Home
Mobile

நினைச்சு பார்க்காத விலையில் 2 புதிய Samsung போன்கள்! டிஸ்பிளே, ஸ்டோரேஜ், பேட்டரினு எல்லாமே பெருசா இருக்கு!

பட்ஜெட் விலைப்பிரிவின் கீழ் அதாவது ரூ.10,000-க்குள் என்கிற விலையின் கீழ் 2 புதிய ஸ்மார்ட்போன்களை களமிறக்கி விட சாம்சங் (Samsung) நிறுவனம் தயாராக உள்ளது. இன்னொரு சுவாரசியமான விடயம் என்னவென்றால், இந்த 2 மாடல்களுமே சில வெயிட்டான அம்சங்களை பேக் செய்கின்றன.

நாங்கள் சொல்லித்தான் உங்களுக்கு தெரிய வேண்டிய அவசியமில்லை - கேலக்ஸி ஏ சீரீஸ் (Galaxy A Series) ஆனது சாம்சங் நிறுவனத்தின் "அதிகம் விற்பனையாகும்" சீரீஸ்களில் (Best Selling Series) ஒன்றாகும். அறியாதோர்களுக்கு கேலக்ஸி ஏ-சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் ஆனது கடந்த சில வருடங்களாகவே அதிகம் விற்பனையாகும் ஆண்ட்ராய்டு (Android) போன்களில் ஒன்றாகும். இதற்கிடையில் தான் சாம்சங் தனது கேலக்ஸி ஏ-சீரிஸ் போர்ட்ஃபோலியோவை விரிவுபடுத்த உள்ளது.

பட்ஜெட் விலையில் 2 புதிய போன்களை அறிமுகம் செய்யும் Samsung!

அப்படியாக இந்தியாவில் அடுத்த சில வாரங்களில் அறிமுகம் செய்யப்படவுள்ள இரண்டு புதிய ஏ-சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் ஆனது கேலக்ஸி ஏ04 (Galaxy A4) மற்றும் கேலக்ஸி ஏ04இ (Galaxy A04e) ஆகும். இந்த 2 ஸ்மார்ட்போன்களுமே சாம்சங் கேலக்ஸி ஏ04 (Galaxy A04) ஸ்மார்ட்போனின் ஸ்லிம்டு டவுன் வெர்ஷனாக (Slimmed Down Version) இருக்கும். அதாவது ஒப்பீட்டளவில் சற்றே சமரசம் செய்யப்பட்ட அம்சங்களுடன் வரும் என்று அர்த்தம்!

எதிர்பார்க்கப்படும் அம்சங்களை பொறுத்தவரை, Samsung Galaxy A04 மற்றும் Galaxy A04e ஸ்மார்ட்போனில் ரேம் பிளஸ் (RAM Plus) அம்சம் இடம்பெறலாம். அதாவது இந்த இரண்டு போன்களுமே 8GB வரையிலான RAM-ஐ வழங்கும். அறியாதோர்களுக்கு ரேம் பிளஸ் என்பது இன்டர்னல் மெமரியில் இருந்து கடன் வாங்கப்படும் ஸ்டோரேஜை ரேம் ஆக மாற்றும் ஒரு அம்சமாகும். சாம்சங்கின் கூற்றுப்படி, இந்த அம்சம் ஒரு ஸ்மார்ட்போனை சீராக இயங்க வைக்கும்.

மேலும் Galaxy A04 மற்றும் Galaxy A04e ஆகிய இரண்டுமே பெரிய அளவிலான பேட்டரிகளை பேக் செய்யும் ஸ்மார்ட்போன்களாகவும் இருக்கலாம். அதாவது இந்த இரண்டு ஏ-சீரிஸ் போன்களுமே 5000எம்ஏஎச் பேட்டரியை கொண்டிருக்கலாம். டிஸ்பிளேவை பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்போன்கள் முன்னதாக வெளியான கேலக்ஸி ஏ03 (Galaxy A03) மாடலை பின்பற்றலாம். அதாவது இவைகள் 6.5 இன்ச் என்கிற அளவிலான எச்டி பிளஸ் டிஸ்பிளேவுடன் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விலை நிர்ணயத்தை பொறுத்தவரை Samsung நிறுவனத்தின் இந்த 2 ஏ-சீரிஸ் ஸ்மார்ட்போன்களுமே சூப்பர் பட்ஜெட் விலைப்பிரிவின் கீழ் அறிமுகமாகும். அதாவது ரூ.10,000 க்குள் என்கிற விலைப்பிரிவின் கீழ் அறிமுகப்படுத்தப்படும். குறிப்பாக Galaxy A04e-யின் விலை மிகவும் இன்னும் மலிவானதாக இருக்கலாம்; இது ப்ளூ, ப்ரான்ஸ் மற்றும் பிளாக் என்கிற 3 கலர் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கும். இருப்பினும் இந்த 2 போன்களின் ப்ராசஸர் குறித்து எந்த தகவலும் இல்லை.

முன்னரே குறிப்பிட்டபடி, Samsung Galaxy A04 மற்றும் Galaxy A04e ஆகிய இரண்டுமே, இந்த ஆண்டில் அறிமுகமான முதல் ஏ-சீரீஸ் ஸ்மார்ட்போனான Galaxy A03 மாடலுக்கு கிடைத்த வெற்றியை பின்தொடர்ந்து வரும் மாடல்கள் ஆகும். நினைவூட்டும் வண்ணம் கேலக்ஸி ஏ03 ஆனது 6.5-இன்ச் HD+ டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது.அது ட்ரூ 48MP டூயல் ரியர் கேமரா செட்டப்பை பேக் செய்கிறது; இது லைவ் ஃபோகஸ் மூலம் கூர்மையான புகைப்படங்களை பதிவு செய்கிறது.

Samsung Galaxy A03 ஸ்மார்ட்போன் ஆனது ஆக்டா கோர் 1.6GHz ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது. அது 4GB அளவிலான ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனும் கூட 5000mAh பேட்டரியை பேக் செய்கிறது. மேலும் ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்ட One UI கோர் 3.1 மூலம் இயங்குகிறது. விலை நிர்ணயத்தை பொறுத்தவரை, இதன் 3ஜிபி+32ஜிபி ஆப்ஷன் ரூ.10,499 க்கும், 4ஜிபி+64ஜிபி ஆப்ஷன் ரூ.11,999 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதற்கிடையில் Samsung Galaxy S23 சீரீஸ் மாடல்கள் எப்போது அறிமுகமாகும் என்கிற தகவலும் வெளியாகி உள்ளது. அது வருகிற 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் கீழ் மொத்தம் 3 மாடல்கள் வெளியாகும் - அது வெண்ணிலா Samsung Galaxy S23, Samsung Galaxy S23+ மற்றும் Samsung Galaxy S23 Ultra மாடல்கள் ஆகும். தற்போது வரையிலாக இந்த 3 ஸ்மார்ட்போன்களின் அம்சங்கள் குறித்து எந்தவிதமான நம்பத்தகுந்த தகவலும் வெளியாகவில்லை!

Best Mobiles in India

English summary
2 New Samsung Phones To Launch In India Soon Check out Galaxy A04 and Galaxy A04e Price Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X