அடுத்த 5 வருஷத்துக்கு எந்த 5G, 4G போனும் வாங்க வேணாம்! ஒன்னு ரூ.11000.. இன்னொன்னு ரூ.9000.. இந்த 2-ல 1 போதும்!
அடுத்த 5 ஆண்டுகளுக்கு செக்யூரிட்டி அப்டேட்கள் மற்றும் 4 ஆண்டுகளுக்கு ஓஎஸ் அப்டேட்களை வழங்கும் மாடல் உட்பட சாம்சங் நிறுவனமானது 2 புதிய கேலக்ஸி மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது. அதென்ன மாடல்கள்? என்ன விலை? என்னென்ன அம்சங்கள்? இதோ விவரங்கள்:
என்ன மாடல்கள்? சாம்சங் நிறுவனம் அதன் எப் சீரீஸின் கீழ் சாம்சங் கேலக்ஸி எப் 15 5ஜி (Samsung Galaxy F15 5G) மாடலையும் மற்றும் எம் சீரிஸின் கீழ் சாம்சங் கேலக்ஸி எம்14 4ஜி (Samsung Galaxy M14 4G) மாடலையும் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யவுள்ளது.

அறிமுகத்திற்கு முன்னதாகவே.. சாம்சங் கேலக்ஸி எப்15 5ஜி ஸ்மார்ட்போனானது மார்ச் 4 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரும் என்றும், அது பிரபல இகாமர்ஸ் வலைத்தளமான பிளிப்கார்ட் (Flipkart) வழியாக வாங்க கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மறுகையில் உள்ள சாம்சங் கேலக்சி எம்14 4ஜி மாடலானது அடுத்த சில நாட்களில் அறிமுகமாகி, விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சாம்சங் கேலக்ஸி எப்15 5ஜி என்ன விலைக்கு வரும்? நம்பகமான டிப்ஸ்டர்களில் ஒருவரான அபிஷேக் யாதவ்வின் (@yabhishekd) கூற்றுப்படி, சாம்சங் கேலக்ஸி எப்15 5ஜி ஸ்மார்ட்போனின் 4ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.13,499 க்கு அறிமுகம் செய்யப்படலாம். இதே ஸ்மார்ட்போனின் 6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.14,999 க்கு வெளியாகலாம்.

மார்ச் 4 ஆம் தேதி தொடங்கும் சாம்சங் கேலக்ஸி எப்15 5ஜி ஸ்மார்ட்போனின் விற்பனையின் போது "தகுதியான" பேங்க் கார்டுகளுக்கு ரூ.1,500 வங்கி தள்ளுபடியும் கிடைக்கும். இதன் வழியாக இந்த ஸ்மார்ட்போனின் பேஸிக் ஸ்டோரேஜ் ஆப்ஷனின் இறுதி விலையை ரூ.11,999 ஆக குறைக்கலாம்!
சாம்சங் கேலக்ஸி எம்14 4ஜி என்ன விலைக்கு வரும்? இந்த ஸ்மார்ட்போனின் 4ஜிபி ரேம் + 64ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.9,499 க்கு அறிமுகம் செய்யப்படலாம். இதே ஸ்மார்ட்போனின் 6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.12,499 க்கு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி எப்15 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்கள்: இது சூப்பர் அமோஎல்இடி டிஸ்பிளே மற்றும் 6000எம்ஏஎச் பேட்டரியை பேக் செய்யும். கூடவே இந்த ஸ்மார்ட்போனிற்கு 4 முக்கிய ஆண்ட்ராய்டு அப்டேட்களும் (4 Gen Android Updates) மற்றும் 5 ஆண்டுகளுக்கான செக்யூரிட்டி அப்டேட்கள் (Security Updates) கிடைக்கும் என்கிற வாக்குறுதியும் அளிக்கப்பட்டுள்ளது. அதாவது இது ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் உடன் வந்தால் ஆண்ட்ராய்டு 18 வரையிலான அப்டேட்களை பெறும்.
இது 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.5-இன்ச் புல்எச்டி பிளஸ் இன்பினிட்டி-யு சூப்பர் அமோஎல்இடி டிஸ்பிளேவை கொண்டிருக்கலாம். இது ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்புடன் வரலாம்.மீடியாடெக் டைமன்சிட்டி 6100 பிளஸ் சிப்செட் மூலம் இயக்கப்படலாம். கடைசியாக 25W பாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவையும் வழங்கலாம்; ஆனால் ஸ்மார்ட்போனின் ரீடெயில் பாக்ஸில் 25W சார்ஜர் இடம்பெறாமல் போவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.
இந்த ஸ்மார்ட்போனில் 'வாய்ஸ் ஃபோகஸ்' என்கிற அம்சம் (Voice Focus Feature) இடம்பெறும். இது பேக்கிரவுண்ட் நாய்ஸ்-ஐ பில்டர் (Filtering Background Noise) செய்வதன் மூலம், வோக்கல் ஃப்ரெக்வன்சீஸ்களை அதிகரிப்பதன் (Boosting vocal frequencies) மூலமும் கால்களின் போது குரல் தரத்தை மேம்படுத்துகிறது. அதாவது கூகுள் மீட், மைக்ரோசாஃப்ட் டீம்ஸ், வாட்ஸ்அப் மற்றும் ஜூம் போன்ற வீடியோ மற்றும் வாய்ஸ் கால் ஆப்களில் இந்த அம்சம் மிகவும் உதவிகரமானதாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








