Home
Mobile

அதாங்க ஒன்னும் புரியல.. ஒரே அம்சங்களுடன்.. வெவ்வேறு விலை மற்றும் பெயரில்.. 2 Realme போன்கள் அறிமுகம்!

ரியல்மி நிறுவனம் 2 புதிய என்ட்ரி-லெவல் ஸ்மார்ட்போன்களை சீன சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. அது ரியல்மி வி60 மற்றும் ரியல்மி வி60எஸ் ஸ்மார்ட்போன்கள் ஆகும். ரியல்மியின் வி-சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது இல்லை என்றாலும் கூட, இவைகள் வேறு பெயரின்கீழ் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட வாய்ப்புள்ளது. அவ்வளவு ஏன் இதே வி-சீரீஸ் இந்தியாவிற்கு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏனென்றால் சமீபத்தில் தான் ஷாவ்மீ நிறுவனம் அதன் சைனீஸ் ஸ்பெஷல் ஸ்மார்ட்போன் சீரீஸ் ஆன சிவி-சீரீஸ் ஸ்மார்ட்போனை (ஷாவ்மீ 14 சிவி) இந்தியாவில் அறிமுகம் செய்தது.

ஆகையால் சீனாவில் அறிமுகமாகி இருந்தாலும் கூட, ரியல்மி வி60 (Realme V60) மற்றும் ரியல்மி வி60எஸ் (Realme V60s) ஸ்மார்ட்போன்கள் மீது ஒரு கண் வைத்துக்கொள்வது நல்லது. ஆனால் இவ்விரு ஸ்மார்ட்போன்களுக்கும் இடையே உள்ள குழப்பம் என்னவென்றால்.. இரண்டு வெவ்வேறு ஸ்மார்ட்போன்களாக இருந்தாலும் கூட.. வெவ்வேறு விலையில் வாங்க கிடைத்தாலும் கூட.. இரண்டுமே "ஒரே மாதிரியான" அம்சங்களைத்தான் கொண்டுள்ளன.

ஒரே அம்சங்களுடன்.. வெவ்வேறு பெயரில் 2 Realme போன்கள்!

ரியல்மி வி60 மற்றும் ரியல்மி வி60எஸ் ஆகிய இரண்டுமே 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.67-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளவை கொண்டுள்ளன. மேலும் இரண்டுமே மீடியாடெக் டைமன்சிட்டி 6300 சிப்செட் (MediaTek Dimensity 6300 Chipset) மூலம் இயக்கப்படுகின்றன, இது அன்றாட பணிகளை செயல்திறனுடன் செய்யும்படி வடிவமைக்கப்பட்ட ஒரு திறமையான சிப்செட் ஆகும்.

இந்த சிப்செட் 8ஜிபி வரை ரேம் உடன் வருகிறது, இது மென்மையான மல்டி-டாஸ்கிங் மற்றும் ஆப் ஸ்விட்சிங்-ஐ உறுதி செய்கிறது. இன்டர்னல் ஸ்டோரேஜை பொறுத்தவரை, இது 128ஜிபி முதல் 256ஜிபி வரையிலான ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் வருகிறது. இது ஆப்கள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு போதுமான மெமரியை வழங்கும்.

கேமராக்களை பொறுத்தவரை, இரண்டு ஸ்மார்ட்போன்களுமே பேக் பேனலில் சிங்கிள் 32-மெகாபிக்சல் மெயின் கேமராவை கொண்டுள்ளது. செல்பீக்கள் மற்றும் வீடியோ கால்களுக்காக முன்பக்கத்தில் 8 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது. மேலும் இரண்டு ஸ்மார்ட்போன்களுமே லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் அடிப்படையிலான ரியல்மி யுஐ 5.0 உடன் வருகிறது.

பேட்டரியை பொறுத்தவரை, ரியல்மி வி60 மற்றும் ரியல்மி வி60எஸ் ஆகிய இரண்டுமே 5000mAh பேட்டரியை கொண்டுள்ளன. இந்த ஸ்மார்ட்போன்களின் பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் ஆனது 10W என்கிற வரம்பிற்குள் மூடப்பட்டுள்ளது. இது சில ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களுடன் ஒப்பிடும்போது மெதுவானதாக தோன்றலாம். ஆனால் என்ட்ரி லெவல் ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு போதுமானதாக இருக்கும்.

ரியல்மி வி60 மற்றும் ரியல்மி வி60எஸ் ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்களின் அம்சங்கள் தான் ஒரேபோல இருக்கிறது என்று நினைத்துக்கொள்ள வேண்டாம். இரண்டு ஸ்மார்ட்போன்களின் டிசைன்கள் கூட ஒரே மாதிரித்தான் இருக்கின்றன. இரண்டு ஸ்மார்ட்போன்களுமே மிகவும் எளிமையான மற்றும் ஸ்டைலான டிசைனை பெற்றுள்ளன. மேலும் இரண்டும் 2 கிளாசிக் ஆன கலர் ஆப்ஷன்ககளில் கிடைக்கின்றன: ஸ்டார் கோல்ட் மற்றும் டர்க்கைஸ்.

விலை விவரங்களை பொறுத்தவரை, ரியல்மி வி60 ஸ்மார்ட்போனின் 6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.13,800 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதே ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் சுமார் ரூ.16,100 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ரியல்மி வி60எஸ் ஸ்மார்ட்போன் ஆனது ரியல்மி வி60 மாடலில் உள்ள அதே அம்சங்களை கொண்டிருந்தாலும் கூட, இது சீனாவில் அதிக விலைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரியல்மி வி60எஸ் ஸ்மார்ட்போனின் 6ஜிபி ரேம் +128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.16,100 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதே ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் சுமார் ரூ.20,700 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
2 Realme phones launched Same specifications but different price tags and names Realme V60 Series
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X