Home
Mobile

புதிதாக 4 டச் ஸ்கிரீன் மொபைல்களை களமிறக்கியது கார்பன்

By Super
புதிதாக 4 டச் ஸ்கிரீன் மொபைல்களை களமிறக்கியது கார்பன்

புதுசு புதுசா, தினுசு தினுசா மொபைல்களைக் கொடுத்து மக்களின் பேராதரவை பெற்ற கார்பன் மொபைல் நிறுவனம் பண்டிகை காலத்தையொட்டி 4 புதிய ஸ்மார்ட்போன்களை அதிரடியாக களமிறக்கியுள்ளது கார்பன்.

கார்பன் நிறுவனம் கே-1616, கே-1818, கே-1515 மற்றும் கே-1010 என்ற பெயரில் இந்த 4 மொபைல்களையும் அந்த நிறுவனம் மார்க்கெட்டிற்கு அறிமுகம் செய்துள்ளது.

அதுவும் இந்த நான்கு மொபைல்களும் தொடுதிரை வசதி கொண்ட மொபைல்களாகும். இதனால், டைப் செய்வது எளிது என்பதுடன் நேரமும் வெகுவாக மிச்சமாகும்.

கே-1616 என்ற மாடல் மற்ற மூன்று மாடல்களைக் காட்டிலும் சற்று விலை அதிகம். இது 3.5 இஞ்ச் திரையுடன், 480 X 320 துல்லியத்தைக் கொண்டது.

அட! என்று அனைவரையும் அசர வைக்கும் 3டி இன்டர்ஃபேஸ் தொழில் நுட்பமும் கே-1616 மொலில் உள்ளது.

இதில் உள்ள ஜி-சென்ஸார் வசதி திரையை வெர்டிகலாகவும், ஹரிசான்டலாகவும் மாற்ற உதவும். அது மட்டும் அல்லாது ஆக்சிலரோமீட்டர் மற்றும் பிராக்ஸிமிட்டி சென்ஸார் வசதியும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த கே-1616 மொபைலில் புதிதாக கேஸோன் என்ற ஒரு அப்ளிகேஷன் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த அப்ளிக்கேஷன் உங்களுக்கு விருப்பமான அப்ளிக்கேஷன்களை டவுன்லோட் செய்து கொள்ள உதவும்.

அனைவரும் ஆர்வத்துடன் எதிர் பார்க்கின்ற கேமரா வசதியினைப் பற்றி சொல்லாமல் இருக்க முடியுமா? கே-1616 மொபைல் 3.2 மெகா பிக்ஸல் கேமராவைக் கொண்டுள்ளது. இதனால் நினைத்த காட்சிகளை புகைப்படமாகவும், வீடியோவாகவும் எடுத்து குவிக்க முடியும்.

அப்படி எடுத்துக் குவிக்கின்ற புகைப்படத்தையும், வீடியோவையும் உங்கள் நண்பர்களுக்கு அனுப்பி மகிழவும் முடியும். இதில் ஜிபிஆர்எஸ் மற்றும் எட்ஜ் தொழில் நுட்பம் கொடுக்கப்பட்டுள்ளது.

அடுத்ததாக தொடுதிரை வசதி கொண்ட கே-1818 மொபைல். இதுவும் கே-1616 மொபைல் போன்ற வசதிகள் கொண்டதுதான், ஆனால் திரையின் அளவு மட்டும் தான் ஒரே ஒரு வித்தியாசம்.

இது டபிள்யூகியூவிஜிஏ திரை கொண்டது. அதோடு 430 X 240 துல்லியத்தையும் கொடுக்கிறது. இதன் மெமரி வசதியை 8ஜிபி வரை வேண்டுமானாலும் விரிவுபடுத்திக் கொள்ளலாம்.

கே-1818 2 மெகா பிக்ஸல் கேமராவைக் கொண்டதாக இருக்கிறது. இந்த டச் ஸ்கிரீன் மொபைல்கள் நிச்சயம் மற்ற மொபைல்களைக் காட்டிலும் சற்று கூடுதல் வித்தியாசம் கொண்டதாகத்தான் இருக்கும். இந்த மொபைல் மல்டி லேன்ங்குவேஜ் வசதிக்கு சப்போர்ட் செய்கிறது.

அதே கே-1818 மொபைலிலும் 8ஜிபி மெமரி மற்றும் மல்டி லேன்குவேஜ் தொழில் நுட்பம் கொண்டதாகத் இருக்கிறது. இது எப்எம் ரேடியோ வசதியையும் கொண்டுள்ளது.

கே-1010 மொபைல் மற்ற மூன்று போன்களையும் விட விலை குறைவாக உள்ளது. ஆனால் விலை குறைவு என்பதற்காக வசதியும் குறைவு என்று கூறிவிட முடியாது.

இந்த மொபைலும் 8ஜிபி வரை மெமரி வசதிக்கு சப்போர்ட் செய்கிறது. 2.8 இஞ்ச் திரை வசதியை கொண்டது. 1.3 மெகா பிக்ஸல் கேமரா இதில் கொடுக்கப்பட்டுள்ளது. ஜிபிஆர்எஸ் தொழில் நுட்பத்தையும் வழங்குகிறது. ஆனால் இதில் கேஸோன் அப்ளிக்கேஷன் வசதி இல்லை.

கார்பன் கே-1616 மொபைல் ரூ.4,600 ஒட்டிய விலையிலும், கே-1818 மொபைல் ரூ.3,700 விலையிலும், கே-1515 மொபைல் ரூ.3,800 ஒட்டிய விலையிலும், கே-1010 போன் ரூ.3,000 என்ற குறைந்த விலையிலும் இந்திய சந்தையில் கிடைக்கின்றது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X