வெளுக்குது ஆர்டர்.. வெறும் ரூ.9869 போதும்.. 108MP கேமரா.. 16GB ரேம்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் பிச்சிக்கும் டிஸ்கவுண்ட்டில் 108 எம்பி கேமரா, 16 ஜிபி ரேம், டிடிஎஸ் ஸ்பீக்கர்கள், 5000mAh பேட்டரி போன்ற பீச்சர்கள் மட்டுமல்லாமல் அல்டா ஸ்லிம் கலர் சேஞ்சிங் பேக் பேனல் கொண்ட ஐடெல் எஸ்24 (itel S24) மாடலானது விற்பனைக்கு கிடைக்கிறது.
இந்த ஐடெல்லின் கேமராவில் ஏஐ பீச்சர்கள் வருவதால், இந்திய பட்ஜெட் கேமரா பிரியர்களைடையே மிகப்பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. இப்போது, டிஸ்கவுண்ட்டில் கிடைப்பதால், விற்பனையில் சக்கைப்போடு போடுகிறது. இந்த ஐடெல் எஸ்24 போனின் முழு பீச்சர்களை பார்த்துவிட்டு விலை விவரங்களை தெரிந்து கொள்வோம்.

ஐடெல் எஸ்24 அம்சங்கள் (itel S24 Specifications): இந்த போனில் 108 எம்பி மெயின் கேமரா வருகிறது. இந்த கேமராவில் சாம்சங் எச்எம்6 ஐசோசெல் சென்சார் (Samsung HM6 ISOCELL Sensor) உள்ளது. இந்த பட்ஜெட்டிலும் மிட்-பிரீமியம் கேமரா சென்சார் வருவதால், அவுட்புட் பக்காவாக இருக்கும்.
2 எம்பி டெப்த் சென்சார் வருகிறது. இந்த கேமராவில் ஏஐ கிளியர் போர்ட்ராய்டு (AI Clear Portrait) பீச்சர் வருகிறது. இந்த பீச்சர் மூலம் சீன் டிடெக்சன் செய்து கொள்ளலாம். அதேபோல நைட் போட்டோகிராபிக்காக சூப்பர் நைட் மோட் (Super Night Mode) மற்றும் போர்ட்ராய்டு பிளர்ரிங் (Portrait Blurring) பீச்சர்கள் உள்ளது.
மேலும், 3x இன்-சென்சார் ஜூமிங் சப்போர்ட் வருகிறது. இந்த ஐடெல்லில் 8 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. டைனாமிக் பார் (Dynamic bar) பீச்சர் சப்போர்ட் கொண்ட 6.6 (1612 x 720 பிக்சல்கள்) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன், 90Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 480 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது.

பஞ்ச்-ஹோல் டிஸ்பிளே டிசைனில் பேட்டரி, கால் நோட்டிபிகேஷன்களை டைனாமிக் பார் மூலம் தெரிந்து கொள்ளலாம். இந்த 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 16 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்கள் மற்றும் 8 ஜிபிக்கான டைனாமிக் ரேம் (Dynamic RAM) சப்போர்ட் வருகிறது.
இதுவொரு பட்ஜெட் மாடலென்பதால், ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) கொண்ட ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி91 12என்எம் (Octa-Core MediaTek Helio G91 12nm) சிப்செட் மற்றும் ஐடெல் ஓஎஸ் 13.5 (itel OS 13.5) சப்போர்ட் வருகிறது. இன்பினிக்ஸ் மாடல்களை போலவே பைபாஸ் சார்ஜிங் (ByPass Charging) சப்போர்ட் கொண்டிருக்கிறது.
18W குயிக் சார்ஜ் (Quick Charge) மற்றும் டைப்-சி (Type-C) போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. இந்த ஐடெல் எஸ்24 போனில் டூயல் டிடிஎஸ் ஸ்பீக்கர் (Dual DTS Speaker) மற்றும் 3.5 எம்எம் ஆடியோ ஜாக் வருகிறது. சைடு-பேசிங் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் மற்றும் எஸ்டி கார்டு சிலாட் கொண்டிருக்கிறது.
பிளிப்கார்ட் தளத்தில் இந்த போனின் 16 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.10,389ஆக மட்டுமே இருக்கிறது. இந்த பட்ஜெட்டிலும் ரூ.520 கேஷ்பேக் கொடுக்கப்படுகிறது. ஆகவே, ரூ.9,869 விலைக்கு கிடைக்கிறது. டவுன் ஒயிட் மற்றும் ஸ்டார்ரி பிளாக் கலர்களில் விற்பனைக்கு வருகிறது.


Click it and Unblock the Notifications








