Home
Mobile

ஆர்டர் பிச்சிக்க போகுது.. ரூ.20000 கூட கிடையாது.. ஆனால், 16GB ரேம்.. 1TB மெமரி.. 108MP கேமரா.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனையில் (Flipkart Big Billion Days Sale) 16ஜிபி ரேம், 108எம்பி கேமரா போன்ற பிரம்மாண்ட அம்சங்களை கொண்ட இன்பினிக்ஸ் ஜிடி 10 ப்ரோ (Infinix GT 10 Pro) போனுக்கு மிரட்டலான டிஸ்கவுண்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்பினிக்ஸ் ஜிடி 10 ப்ரோ அம்சங்கள் (Infinix GT 10 Pro Specifications): இந்த போனில் 6.67 இன்ச் ஃபுல்எச்டி பிளஸ் அமோலெட் டிஸ்பிளே வருகிறது. அதில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 360Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 1920Hz டிம்மிங் ஃபிரிகொன்சி கொடுக்கப்பட்டுள்ளது.

ரூ.20000 கூட கிடையாது.. 16GB ரேம்.. 108MP கேமரா.. எந்த போன்?

அதோடு 900 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் டிசிஐ - பி3 வைடு கலர் காமட் சப்போர்ட் வருகிறது. ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் மற்றும் எக்ஸ்ஓஎஸ் 13 (XOS 13) கொண்டிருக்கிறது. அதோடு மீடியாடெக் டைமன்சிட்டி 8050 (MediaTek Dimensity 8050) சிப்செட் மற்றும் ஆர்ம் - மாலி ஜி77 எம்சி9 கிராபிக்ஸ் கார்டு வருகிறது.

இந்த போனில் பிரம்மாண்ட ரியர் கேமரா செட்டப் வருகிறது. ஆகவே, 108 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. 32 எம்பி செல்பீ கேமரா இருக்கிறது. இந்த மாடலில் 8 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி விர்ச்சுவல் ரேம் சப்போர்ட் உள்ளது.

அந்த வகையில், 16 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு வருகிறது. அதோடு 1 டிபிக்கான மைக்ரோ எஸ்டிகார்டு சப்போர்ட் கொண்டிருக்கிறது. 45W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. இந்த இன்பினிக்ஸ் ஜிடி மாடலில் சைபர்பங்க் (Cyberpunk) டிசைன் பேக் பேனல் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு ஆர்க் இன்டர்பேஸ் எல்இடி இடம்பெற்றுள்ளது.

அதேபோல ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), டிடிஎஸ் (DTS), ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio), 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (3.5mm Audio Jack) இன்-டிஸ்பிளே பிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போன் 187 கிராம் எடைக் கொண்டுள்ளது.

IP53 தர டஸ்ட் மற்றும் ப்ளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust and Splash Reistant) கொடுக்கப்பட்டுள்ளது. இதன் கனெக்டிவிட்டி அம்சங்களை பொறுத்தவரை, ப்ளூடூத் 5.2 (Bluetooth 5.2), வை-பை 6 (Wi-Fi 6), என்எஃப்சி (NFC), எஃப்எம் ரோடியோ (FM Radio) மற்றும் ஜிபிஎஸ் (GPS) போன்ற பல்வேறு அம்சங்கள் இருக்கின்றன. அதோடு யுஎஸ்பி டைப்-சி (USB Type-C) சார்ஜிங் போர்ட் வருகிறது.

இந்த ஜிடி ப்ரோ போனில் சைபர் பிளாக் (Cyber Black) மற்றும் மிராஜ் சில்வர் (Mirage Silver) ஆகிய 2 கலர்களில் விற்பனைக்கு கிடைக்கின்றன. இந்த போனின் விலை ரூ.19,999ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் விற்பனைக்கு வந்து மிகப்பெரும் வரவேற்பினை பெற்றது.

இப்போது, பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனையில் டிஸ்கவுண்ட் போக வெறும் ரூ.18,999க்கு விற்பனைக்கு வந்து, இன்பினிக்ஸ் பிரியர்களை அறக்க பறக்க செய்துள்ளது. இந்த டிஸ்கவுண்ட்டை ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டை பயன்படுத்தி பெற்றுக் கொள்ளலாம். அதோடு ரூ.11,600 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் போனஸ் வழங்கப்படுகிறது.

ரூ.20,000 பட்ஜெட்டை விட கம்மியான விலையில், 16 ஜிபி ரேம், 108 எம்பி கேமரா, ஆர்க் இன்டர்பேஸ் எல்இடி பேனல், 45W ஃபாஸ்ட் சார்ஜிங் போன்ற பெரும்பாலான பிரிமீயம் அம்சங்கள் வேண்டும் என்றால், இந்த இன்பினிக்ஸ் ஜிடி 10 ப்ரோ போனை தேர்வு செய்து கொள்ளலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
20 Percent Discount on Infinix GT 10 Pro in Flipkart Big Billion Days Sale Price Specification, Offer
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X