Home
Mobile

மார்ச் 15 வரை.. புது போன் வாங்குறத தள்ளி வைங்க.. முக்கியமா 5ஜி போன் வாங்கிடாதீங்க.. ஏன்னா?

அடுத்த 2 வாரங்களுக்கு, இன்னும் சரியாக சொல்ல வேண்டுமென்றால் வருகிற மார்ச் 15 ஆம் தேதி வரையிலாக 5ஜி ஆதரவு கொண்ட புதிய ஸ்மார்ட்போன்களை வாங்கும் திட்டத்தை ஒத்திவைக்கவும். ஏனென்றால் குறிப்பிட்ட தேதியில் 2 வெயிட்டான ஸ்மார்ட்போன்கள் அறிமுமாக உள்ளன.

இன்னும் சுவாரசியமான விஷயம் என்னவென்றால், மார்ச் 15 இல் அறிமுகமாகும் இரண்டுமே சாம்சங் நிறுவனத்தின் 5ஜி போன்களாகும். அதென்ன மாடல்கள்? என்னென்ன முக்கிய அம்சங்களை பேக் செய்யும்? அவற்றின் இந்திய விலை நிர்ணயம் எப்படி இருக்கும்? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்.

மார்ச் 15 வரை.. புது போன் வாங்குறத தள்ளி வைங்க.. ஏன்னா?

அறிமுகத்திற்கு ரெடியான Galaxy A34 5G மற்றும் Galaxy A54 5G

மிகவும் நம்பகமான டிப்ஸ்டர்களில் ஒருவரான ஸ்டீவ் எச்.மெக்ஃப்ளை (@OnLeaks) வழியாக கிடைக்கப்பெற்ற தகவலின்படி சாம்சங் நிறுவனம் அதன் கேலக்ஸி ஏ34 மற்றும் கேலக்ஸி ஏ54 ஸ்மார்ட்போன்களை வருகிற மார்ச் 15 ஆம் தேதியன்று அறிமுகம் செய்யும். மேலும் இந்த இரண்டுமே 5ஜி ஆதரவுடன் வரும்.

சாம்சங் கேலக்ஸி ஏ34 5ஜி மற்றும் சாம்சங் கேலக்ஸி ஏ54 5ஜி ஆகிய இரண்டுமே, ஏற்கனவே பல வகையான சான்றிதழ் தளங்களில் காணப்படுவதால், இந்த இரண்டுமே உடனடியாக அறிமுகம் செய்யப்படும் என்பதில் சந்தேகமே வேண்டாம். கூடிய விரைவில் சாம்சங் கூட இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடலாம்.

Galaxy A34 5G மற்றும் Galaxy A54 5G அம்சங்கள்

கேலக்ஸி ஏ34 5ஜி ஸ்மார்ட்போனில் டைமன்சிட்டி 1080 ப்ராசஸர் இடம்பெறலாம். மறுகையில் உள்ள கேலக்ஸி ஏ54 சாம்சங்கின் எக்ஸினோஸ் 1380 சிப்செட் மூலம் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜுடன் வரலாம்.

மேலும் இந்த இரண்டு போன்களுமே ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்ட யுஐ UI 5.0 ஓஎஸ் மூலம் இயக்கப்படலாம். வடிவமைப்பை பொறுத்தவரை, சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட கேலக்ஸி எஸ்23 சீரீஸில் உள்ளதை போன்ற கேமரா மாட்யூல் டிசைனை கொண்டிருக்கும் என்கிற தகவலும் கிடைத்துள்ளது.

அதாவது இந்த 2 சாம்சங் ஸ்மார்ட்போன்களுமே செங்குத்தாக நிலைநிறுத்தப்பட்ட கேமரா செட்டப்பில் வட்ட வடிவிலான கேமரா சென்சார்களை பேக் செய்யும். முன்பக்கத்தை பொறுத்தவரை, கேலக்ஸி ஏ34 5ஜி மாடலின் டிஸ்பிளேவானது நாட்ச் டிசைன் உடன் வரலாம். இதுதவிர்த்து வேறெந்த விவரங்களும் இல்லை!

Samsung Galaxy A34 5G விலை

கேலக்ஸி ஏ34 5ஜி மொத்தம் 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் கீழ் வெளியாகுமென்று கூறப்படுகிறது. அதில் பேஸிக் வேரியண்ட் ஆன 6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன், இந்திய மதிப்பின்படி சுமார் ரூ.36,200 க்கு அறிமுகம் செய்யப்படலாம்; மறுகையில் உள்ள 8ஜிபி ரேம் + 256ஜிபி ஆப்ஷன் தோராயமாக ரூ.41,500 க்கு வெளியாகலாம்.

Samsung Galaxy A54 5G விலை

கேலக்ஸி ஏ34 5ஜி ஸ்மார்ட்போனை போலவே கேலக்ஸி ஏ54 5ஜி மாடலும் கூட 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் வெளியாகும். அதில் 8ஜிபி + 128ஜிபி பேஸிக் வேரியண்ட் தோராயமாக ரூ.46,800 க்கும், 8 ஜிபி ரேம் + 256ஜிபி ஹை-எண்ட் வேரியண்ட் சுமார் ரூ.52,100 க்கும் அறிமுகம் செய்யப்படலாம்!

More from GizBot

Best Mobiles in India

English summary
2 New Samsung Phones Launch on March 15 Check Galaxy A34 5G and Galaxy A54 5G Price Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X