ஆர்டர் பொளக்குது.. ரூ.30000 பட்ஜெட்ல Pixel போன்.. SONY கேமரா.. OLED டிஸ்பிளே.. 4385mAh பேட்டரி.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் மெகா ஜூன் போன்சா விற்பனையில் (Flipkart Mega June Bonanza Sale) ஓஎல்இடி டிஸ்பிளே, சோனி சென்சார் கேமரா, IP67 வாட்டர் ரெசிஸ்டன்ட், வயர்லெஸ் சார்ஜிங், 4385mAh பேட்டரி போன்ற பிரிமீயம் பீச்சர்களை கொண்ட கூகுள் பிக்சல் 7ஏ (Google Pixel 7a) நம்ப முடியாத டிஸ்கவுண்ட்டில் கிடைக்கிறது. ரூ.43,999 பட்ஜெட்டில் அறிமுகமான இந்த பிக்சல் மாடலை இப்போது, ரூ.30,000 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம். இந்த போனின் பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்கள் இதோ.
கூகுள் பிக்சல் 7ஏ அம்சங்கள் (Google Pixel 7a Specifications): இந்த பிக்சலில் 6.1 இன்ச் (2400 x 1080 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு 90Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட ஓஎல்இடி எச்டிஆர் (OLED HDR) டிஸ்பிளே மாடலாகும். இந்த டிஸ்பிளேவுக்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 (Corning Gorilla Glass 3) புரொடெக்சன் வருகிறது.

ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) கொண்ட கூகுள் டென்சர் ஜி2 (Google Tensor G2) சிப்செட் மற்றும் டைட்டன் எம்2 (Titan M2) செக்யூரிட்டி சிப் வருகிறது. இந்த பிக்சல் போனில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு கிடைக்கிறது. ஈசிம் மற்றும் நானோ சிம் சப்போர்ட் கொண்டிருக்கிறது.
கேமராவில் பட்டையை கிளப்பும் சென்சார் மற்றும் டெக்னாலஜி வருகிறது. சோனி ஐஎம்எக்ஸ்87 (Sony IMX787) சென்சாருடன் 64 எம்பி மெயின் கேமரா வருகிறது. இந்த கேமராவில் குவாட் பிடி (Quad PD) மற்றும் குவாட் பேயர் (Quad Bayer) டெக்னாலஜி வருகிறது. ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் சப்போர்ட் வருகிறது.
மேலும், பிடிஏஎப் (PDAF) மற்றும் 4K வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் வருகிறது. 13 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா வருகிறது. அல்ட்ரா வைடு லென்ஸ் மற்றும் 4K வீடியோ ரெக்கார்டிங் கொண்ட 13 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. இந்த பிக்சல் போனில் IP67 வாட்டர் & டஸ்ட் ரெசிஸ்டன்ட் கொண்டிருக்கிறது.
இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor), யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C Audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) மற்றும் 2 மைக்ரோபோன்கள் (Microphones) வருகின்றன. இந்த கூகுள் பிக்சல் 7ஏ போனில் 18W வயர்டு சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 4385mAh பேட்டரி வருகிறது.
இந்த பேட்டரிக்கு வயர்லெஸ் சார்ஜிங் (Wireless Charging) சப்போர்ட் வருகிறது. 9 எம்எம் தடிமன் மற்றும் 193.5 கிராம் எடை கொண்டிருக்கிறது. சார்கோல் கிரே, கோரல் ஆரஞ்ச், சீ ப்ளூ மற்றும் ஸ்னோவ் ஒயிட் ஆகிய 4 கலர்களில் கிடைக்கிறது. இந்த பிக்சலின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மாடலானது, அறிமுகம் செய்யப்பட்டபோது, ரூ.43,999ஆக விலை இருந்தது.
ஆனால், இப்போது பிளிப்கார்ட்டில் வெறும் ரூ.34,999 பட்ஜெட்டில் கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டிலும் கோரல் மாடலுக்கு ரூ.4000 உடனடி டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, இந்த கூகுள் பிக்சல் 7ஏ போனை ரூ.30,999 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம். ஐசிஐசிஐ கிரெடிட் கார்டுக்கு இந்த தள்ளுபடி கிடைக்கிறது.
ஆகவே, சோனி கேமரா, ஓஎல்இடி டிஸ்பிளே, வயர்லெஸ் சார்ஜிங், 4385mAh பேட்டரி போன்ற பிரீமியம் பீச்சர்களை கொண்ட கூகுள் பிக்சல் 7ஏ போனை வெறும் ரூ.30000 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம். கூகுள் பிக்சல் மாடல்களை நம்ப முடியாத தள்ளுபடியில் வாங்கி நினைப்பவர்களுக்கு இந்த விற்பனை நல்ல ஆப்ஷனாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








