Home
Mobile

அடிச்சு தூக்குது ஆர்டர்.. வெறும் ரூ.7990 போதும்.. 24GB ரேம்.. 50MP கேமரா.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

கேமரா, சிப்செட், பேட்டரி மட்டுமல்லாமல், டிசைனையும் பார்த்து மொபைல் வாங்கும் கஸ்டமர்களும் இருக்கிறார்கள். இவர்களை தட்டித் தூக்கும்படியான டிசைனில் ஐடெல் பி55 (itel P55) களமிறங்கியது. இப்போது, பிளிப்கார்ட் டிஸ்கவுண்ட்டில் (Fipkart Discount) அடிமட்ட விலைக்கு கிடைப்பதால், ஆர்டர் அடித்து தூக்குகிறது. 24 ஜிபி ரேம், 50 எம்பி கேமரா, 5000mAh பேட்டரி மற்றும் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் போன்ற மற்ற பீச்சர்களும் பட்ஜெட்டுக்கு ஏற்ப பேக் செய்யப்பட்டுள்ளன. இந்த ஐடெல்லுக்கு கிடைக்கும் டிஸ்கவுண்ட் விவரங்கள் இதோ.

ஐடெல் பி55 அம்சங்கள் (itel P55 Specifications): இந்த ஐடெல் போன் அடிமட்ட பட்ஜெட்டில் 24 ஜிபி ரேம் கொண்ட மாடலாக இருக்கிறது. அதாவது, 8 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி டைனாமிக் ரேம் (Dynamic RAM) கொண்டிருக்கிறது. 128 ஜிபி மெமரி சப்போர்ட் கிடைக்கிறது. ஆகவே, 24 ஜிபி ரேம் அவுட்புட் எதிர்பார்க்கலாம். 4 ஜிபி ரேம் மாடலிலும் 8 ஜிபிக்கான டைனாமிக் ரேம் கிடைக்கிறது.

அடிச்சு தூக்குது ஆர்டர்.. வெறும் ரூ.7990 போதும்.. 24GB ரேம்.. மாடல்?

பட்ஜெட் மாடலாக இருப்பதால், டைமன்சிட்டி அல்லது ஸ்னாப்டிராகன் சிப்செட் எதிர்பார்க்க முடியாது. யுனிசோக் டி606 ஆக்டா கோர் எஸ்ஓசி (Unisoc T606 Octa Core SoC) மட்டுமே கிடைக்கிறது. இருப்பினும், ஜிபியு (GPU) ஓரளவுக்கு பர்ஃபாமென்ஸ் கொடுக்கும்படி மாலி ஜி57 (Mali G57) மாடலாக வந்திருக்கிறது. இந்த ஐடெல்லில் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) எதிர்பார்க்க முடிகிறது.

பம்ப் டிசைனில் 50 எம்பி மெயின் கேமரா + செகண்டரி கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா செட்டப் (Dual Camera Setup) கிடைக்கிறது. இந்த கேமராவில் ஏஐ பீச்சர்கள் இருக்கின்றன. ஆகவே, ஏஐ கிளியர் போர்ட்ராய்டு (AI Clear Portrait) சப்போர்ட் கிடைக்கிறது. இதுபோக நைட்போட்டோகிராபி பிரியர்களுக்காக பட்டையை கிளப்பும் அவுட்புட் கொடுக்கும் சூப்பர் நைட் மோட் (Super Night Mode) வருகிறது.

மேலும் பனோரமா மோட் (Panorama Mode) இருக்கிறது. ஆகவே, பட்ஜெட்டில் கேமரா பிரியர்களையும் கவர் செய்யும்படி பீச்சர்களை கொடுத்து இருக்கிறது. டிஸ்பிளேவை பார்க்கையில் எல்சிடி (LCD) பேனல் மட்டுமே கிடைக்கிறது. இருப்பினும், டைனாமிக் பார் (Dynamic Bar) பீச்சரை கொடுத்து பிரீமியம் பீல் கொடுக்கிறது. எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷனுடன் 6.6 இன்ச் (720 x 1600 பிக்சல்கள்) டிஸ்பிளே வருகிறது.

ஓரளவு கேமிங் அவுட்புட் கொடுக்க ஐபூஸ்ட் கேமிங் (iBoost Gaming) டெக்னாலஜியுடன் 90Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. இந்த ஐடெல் பி55 போனில் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சாரும் (Side-mounted Fingerprint Sensor), டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE) கனெக்டிவிட்டியும் கிடைக்கிறது. 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack) மற்றும் டைப்-சி சார்ஜிங் போர்ட் (Type-C Charging Port) கிடைக்கிறது.

இந்த ஐடெல் பி55 போனில் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. ஆகவே, நாள் முழுவதும் பேக்கப் எதிர்பார்க்கலாம். மூன்லைட் பிளாக் (Moonlit Black), பிரில்லியன்ட் கோல்டு (Brilliant Gold) மற்றும் அரோரா ப்ளூ (Aurora Blue) ஆகிய கலர்களில் ஆர்டர் செய்து கொள்ளும்படி கிடைக்கிறது. 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி மாடல் ரூ.8999 விலைக்கு வந்தது.

ஆனால், பிளிப்கார்ட் விற்பனையில் (Flipkart Sale) இப்போது ரூ.7990 பட்ஜெட்டில் ஆர்டருக்கு கிடைக்கிறது. இந்த டிஸ்கவுண்ட்டுக்கு கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் தேவையில்லை. ஆகவே, ரூ.1000 விலை குறைப்பில் இப்போது ஆர்டர் செய்து கொள்ளலாம். கம்மி பட்ஜெட்டில் 24 ஜிபி ரேம் மற்றும் 50 எம்பி கேமரா கொண்ட போன் பிரீமியம் டிசைனில் வேண்டுமானால், இது நல்ல ஆப்ஷனாக இருக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
20 Percent Discount on itel P55 With 24GB RAM 50MP Camera in Flipkart Sale Here Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X