Home
Mobile

ஓவர் சீன் போடும் iPhone-களின் ஆட்டம் க்ளோஸ்.. ஆஃபர் விலையில் Vivo X90, Vivo X90 Pro இந்திய விற்பனை ஆரம்பம்!

"ஆயிரம் தான் இருந்தாலும் ஐபோன் கேமரா (iPhone Camera) போல வருமா?" என்கிற கூற்றுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. ஏனென்றால் விவோ எக்ஸ்90 (Vivo X90) மற்றும் விவோ எக்ஸ்90 ப்ரோவின் (Vivo X90 Pro) இந்திய விற்பனை தொடங்கி விட்டது.

ஐபோன்களின் கேமராக்களுடன் ஒப்பிடும் அளவிற்கு இந்த விவோ போன்களில் அப்படி என்ன ஸ்பெஷல்? என்பதை பற்றி பார்க்கும் முன், இந்த போன்களின் இந்திய விலை நிர்ணயம் என்ன? இவைகளின் மீது அறிவிக்கப்பட்டுள்ள சலுகைகள் என்னென்ன? எந்த வலைத்தளம் வழியாக விற்பனை செய்யப்படுகிறது? போன்ற விவரங்களை பார்த்துவிடலாம்!

ஆஃபர் விலையில் Vivo X90, Vivo X90 Pro இந்திய விற்பனை ஆரம்பம்!

விலை மற்றும் விற்பனை விவரங்கள்: விவோ எக்ஸ்90 மற்றும் விவோ எக்ஸ்90 ப்ரோ ஆகிய இரண்டுமே பிளிப்கார்ட் (Flipkart) வழியாக வாங்க கிடைக்கின்றன. அதாவது இந்த லேட்டஸ்ட் விவோ போன்களின் இந்திய விற்பனையானது பிளிப்கார்ட்டின் பிக் சேவிங் டேஸ் (Flipkart Big Saving Days) விற்பனையுடன் ஒத்துப்போகிறது.

பிளிப்கார்ட் மட்டுமின்றி விவோ இந்தியா இ-ஸ்டோர் (Vivo India e-store) மற்றும் அனைத்து பார்ட்னர் ரீடெய்ல் ஸ்டோர்களின் வழியாகவும் விற்பனை செய்யப்படும். விலை நிர்ணயத்தை பொறுத்தவரை விவோ எக்ஸ்90 ப்ரோவின் 12ஜிபி+256ஜிபி ஆப்ஷன் - வீகன் லெதர் ஃபினிஷ், லெஜண்டரி பிளாக் என்கிற 2 கலர்களில் - ரூ.84,999 க்கு வாங்க கிடைக்கும்.

மறுகையில் உள்ள விவோ எக்ஸ்90 மாடலின் 8ஜிபி + 256ஜிபி ஆப்ஷன் ரூ.59,999 க்கும், 12ஜிபி + 256ஜிபி ஆப்ஷன் ரூ.63,999 க்கும் வாங்க கிடைக்கும். இது ப்ரீஸ் ப்ளூ மற்றும் ஆஸ்டிராய்டு பிளாக் என்கிற 2 கலர் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படுகிறது.

என்னென்ன சலுகைகள் மற்றும் தள்ளுபடி கிடைக்கும்? எஸ்பிஐ (SBI), ஐசிஐசிஐ (ICICI), எச்டிஎப்சி (HDFC) மற்றும் ஐடிஎப்சி (IDFC) வங்கிகளின் கீழ் 10 சதவீதம் வரையிலான கேஷ்பேக் (Cashback) கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவோ அப்கிரேட் (Vivo upgrade) வழியாக ரூ.8000 வரையிலான எக்ஸ்சேஞ்ச் போனஸும் (Exchange Bonus) அறிவிக்கப்பட்டுள்ளது.

விவோ எக்ஸ்90 சீரீஸ் போன்களின் கேமராவில் அப்படி என்ன ஸ்பெஷல்? விவோ எக்ஸ்90 சீரீஸின் போட்டோகிராஃபி மற்றும் வீடியோகிராஃபி (Photography and videography) திறன்களை மேம்படுத்த, விவோ நிறுவனமானது ஜெர்மன் நாட்டை சேர்ந்த ஆப்டிக்ஸ் நிறுவனமான ஸெய்ஸ் (ZEISS) உடன் கூட்டு சேர்த்துள்ளது.

இந்த கூட்டணி எக்ஸ்90 ப்ரோ மாடலில் ஸெய்ஸ் 1-இன்ச் மெயின் கேமரா, தொழில்துறையின் மிகப்பெரிய ஐஎம்எக்ஸ்989 சென்சார் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) உடனான 50எம்பி மெயின் கேமரா
+ 50எம்பி போர்ட்ரெய்ட் கேமரா + 12எம்பி அல்ட்ராவைட் கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை பேக் செய்துள்ளது.

மறுகையில் உள்ள விவோ எக்ஸ்90 ஸ்மார்ட்போனானது ஐஎம்எக்ஸ்866 சென்சார் உடனான 50எம்பி விசிஎஸ் ட்ரூ கலர் மெயின் கேமரா + 12எம்பி போர்ட்ரெய்ட் கேமரா + 12எம்பி அல்ட்ரா-வைட் கேமராவை கொண்டுள்ளது. இந்த 2 மாடல்களுமே மிகக் குறைந்த வெளிச்சத்திலும் 'கிளியர்' ஆன மற்றும் 'ஹை-குவாலிட்டி' ஆன புகைப்படங்களை கைப்பற்றுகின்றன.

போதாக்குறைக்கு விவோ எக்ஸ்90 மற்றும் எக்ஸ்90 ப்ரோ ஆகிய இரண்டுமே சமீபத்தியஜெனரேஷன் ப்ரோ இமேஜிங் சிப் வி2 (Pro Imaging Chip V2) மற்றும் சக்திவாய்ந்த மீடியாடெக் டெமின்சிட்டி 9200 சிப்செட்டை (Mediatek Deminsity 9200 Chipset) கொண்டுள்ளது. இந்த இரண்டும் சேர்த்து நம்ப முடியாத லோ-லைட் வீடியோ மற்றும் லோ-லைட் போட்டோக்களை வழங்குகின்றன.

More from GizBot

Best Mobiles in India

English summary
2 of the Best Camera Phones in 2023 Vivo X90 and Vivo X90 Pro India Sale Started
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X