Discount on Moto G45 5G With 8GB Ram in Flipkart Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X