நாடே திரும்பும் ஆஃபர்.. வெறும் ரூ.12,749 போதும்.. 16GB ரேம், 1TB மெமரி.. 6000mAh பேட்டரி.. எந்த போன்?
வெறும் ரூ.12,749 விலைக்கு ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ், 16 ஜிபி ரேம், 1 டிபி மெமரி சப்போர்ட், 18W ஃபாஸ்ட் சார்ஜிங், 6000mAh பேட்டரி என்று பிரம்மாண்ட அம்சங்களை கொடுக்கும் இன்பினிக்ஸ் ஹாட் 30 5ஜி போனின் விற்பனை அனல் பறக்கிறது.
இந்த போனின் மற்ற அம்சங்களும் பின்னிப் பெடல் எடுக்கிறது. அதோடு 50 எம்பி மெயின், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட ஃபுல் எச்டிபிளஸ் டிஸ்பிளேவில் மிரட்டுகிறது. இந்த போனுக்கு பிளிப்கார்ட்டில் எவ்வளவு தள்ளுபடி கிடைக்கிறது? அதன் முழு அம்சங்கள் என்ன? உள்ளிட்ட முழு விவரம் இதோ.

இன்பினிக்ஸ் ஹாட் 30 5ஜி அம்சங்கள் (Infinix Hot 30 5G Specifications): இந்த இன்பினிக்ஸ் போன் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.78 இன்ச் (2460 × 1080 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் எல்சிடி (LCD) டிஸ்பிளே கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேவில் 240Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 580 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) மற்றும் எக்ஸ்ஓஎஸ் 13 (XOS 13) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6020 7என்எம் (Octa Core MediaTek Dimensity 6020 7nm) சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு மாலி - ஜி57 எம்சி2 ஜிபியு (Mali-G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது.
இந்த இன்பினிக்ஸ் போன், 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்னும் டூயர் ரியர் செட்டப் கொண்டுள்ளது. அதோடு டூயல் எல்இடி ஃப்ளாஷ் லைட்ஸ் வருகின்றன. 8 எம்பி செல்பீ கேமரா இருக்கிறது. இந்த போனில் பிரம்மாண்ட அம்சமாக 18W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்ட 6000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த பேட்டரி தொடர்ந்து 2 நாட்கள் பேக்கப் கொடுக்கும். இதற்கு டைப் - சி சார்ஜிங் போர்ட் வருகிறது. 8 ஜிபி ரேம் + 8 ஜிபி விர்ச்சுவல் ரேம் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் மொத்தமாக 16 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வருகிறது. அதோடு 1 டிபி வரை எக்ஸ்பேண்டபுள் ஸ்டோரேஜ் மற்றும் மைக்ரோஎஸ்டி (MicroSD) கார்டு சப்போர்ட் உள்ளது.
IP53 தர ப்ளாஷ் மற்றும் வாட்டர் ரெஜிஸ்டண்ட் வருகிறது. மேலும், சைடு மவுண்டென்ட் பிங்கர்பிரிண்ட் சென்சார், டூயல் நானோ சிம் மற்றும் எஸ்டி கார்டு போர்ட், 3.5 எம்எம் ஆடியோ ஜேக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், 5.2 ப்ளூடூத், என்எப்சி பேமெண்ட் உள்ளிட்ட பெரும்பாலான அம்சங்கள் வருகின்றன.
இவ்வளவு மிட்-ரேஞ்ச் அம்சங்கள் கொண்ட இந்த போனின் விலை மிகவும் மலிவாகவே நிர்ணயிக்கப்பட்டது. இதன் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.15,000 பட்ஜெட்டை விட குறைவாகவே இருந்தது. கடந்த ஜூலை 18ஆம் தேதி பிளிப்கார்ட்டில் விற்பனைக்கு வந்த போது வெறும் ரூ.13,499க்கு அறிமுக சலுகையில் விற்பனை செய்யப்பட்டது.
அதன்பின் ரூ.16,999ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இப்போது, மீண்டும் பிளிப்கார்ட் அதிரடி தள்ளுபடியை அறிவித்துள்ளது. இப்போது, இந்த போனுக்கு 20 சதவீதம் தள்ளுபடி கிடைக்கிறது. அதாவது, ரூ.16,999 மதிப்புள்ள போனுக்கு ரூ.3,500 தள்ளுபடி வருகிறது. அதுமட்டுமல்லாமல், ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.750 உடனடி தள்ளுபடியும் கிடைக்கிறது. இதன் மூலம் ரூ.12,749 விலைக்கு இந்த போனை வாங்கிக்கொள்ள முடியும்.
மேலும், ரூ.12,750 வரை எக்ஸ்சேஞ்ச் ஆஃபரும் இருக்கிறது. இவ்வளவு மலிவான விலை மற்றும் தள்ளுபடி கிடைப்பதால் ஆர்டர் குவிந்து வருகின்றன. மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








