Home
Mobile

அதே Snapdragon 8s Gen 4 சிப்.. ஆனால் Nothing Phone 3-ன் பாதி விலைக்கு கிடைக்கும் 2 போன்கள்!

பெரும்பாலான இந்தியர்களால் நத்திங் போன் 3 (Nothing Phone 3) ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயத்தை ஜீரணித்து கொள்ளவே முடியவில்லை என்றே கூறவேண்டும். ரூ.60,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் வந்திருந்தாலே "பாதி பேர் ஜகா வாங்கி இருப்பார்கள்" என்கிற சூழ்நிலையில், இது ரூ.80,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் அறிமுகமாகி அனைவரையும் "ஆஃப்" செய்துள்ளது!

நத்திங் போன் 2 (Nothing Phone 2) அறிமுகம் செய்யப்பட்டு கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு வருவதால் இந்த போனுக்கான எதிர்பார்ப்புகள் மிகவும் அதிகமாக இருந்தன. ஆனால் நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.79,999 என்று அறிந்ததும் - காத்திருந்த அனைவரும், எதிர்பார்த்த அனைவரும் அதிருப்தி அடைந்தனர்!

அதே Snapdragon 8s Gen 4 சிப்.. ஆனால் Nothing Phone 3-ன் பாதி விலை!

இத்தனைக்கும் நத்திங் நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனை தனது பிராண்டின் முதல் ஃபிளாக்ஷிப் ஸ்மாட்போன் என்கிறது. ஆனால் இந்த ஸ்மார்ட்போன் பிளாக்ஷிப் தரத்தில் இல்லாத ஒரு சிப்செட் உடன் அனுப்பப்படுகிறது. அது ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 4 சிப்செட் (Snapdragon 8s Gen 4 chipset) ஆகும்

கசப்பான உண்மை என்னவென்றால் இதே சிப்செட் கொண்ட சில ஸ்மார்ட்போன்கள் நத்திங் போன் 3 மாடலை விட பல ஆயிரம் ரூபாய் குறைவான விலையில் வாங்க கிடைகின்றன. ஒருவேளை ​​நீங்கள் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 4 சிப்செட் கொண்ட ஸ்மார்ட்போனை தேடுகிறீர்கள், ஆனால் ரூ.80,000 செலவழிக்க விரும்பவில்லையா?

ஆம் என்றால் கவலையை விடுங்கள்.. நீங்கள் சரியான இடத்திற்கு தான் வந்துள்ளீர்கள். நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனில் உள்ள அதே ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 4 சிப்செட் உடன் வரும் ஆனால் நத்திங் போன் 3 மாடலை விட மிகமிக குறைவான விலையில் (பாதிக்கு பாதி விலையை விட குறைவான விலையில்) வாங்க கிடைக்கும் 2 ஸ்மார்ட்போன்களின் பட்டியல் இதோ:

1. போக்கோ எப்7 (Poco F7): கடந்த மாதம் ஜூன் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.31,999 ஆகும். இது 12 ஜிபி ரேம் மற்றும் யுஎஃப்எஸ் 4.1 ஸ்டோரேஜ் உடன் உடன் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜெனரல் 4 சிப்செட் இணைக்கப்பட்டுள்ளது.

அதே Snapdragon 8s Gen 4 சிப்.. ஆனால் Nothing Phone 3-ன் பாதி விலை!

போக்கோ எப்7 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.83-இன்ச் FHD+ (1280 x 2772 பிக்சல்ஸ்) AMOLED டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போனில் 6,000mm sq வேப்பர் கூலிங் சேம்பர் பொருத்தப்பட்டுள்ளது.
- இது ஷாவ்மீ (Xiaomi) நிறுவனத்தின் ஹைப்பர்ஓஎஸ் 2.0 (HyperOS 2.0) கொண்டு இயங்குகிறது.

- இது 50-மெகாபிக்சல் சோனி IMX882 சென்சார் டூயல் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது
- இது 20-மெகாபிக்சல் செல்பீ ஸ்னாப்பரை கொண்டுள்ளது
- இது தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP66 + IP68 + IP69 ரேட்டிங்களை பெற்றுள்ளது
- இந்திய வேரியண்டில் 7,550mAh பேட்டரி உள்ளது; க்ளோபல் வேரியண்டில் 6,500mAh பேட்டரி உள்ளது.

2. ஐக்யூ நியோ 10 (iQOO Neo 10): இதுவும் சமீபத்தில் தான் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. பேஸிக் 8ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலை ரூ.31,999 ஆகும். நீங்கள் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஆப்ஷனை கூட தேர்வு செய்யலாம், இது ரூ.35,999 க்கு வாங்க கிடைக்கிறது.

ஒருவேளை நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனின் அதே விலையில் வேறு ஆல்டர்னேடிவ் ஸ்மார்ட்போன்களை வாங்க விரும்பினால்.. என்னென்ன ஸ்மார்ட்போன்களை கருத்தில் கொள்ளலாம்?
1. ஆப்பிள் ஐபோன் 16 (Apple iPhone 16)
2. கூகுள் பிக்சல் 9 (Google Pixel 9)
3. சாம்சங் கேலக்ஸி எஸ்25 (Samsung Galaxy S25)
4. ஒன்பிளஸ் 13 (OnePlus 13)
5. ஷாவ்மீ 15 (Xiaomi 15)

More from GizBot

Best Mobiles in India

English summary
2 Smartphones With Same Snapdragon 8s Gen 4 chipset But Half The Price of Nothing Phone 3
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X