ரீஃபண்ட் கொடுத்தது ஞாபகம் இருக்குல.. விற்பனைக்கு வந்தது OnePlus 12R-ன் ஸ்பெஷல் எடிஷன்.. நம்பி வாங்கலாமா?
வாடிக்கையாளர்களுக்கு 'ரீஃபண்ட்' கொடுக்கும் அளவிற்கு ஒன்பிளஸ் 12ஆர் ஸ்மார்ட்போனில் ஒரு "ஏமாற்று வேலை" நடந்ததை தொடர்ந்து ஒன்பிளஸ் 12ஆர் ஸ்மார்ட்போனின் ஸ்பெஷல் எடிஷன் ஆக ஒன்பிளஸ் 12ஆர் ஜென்ஷின் இம்பாக்ட் எடிஷன் (OnePlus 12R Genshin Impact Edition) இந்தியாவில் அறிமுகமானது.
தற்போது ஒன்பிளஸின் இந்த ஸ்பெஷல் எடிஷன் இன்று முதல் (மார்ச் 19 ஆம் தேதி முதல்) அதன் இந்திய விற்பனையையும் தொடங்கியுள்ளது. இந்த ஸ்மார்ட்போனை வாங்க நினைக்கும் எவருக்குமே 2 கேள்விகள் /சந்தேகங்கள் மேலோங்கும். ஒன்று - பொதுவாக ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவிற்கு வராது. ஆனால் இம்முறை வந்துள்ளது, இதை நம்பி வாங்கலாமா?

இரண்டாவது - ஒன்பிளஸ் 12ஆர் ஸ்மார்ட்போனின் 256ஜிபி வேரியண்ட்டை வாங்கிய பல பயனர்கள் குறைவான ரீட் மற்றும் ரைட் ஸ்பீட்ஸ் (Lower read and write speeds) குறித்து சந்தேகம் எழுப்பிய பிறகு அதில் யுஎப்எஸ் 4.0 அல்ல யுஎப்எஸ் 3.1 ஸ்டோரேஜ் தான் உள்ளது என்கிற உண்மை வெளிப்பட்டது; பின்னர் ரீஃபண்ட் கொடுக்கப்பட்டது. இதற்கிடையில் அதே ஸ்மார்ட்போனின் ஸ்பெஷல் எடிஷனை - நம்பி வாங்கலாமா?
ஒன்பிளஸ் 12ஆர் ஸ்டாண்டர்ட் எடிஷனில் ஏற்பட்ட சிக்கலை "பூசி மொழுகவே" இந்த ஸ்பெஷல் எடிஷன் இந்தியாவிற்கு வந்துள்ளது என்பதில் சந்தேகமே வேண்டாம். அதற்காக இந்த ஜென்ஷின் இம்பாக்ட் எடிஷனை வாங்காமல் தவிர்ப்பதில் எந்த நியாயமும் இல்லை. சற்றே வித்தியாசமான ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனை வாங்க விரும்பும் எவருமே இந்த மாடலை வாங்கலாம்!

மேலும் ஜென்ஷின் இம்பாக்ட் எடிஷனில், எந்த விதமான யுஎப்எஸ் 4.0 அல்லது யுஎப்எஸ் 3.1 ஸ்டோரேஜ் குழப்பமும் இல்லை. இது ஸ்டாண்டர்ட் எடிஷனில் உள்ள அதே கோர் அம்சங்களைத்தான் பேக் செய்கிறது. ஆக இந்த மாடலில் எந்த விதமான "ஏமாற்று வேலையும்" இல்லை. உண்மையில் ஸ்டாண்டர்ட் எடிஷனில் கூட ஒன்பிளஸ் நிறுவனம் எதையும் ஏமாற்றவில்லை. உண்மையை ஒப்புக்கொண்டது.
ஒன்பிளஸ் 12ஆர் ஜென்ஷின் இம்பாக்ட் எடிஷன் விலை மற்றும் விற்பனை விவரங்கள்: இந்த ஸ்மார்ட்போனின் 16ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.49,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது ஒன்பிளஸ் இந்தியா இணையதளம், இ-காமர்ஸ் தளமான அமேசான் இந்தியா மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்பிளஸ் எக்ஸ்பீரியன்ஸ் ஸ்டோர்களின் வழியாக இன்று (மார்ச் 19) முதல் வாங்க கிடைக்கும்.

சலுகைகளை பொறுத்தவரை, ஒன்கார்டு (OneCard) வாடிக்கையாளர்களுக்கு ரூ.1,000 தள்ளுபடி கிடைக்கும். கூடுதலாக, ஒன்பிளஸ் டிரேட்-இன் டீல்களில் ரூ.4,000 வரையிலான எக்ஸ்சேஞ்ச் போனஸும் கிடைக்கும். இதுதவிர்த்து தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளின் கீழ் 9 மாதங்கள் வரையிலான நோ-காஸ்ட் இஎம்ஐ விருப்பமும் அணுக கிடைக்கும்.
ஒன்பிளஸ் 12ஆர் ஜென்ஷின் இம்பாக்ட் எடிஷனில் என்ன ஸ்பெஷல்? இது எலக்ட்ரோ வயலட் கலர் ஆப்ஷனை பெற்றுள்ளது. வீடியோ கேம் கேரக்டர் ஆன கெக்கிங்கின் தோற்றத்தால் ஈர்க்கப்பட்ட வயலட் பேக் பேனலை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் சில்வரி ஒயிட் ஃபேதர் மோட்டிஃப்ஸ் கொண்ட ஏஜி மேட் கிளாஸ் பேக் பேனல் மற்றும் கெக்கிங்கின் சிக்னேச்சர் லைட்னிங் ஸ்டைல்ட்டோ டிசைனுடன் கூடிய எலக்ட்ரோ எலிமெண்ட் ஆகியவைகளும் இடம்பெற்றுள்ளன.
பேக் கவரின் அடிப்பகுதியில் "KEQING" என்ற டெக்ஸ்ட்டும் உட்பொதிக்கப்பட்டுள்ளது. இதேபோல், ஸ்மார்ட்போனின் மேல் விளிம்பிலும் டெக்ஸ்ட் செதுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் யூஸர் இன்டர்பேஸும் கூட மேற்குறிப்பிட்ட வீடியோ கேம் மூலம் ஈர்க்கப்பட்டுள்ளது. இது டெய்வட் உலகத்திலிருந்து ஈர்க்கப்பட்ட கஸ்டமைஸ்டு ஆப் ஐகான்கள், புதிய சார்ஜிங் அனிமேஷன் மற்றும் புதிதாக வடிவமைக்கப்பட்ட ஆல்வேஸ் ஆன் அம்சம் போன்றவைகளை கொண்டுள்ளது.
ஒன்பிளஸ் 12ஆர் ஜென்ஷின் இம்பாக்ட் எடிஷனின் முக்கிய அம்சங்கள்: இது கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் உடனான 6.78-இன்ச் 1.5கே 10-பிட் அமோஎல்இடி 120ஹெர்ட்ஸ் ப்ரோஎக்ஸ டிஆர் டிஸ்பிளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட், 100W SUPERVOOC சார்ஜிங் உடனான 5500mAh பேட்டரி, OIS உடனான 50எம்பி + 8எம்பி + 2எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா மற்றும் 16எம்பி செல்பீ கேமராவை கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications








