Home
Mobile

பிப்.25-க்கு வரை.. எந்த போனும் வாங்கிடாதீங்க.. பல போன்களுக்கு வேட்டு வைக்கும் 2 புது மாடல்கள் அறிமுகம்!

ஒன்பிளஸ் 12, ஒன்பிளஸ் 12ஆர் போன்ற பிளாக்ஷிப் / பிரீமியம் ஸ்மார்ட்போன்கள் முதல் லாவா யுவா 3, மோட்டோ ஜி24 பவர் போன்ற பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்கள் வரை.. லேட்டஸ்ட் ஆக இந்தியாவில் அறிமுகமான எல்லா ஸ்மார்ட்போன்களுமே தற்போது விற்பனைக்கு வந்துவிட்டன.

இருந்தாலும் கூட, புதிய ஸ்மார்ட்போனை வாங்கும் திட்டம் கொண்ட அனைவருமே வருகிற பிப்.25 ஆம் தேதி வரை காத்திருப்பது நல்லது. ஏனென்றால் குறிப்பிட்ட நாளில் பவர்-பேக்டு அம்சங்களை கொண்ட 2 புதிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. அதென்ன ஸ்மார்ட்போன்கள்? அவைகளின் விலை நிர்ணயம் என்ன? அவைகள் என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? இதோ விவரங்கள்:

பிப்.25-ல் பல போன்களுக்கு வேட்டு வைக்கும் 2 புது மாடல்கள் அறிமுகம்!

என்ன ஸ்மார்ட்போன்கள்? நாம் இங்கே பேசுவது ஷாவ்மீ 14 சீரீஸ் (Xiaomi 14 Series) ஸ்மார்ட்போன்களை பற்றித்தான். கடந்த அக்டோபர் 2023 இல் சீனாவில் அறிமுகமான இந்த ஸ்மார்ட்போன்கள், பிப்ரவரி 25 ஆம் தேதியன்று உலகளவில் அறிமுகம் செய்யப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது பிப்ரவரி மாத இறுதியில் (பிப்ரவரி 26 முதல் பிப்ரவரி 29 வரை) நடக்கவுள்ள மிகப்பெரிய டெக் ஈவென்ட் ஆன மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் 2024 க்கு (Mobile World Congress - MWC 2024) சற்று முன்னதாக ஷாவ்மீ 14 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் உலகளவில் அறிமுகம் செய்யப்படவுள்ள. அதே நாளில் ஷாவ்மீ 14 மற்றும் ஷாவ்மீ 14 ப்ரோ உடன் சேர்ந்து ஷாவ்மீ 14 அல்ட்ரா மாடலும் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிப்.25-ல் பல போன்களுக்கு வேட்டு வைக்கும் 2 புது மாடல்கள் அறிமுகம்!

ஷாவ்மீ 14, ஷாவ்மீ 14 ப்ரோ என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? ஷாவ்மீ 14 சீரீஸின் க்ளோபல் வேரியண்ட்கள் ஆனது சீனாவில் அறிமுகமானதை போலேவேத்தான் இருக்கும். நினைவூட்டும் வண்ணம் ஷாவ்மீ 14 ப்ரோ மாடலானது 6.73-இன்ச் 2K LTPO டிஸ்பிளேவுடன் வருகிறது.

இது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட்டை பேக் செய்கிறது. மேலும் இது 16ஜிபி வரையிலான LPDDR5X ரேம் மற்றும் 1TB வரையிலான UFS 4.0 இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. கேமராக்களை பொறுத்தவரை இதில் லைக்கா--பிராண்டட் ட்ரிபிள் ரியர் கேமரா யூனிட்டை கொண்டுள்ளது.

பிப்.25-ல் பல போன்களுக்கு வேட்டு வைக்கும் 2 புது மாடல்கள் அறிமுகம்!

இதன் கேமரா செட்டப்பில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் (Optical Image Stabilization - OIS) உடனான 50எம்பி மெயின் கேமரா + 50எம்பி டெலிஃபோட்டோ ஷூட்டர் + 50எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா உள்ளது. முன்பக்கத்தை பொறுத்தவரை ஷாவ்மீ 14 ப்ரோ மாடலில் 32எம்பி கேமரா உள்ளது. கடைசியாக 120W வயர்டு, 50W வயர்லெஸ் மற்றும் 10W வயர்லெஸ் ரிவர்ஸ் சார்ஜிங் ஆதரவுடன் 4,880mAh பேட்டரி உள்ளது.

மறுகையில் உள்ள ஷாவ்மீ 14 ஸ்மார்ட்போனை பொறுத்தவரை, இது 6.36-இன்ச் LTPO AMOLED 1.5கே (1,200x2,600 பிக்சல்கள்) டிஸ்பிளேவை கொண்டுள்ளது. கேமராக்களை பொருத்தவாட்டி, ஷாவ்மீ 14 ஆனது ப்ரோ மாடலில் உள்ள அதே ட்ரிபிள் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. பேட்டரியை பொறுத்தவரை இது 90W வயர்டு, 50W வயர்லெஸ் மற்றும் 10W வயர்லெஸ் ரிவர்ஸ் சார்ஜிங் ஆதரவு உடனான 4,610mAh பேட்டரியை கொண்டுள்ளது.

ஷாவ்மீ 14, ஷாவ்மீ 14 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் என்ன விலைக்கு அறிமுகமாகும்? சீனாவில் ஷாவ்மீ 14 ப்ரோ மாடலின் பேஸிக் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன், இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.56,500 க்கு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

மறுகையில் உள்ள ஷாவ்மீ 14 ஸ்மார்ட்போனின் பேஸிக் 8ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன், இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமார் ரூ.50,000 க்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதேபோன்ற அல்லது இதைவிட சற்றே அதிகமான விலை நிர்ணயத்தை நாம் இந்திய சந்தையிலும் எதிர்பார்க்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
2 New Xiaomi Phones Launch Globally on Feb 25 Xiaomi 14 Xiaomi 14 Pro Specifications Price in India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X