Tim Cook எப்படி ஓகே சொன்னாரு? 2 காரணங்களை முன் வைத்து iPhone 16 டிசைனில் மாற்றம்.. கேமராவுல கை வச்ச Apple!
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் வருவதற்கு முன்பாகவே ஆப்பிளின் அடுத்த ஐபோன் மாடல்களை பற்றிய தகவல்கள் காட்டாறு போல வந்து பாயும். அதற்கு ஐபோன் 16 சீரீஸ் (iPhone 16 Series) விதிவிலக்கல்ல. 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாத வாக்கில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படும் ஐபோன் 16 சீரீஸ் மாடல்களை பற்றி அனுதினமும் ஒரு புதிய தகவல் வெளியாகி கொண்டேதான் இருக்கிறது. அந்த வரிசையில் வெளியான ஒரு லேட்டஸ்ட் தகவல் ஒட்டுமொத்த ஐபோன் ரசிகர்களையும் ஷாக் ஆக்கும்படி உள்ளது!
ஆப்பிள் நிறுவனம் வரவிருக்கும் ஐபோன் 16 சீரீஸில் குறிப்பிடத்தக்க ஒரு வடிவமைப்பு மாற்றத்தை கொண்டுவரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த மாற்றம் ஐபோன் 16 சீரீஸின் கேமரா செட்டப்பில் நிகழ்த்தப்படவுள்ளது. கிடைக்கப்பெற்ற தகவலின்படி, ஆப்பிள் நிறுவனம் அதன் வழக்கமான மூலைவிட்ட கேமரா அமைப்பை (Diagonal Camera Setup) தவிர்த்துவிட்டு செங்குத்தான கேமரா அமைப்பை (Vertical Camera Layout) மீண்டும் கொண்டுவரவுள்ளது.

அதாவது ஐபோன் எக்ஸ் (iPhone X) மற்றும் ஐபோன் 11 (iPhone 11) மாடல்களில் நாம் பார்த்ததை போன்ற வெர்டிகல் கேமரா செட்டப்பை ஆப்பிள் நிறுவனம் மீண்டும் கொண்டு வரவுள்ளது. இது சாத்தியமாகும் பட்சத்தில் கடந்த சில ஆண்டுகளில் ஐபோனிற்கு கிடைத்த மிக முக்கியமான வடிவமைப்பு மாற்றங்களில் இதுவும் ஒன்றாக இருக்கும்.
மேலும் இந்த வடிவமைப்பு மாற்றமானது வெறுமே அழகியலுக்கான ஒரு வேலைப்பாடாக மட்டுமே இருக்காது. ஆப்பிள் நிறுவனம் அதன் ஐபோன் 16-ல் இந்த மாற்றத்தை கொண்டுவர 2 முக்கியமான "செயல்பாட்டு" காரணங்களும் உள்ளன. முதல் காரணம் - ஸ்பேஷியல் வீடியோ பதிவு (Spatial Video Record)
ஐபோன் 15 ப்ரோ மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் ஆகிய 2 மாடல்களும் ஸ்பேஷியல் வீடியோவை பதிவு செய்யும் திறனை கொண்டுள்ளன, இது ஆப்பிள் விஷன் ப்ரோ போன்ற இணக்கமான ஹெட்செட்களில் ஆழமான தகவல்களை படம்பிடிக்கும் ஒரு வடிவமைப்பாகும். இந்த அம்சத்திற்கு செங்குத்தாக வடிவமைக்கப்பட்ட கேமராக்கள் தேவை.
ஐபோன் 15 சீரீஸின் ப்ரோ மாடல்கள் ஆனது ட்ரிபிள்-கேமரா செட்டப்பை கொண்டுள்ளன. ஆனால் ஐபோன் 15 மற்றும் ஐபோன் 15 பிளஸ் மாடல்களில் அவ்வாறு இல்லை. எனவே அடுத்துவரும் பேஸிக் ஐபோன் 16 மற்றும் ஐபோன் 16 பிளஸ் மாடல்களில் செங்குத்தான கேமரா செட்டப்பை கொண்டு வருவதன் மூலம், ஆப்பிள் நிறுவனம் அதன் ஸ்பேஷியல் வீடியோ ரெக்கார்டிங் அம்சத்தின் கிடைக்கும் தன்மையை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது போல் தெரிகிறது.
ஸ்பேஷியல் வீடியோவை தவிர, செங்குத்தான கேமரா செட்டப் ஆனது மற்ற சில சாத்தியமான நன்மைகளையும் வழங்குகிறது. இந்த வடிவமைப்பு பெரிய சென்சார்களை பேக் செய்ய அனுமதிக்கும், மேம்படுத்தப்பட்ட லோ-லைட் செயல்திறன் மற்றும் ஷார்ப் ஆன படங்களை செயல்படுத்தும். கூடுதலாக, இது எக்ஸ்ட்ரா கேமரா மாட்யூல்களுக்கான இடத்தையும் வழங்கக்கூடும். இதன் மூலம் வருங்காலத்தில் வரும் நான்-ப்ரோ மாடல்களில் பெரிய அளவிலா கேமரா மேம்படுத்தல்களை கொண்டுவர முடியும்.
இதெல்லாம் ஒருபக்கம் இருக்க, ஆப்பிள் நிறுவனம் இன்னமும் அதன் ஐபோன் 16 சீரீஸ் மாடல்களின் இறுதி வடிவமைப்பு உறுதிப்படுத்தவில்லை. லீக் ஆன ரெண்டர்கள் (புகைப்படங்கள்) வழியாகவே ஐபோன் 16 மற்றும் ஐபோன் 16 பிளஸ் மாடல்களில் செங்குத்தான கேமரா செட்டப் இடம்பெறும் என்பதை அறிந்துகொள்ள முடிகிறது. அதாவது இது அதிகாரபூர்வமான தகவல் இல்லை; இது சாத்தியமாகாமல் போவதற்கான வாய்ப்புகளும் உள்ளன.
புதிய கேமரா செட்டப்பை தவிர, ஆப்பிள் நிறுவனம் அதன் ஐபோன் 16 மாடலில் இன்னுமொரு குறிப்பிடத்தக்க மாற்றத்தையும் கொண்டுவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஐபோன் 16 சீரீஸில் புதிய கேப்சர் பட்டன் இருக்கும் என்றும், அது போனின் வலது பக்கத்தில் ஒரு டச்-சென்சிட்டிவ் பட்டனாக செயல்படும் என்றும் கூறப்படுகிறது. இது ஜூமிங், போகஸ் மற்றும் கிளிக் போன்ற செயல்பாடுகளை எளிமையாக்கி புகைப்படம் எடுக்கும் அனுபவத்தை மேம்படுத்தும் ஒரு அம்சமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications








