Home
Mobile

தலைவன் வேற மாறி.. ரூ.17999 பட்ஜெட்ல OIS கேமரா.. SONY சென்சார்.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?

மார்கெட் மிரளும் பட்ஜெட் மட்டுமல்லாமல், பேங்க் டிஸ்கவுண்ட் உடன் பிரீமியம் லுக்கில் ஓஐஎஸ் கேமரா, அமோலெட் டிஸ்பிளே, சோனி சென்சார், ஆண்ட்ராய்டு 14, 16ஜிபி ரேம் போன்ற பீச்சர்களுடன் ஐக்யூ இசட்9 5ஜி (iQOO Z9 5G) அமேசானில் விற்பனைக்கு வந்துள்ளது.

ஐக்யூ இசட்9 விலை (iQOO Z9 Price): இந்த ஐக்யூவின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.19,999ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.21,999ஆகவும் இருக்கிறது. இருப்பினும், அறிமுக சலுகையாக எச்டிஎப்சி பேங்க் கிரெடிட் கார்டுக்கு ரூ.2000 உடனடி டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.

பட்ஜெட்ல OIS கேமரா.. SONY சென்சார்.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?

ஆகவே, இந்த போனின் 128 ஜிபி மெமரி மாடலை ரூ.17,999 பட்ஜெட்டிலும், 256 ஜிபி மெமரி மாடலை ரூ.19,999 பட்ஜெட்டிலும் வங்கிக் கொள்ளலாம். அமேசான் (Amazon) தளத்தில் ஓப்பன் சேல் தொடங்கிவிட்டது. இந்த விலைக்கு இந்த போனில் என்னென்ன பீச்சர்கள் வருகின்றன என்பதை இப்போது பார்ப்போம்.

ஐக்யூ இசட்9 அம்சங்கள் (iQOO Z9 Specifications): இந்த ஐக்யூவில் ஓஐஎஸ் (OIS) மற்றும் ஈஐஎஸ் (EIS) டெக்னாலஜி கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) வருகிறது. 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா கொண்டிருக்கிறது. மெயின் கேமராவில் சோனிஐஎம்எக்ஸ்882 (Sony IMX882) சென்சார் உள்ளது.

அதேபோல 4K வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் உள்ளது. 16 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. இந்த கேமராவில் 1080p வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் உள்ளது. நைட் மோட் (Night Mode), போர்ட்ராய்டு மோட் (Portrait Mode), சூப்பர்மூன் மோட் (Supermoon), டூயல்-வியூ (Dual-View) போன்ற கேமரா பீச்சர்கள் வருகின்றன.

பட்ஜெட்ல OIS கேமரா.. SONY சென்சார்.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?

ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7200 4என்எம் சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல், ஃபன்டச் ஓஎஸ் 14 (Funtouch OS 14) வருகிறது. 2 வருட ஓஎஸ் அப்டேட் கொண்டிருக்கிறது. 8 ஜிபி ரேம் + 8 ஜிபி டைனாமிக் ரேம் (Dyanamic RAM) சப்போர்ட் கொண்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல், 2 டிபிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு (microSD Card) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போனில் 5000mAh பேட்டரியானது, 44W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் உடன் வருகிறது. ஆகவே, பேட்டரி நல்ல பேக்கப் கொடுக்கும். 6.67 இன்ச் (2400 × 1080 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது.

இந்த டிஸ்பிளேவில் 1800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. அதுமட்டுமல்லாமல், 90Hz ரெஃப்ரெஷ் ரேட், 360Hz டச் சாம்பிளிங் ரேட், எச்டிஆர்10பிளஸ் (HDR10+) கொண்டிருக்கிறது. டிடி ஸ்டார்2 கிளாஸ் (DT Star2 Glass) பாதுகாப்பு கொண்டுள்ளது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) வருகின்றன.

பாட்டமில் யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C Audio) மற்றும் யுஎஸ்பி டைப்-சி (USB Type-C) போர்ட், டூயல் சிம் சிலாட் (Dual SIM Slot), எஸ்டி கார்டு சிலாட் (SD Card Slot) வருகிறது. IP54 தர டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் கொண்டுள்ளது. கிராபீன் ப்ளூ (Graphene Blue) மற்றும் பிரஷ்டு கிரீன் (Brushed Green) ஆகிய 2 கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
20 Percent Discount on iQOO Z9 5G With 50MP Camera in Amazon Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X