Home
Mobile

இந்த 2 போனுக்காக.. இங்க பல பேர் வெயிட்டிங்.. ஒன்னு VIVO.. இன்னொன்னு iQOO.. என்ன மாடல்? என்ன விலை?

ஒன்பிளஸ் முதல் ரெட்மி வரை.. 2024 ஆம் ஆண்டு தொடங்கியதில் இருந்து ஒவ்வொரு வாரமும் - தொடர்ச்சியான முறையில் - பல நிறுவனங்கள் தத்தம் புதிய ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தன. ஆனால் இந்த வாரம் அப்படி இருக்க போவதில்லை!

ஏனென்றால், இந்த வாரம் இரண்டு நிறுவனங்கள் மட்டுமே தத்தம் புதிய ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யவுள்ளது. என்னென்ன ஸ்மார்ட்போன் சரியாக எந்த தேதியில் அறிமுகமாகும்? அவைகளின் விலை நிர்ணயம் எப்படி இருக்கும்? அவைகள் என்னென்ன முக்கிய அம்சங்களை பேக் செய்யும்? இதோ விவரங்கள்:

iQOO Neo 9 Pro, Vivo Y200e 5G: அறிமுக தேதி, விலை, அம்சங்கள்!

இந்த வாரம் விவோ (Vivo) மற்றும் (iQOO) ஆகிய இரண்டு நிறுவனங்களும் தலா ஒரு ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்யும். விவோ நிறுவனம் அதன் ஒய் சீரீஸின் கீழ் விவோ ஒய்200இ 5ஜி (Vivo Y200e 5G) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யவுள்ளது. மறுகையில் உள்ள ஐக்யூ அதன் நியோ சீரீஸின் கீழ் ஐக்யூ நியோ 9 ப்ரோ (iQOO Neo 9 Pro) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யவுள்ளது.

1. விவோ ஒய்200இ 5ஜி அறிமுக தேதி, விலை மற்றும் அம்சங்கள்: இந்தியாவில், விவோ ஒய்200இ 5ஜி ஸ்மார்ட்போன் பிப்ரவரி 22 ஆம் தேதியன்று அறிமுகமாகும். இந்த ஸ்மார்ட்போனில் ஈகோ-ஃபைபர் லெதர் ஃபினிஷ் (eco-fibre leather finish.) இடம்பெறும் என்பது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

iQOO Neo 9 Pro, Vivo Y200e 5G: அறிமுக தேதி, விலை, அம்சங்கள்!

மேலும் இது எப்எச்டிபிளஸ் ரெசல்யூஷன் மற்றும் 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.67 இன்ச் அமோஎல்இடி டிஸ்பிளேவுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கேமராக்களை பொறுத்தவரை, இதில் 50எம்பி மெயின் கேமராஉடனான ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் இடம்பெறலாம். முன்பக்கத்தில் 16எம்பி செல்பீ கேமரா இருக்கலாம்.

குவால்காம் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 சிப்செட் (Qualcomm Snapdragon 4 Gen 2 Chipset) மூலம் இயக்கப்படும் விவோ ஒய்200இ 5ஜி ஸ்மார்ட்போனில் 5000mAh பேட்டரி பேக் செய்யப்படலாம். இது விவோவின் 44W பிளாஷ்சார்ஜ் ஆதரவுடன் வரும் என்றும் கூறப்படுகிறது.

iQOO Neo 9 Pro, Vivo Y200e 5G: அறிமுக தேதி, விலை, அம்சங்கள்!

மேலும் இந்த விவோ ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்ப்ளே பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் (in-display fingerprint scanner) மற்றும் ஐபி ரேட்டிங்கும் (IP rating) இடம்பெறும். கடைசியாக இது ஆண்ட்ராய்டு 13 அல்லது ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 13 or Android 14 OS) அடிப்படையிலான ஃபன்டச்ஓஎஸ் (FuntouchOS) கொண்டு இயக்கப்படலாம்.

இதை தவிர விவோ ஒய்200இ 5ஜி ஸ்மார்ட்போனை பற்றி வேறு எந்த விவரமும் தெரியவில்லை. விலை நிர்ணயத்தை பொறுத்தவரை இது ரூ.20,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படலாம். ஏனென்றால், ஏற்கனவே விவோ ஒய்200 5ஜி (Vivo Y200 5G) என்கிற மாடல் அறிமுகமாகி விட்டது. அதன் விலை ரூ.21,999 ஆகும்.

iQOO Neo 9 Pro, Vivo Y200e 5G: அறிமுக தேதி, விலை, அம்சங்கள்!

2. ஐக்யூ நியோ 9 ப்ரோ அறிமுக தேதி, விலை மற்றும் அம்சங்கள்: ஐக்யூவின் இந்த புதிய ஸ்மார்ட்போனும் கூட, விவோ ஒய்200இ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் அதே தேதியில், அதாவது பிப்ரவரி 22 ஆம் தேதியன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் இந்திய நேரப்படி மதியம் 12 மணிக்கு அறிவிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, இது 144ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.78-இன்ச் 1.5கே ஓஎல்இடி டிஸ்பிளே, LPDDR5x ரேம் மற்றும் UFS 4.0 ஸ்டோரேஜுடன் இணைக்கப்பட்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட், 50எம்பி சோனி IMX920 மெயின் கேமரா, 16எம்பி செல்பீ கேமரா போன்றவைகளை கொண்டிருக்கும்.

மேலும் இது ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ், 120W வயர்டு சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5160mAh பேட்டரியையும் பேக் செய்யும். கடைசியாக இது ஃபையரி ரெட் (Fiery Red) மற்றும் கான்குரர் பிளாக் (Conqueror Black) என்கிற கலர் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கும். விலை நிர்ணயத்தை பொறுத்தவரை இந்தியாவில் இது ரூ.41,999 க்கு அறிமுகம் செய்யப்படலாம்.

Best Mobiles in India

English summary
2 New Smartphones iQOO Neo 9 Pro and Vivo Y200e 5G Launching in India on Feb 22 Price Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X