Home
Mobile

புதிய டியூவல் சிம் போன்: விரைவி்ல அறிமுகப்படுத்துகிறது கார்பன்

By Super
புதிய டியூவல் சிம் போன்: விரைவி்ல அறிமுகப்படுத்துகிறது கார்பன்
இந்திய சந்தைக்குப் புதிதாக அறிமுகமாக உள்ளது கார்பன் கே-33 மொபைல். இந்த மாடல் டியூவல் சிம் பொருத்தும் வசதி கொண்டதாக உள்ளது. வாடிக்கையாளர்களுக்கு இந்த வசதி ஒன்றும் புதில்ல, என்றாலும் இந்த டியூவல் ஹேண்செட் புதிதாக ஸ்லைடர் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதற்கு மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் தோற்றம் மட்டும் அல்ல இதன் வசதிகளும் நிச்சயம் அனைவரையும் கவரும் வகையில் இருக்கும் என்று நம்பப்படுகிறது.

வெள்ளை நிறத்தோற்றமும், கறுப்பு நிற கீப்பேடும் கொண்டு இரட்டை வண்ணத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது இந்த மொபைல். 2.4 இஞ்ச் திரை அம்சம் கொண்டது. டிஎஃப்டி திரை ரிசல்யூஷன் வசதி கொண்டுள்ளது. அதோடு நுட்பமான டபில்யூவிஜிஏ டிஎஃப்டி திரையும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த மொபைல் மாடல் சோனி எரிக்ஸன் வாக்மேன் ஹேண்செட்டை கொஞ்சம் நினைவூட்டும் வகையில் உள்ளது. இதில் அக்சப்ட் மற்றும் ரிஜக்ட் பட்டன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. 2மெகா பிக்ஸல் கேமரா இதல் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கே-33 ஒரு தனித்துவம் கொண்ட மொபைலாக தெரிகிறது.

இதன் க்ளேரிட்டிக்குப் பஞ்சமே இல்லை. டிஜிட்டல் சூம் வசதியினால் தூரத்தில் உள்ள எந்த ஒரு விஷயத்ததையும் பக்கத்தில் பார்க்க முடியும். தெளிவான வீடியோ ரிக்கார்டிங் வசதியும் இதில் உள்ளது. 3.5 மிமீ ஆடியோ ஜேக் வசதி வழங்கப்பட்டுள்ளது. 8 ஜிபி மெமரி கார்ட் கொண்டது. 1,000 எம்ஏஎச் எல்ஐ-இயான் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

இந்த பேட்டரியினால் 4 மணி நேரம் டாக் டைம் வசதியும், 300 மணி நேரம் ஸ்டான் பை டைமும் கொடுக்க முடியும். தகவல்களைப் பரிமாரிக் கொள்ள புளூடூத் வசதி மற்றும் கணினியில் உள்ள விஷயங்களை மொபைலுக்கு மாற்றிக் கொள்ள யூஎஸ்பி வசதியும் உள்ளது. நெட்வர்க் வசதிக்கும் இது சப்போர்ட் செய்கிறது.

இந்த மாதத்தின் கடைசியில் கார்பன் கே-33 ஹேண்செட்டை வெளியிடுவதாக உள்ளது கார்பன் நிறுவனம். இந்திய சந்தையில் கார்பன் கே-33 மொபைலின் விலை ரூ.4,000 வரை இருக்கும் என்று தெரிகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X