Home
Mobile

நீ படிச்ச ஸ்கூல்ல நான் வாத்தியார் டா.. சீன கம்பெனிகளை சிதற விடும் விலையில் Samsung-ன் 2 புதிய 5G Phone-கள்!

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில், சீன மொபைல் பிராண்டுகளின் ஆதிக்கத்தை சற்றும் கண்டுகொள்ளாத கம்பெனிகளில்.. தென் கொரியாவை சேர்ந்த சாம்சங் (Samsung) நிறுவனத்திற்கு நிச்சயம் ஒரு இடம் உண்டு. ஏனென்றால், சாம்சங் நிறுவனமானது தனக்கென ஒரு பெரிய ரசிகர் பட்டாளத்தையே தன்வசம் கொண்டுள்ளது.

அந்த ரசிகர் கூட்டத்தை மேலும் பலப்படுத்தும் வண்ணம் சாம்சங் நிறுவனமானது வருகிற டிசம்பர் 26 ஆம் தேதியன்று 2 புதிய 5ஜி ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது. சுவாரசியமாக இவ்விரு மாடல்களுமே வியட்நாம் சந்தையில் அறிமுகமாகி விட்டதால், விலை மற்றும் அம்சங்கள் குறித்து எந்த குழப்பமும் இல்லை!

சீன கம்பெனிகளை சிதற விடும் விலையில் Samsung-ன் 2 புதிய 5G Phone-கள்!

என்ன மாடல்கள்? நாம் இங்கே பேசுவது சாம்சங் கேலக்ஸி ஏ25 5ஜி (Samsung Galaxy A25 5G) மற்றும் சாம்சங் கேலக்ஸி ஏ15 5ஜி (Samsung Galaxy A15 5G) ஸ்மார்ட்போன்களை பற்றித்தான். இவ்விரு மாடல்களும் கடந்த டிசம்பர் 11 ஆம் தேதியன்று சாம்சங்கின் லேட்டஸ்ட் 5ஜி போன்களாக வியட்நாமில் அறிமுகமாகின.

தற்போது இந்த 2 ஸ்மார்ட்போன்களுமே இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட உள்ளன. கேலக்ஸி ஏ25 5ஜி மற்றும் கேலக்ஸி எஸ்25 5ஜி ஆகிய 2 ஸ்மார்ட்போன்களும் வருகிற டிசம்பர் 26 ஆம் தேதி மதியம் 12:30 மணிக்கு அறிமுகம் செய்யப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சீன கம்பெனிகளை சிதற விடும் விலையில் Samsung-ன் 2 புதிய 5G Phone-கள்!

என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? கேலக்ஸி ஏ25 5ஜி ஸ்மார்ட்போன் 120ஹெர்ட்ஸ் ரெப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate) மற்றும் 1000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் (1000 nits Peak Brightness) உடனான 6.5-இன்ச் ஃபுல்எச்டி பிளஸ் சூப்பர் அமோஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. மறுகையில் உள்ள கேலக்ஸி ஏ15 5ஜி ஸ்மார்ட்போன் அதே அளவிலான டிஸ்பிளேவை 90ஹெர்ட்ஸ் ரெப்ரெஷ் ரேட் மற்றும் 800 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உடன் வருகிறது.

கேலக்ஸி ஏ25 5ஜி மாடலானது மாலி-ஜி68 எம்பி4 ஜிபியு (Mali-G68 MP4 GPU) உடன் இணைக்கப்பட்ட நிறுவனத்தின் சொந்த எக்ஸினோஸ் 1280 சிப்செட் (Exynos 1280 SoC) மூலம் இயக்கப்படுகிறது. மறுகையில் உள்ள கேலக்ஸி ஏ15 5ஜி மாடலானது மீடியாடெக் டைமன்சிட்டி 6100 பிளஸ் (MediaTek Dimensity 6100+) சிப்செட்டை கொண்டுள்ளது.

சீன கம்பெனிகளை சிதற விடும் விலையில் Samsung-ன் 2 புதிய 5G Phone-கள்!

கேமராக்களை பொறுத்தவரை, கேலக்ஸி ஏ25 5ஜி ஸ்மார்ட்போனானது ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical image stabilization - OIS) ஆதரவு உடனான 50 மெகாபிக்சல் மெயின் கேமரா + அல்ட்ரா-வைட் லென்ஸுடன் கூடிய 8 மெகாபிக்சல் கேமரா + 2 மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டர் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது.

மறுகையில் உள்ள கேலக்ஸி ஏ15 5ஜி ஸ்மார்ட்போனானது 50 மெகாபிக்சல் மெயின் கேமரா + 5 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமரா + 2 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. இரண்டு ஸ்மார்ட்போன்களிலுமே 13 மெகாபிக்சல் செல்பீ கேமராவை கொண்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 14 (Android 14) அடிப்படையிலான ஒன் யுஐ 6.0 ஓஎஸ் (One UI 6.0 OS) உடன் வரும் இவ்விரு சாம்சங் ஸ்மார்ட்போன்களுமே 25W வயர்டு சார்ஜிங் ஆதரவு உடனான 5000mAh பேட்டரிகளை பேக் செய்கின்றன. கடைசியாக இவ்விரு ஸ்மார்ட்போன்களின் பக்கவாட்டிலும் ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் (Finger Print Sensor) உள்ளது.

என்ன விலைக்கு வரும்? வியட்நாம் சந்தையில், சாம்சங் கேலக்ஸி ஏ25 5ஜி ஸ்மார்ட்போன் இந்திய ருபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.22,500 க்கும், கேலக்ஸி ஏ15 5ஜி ஸ்மார்ட்போன் தோராயமாக ரூ.21,500 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதையொட்டிய விலை நிர்ணயத்தை நாம் இந்தியாவிலும் எதிர்பார்க்கலாம். அதாவது இந்த போன்கள் ரூ.20,000 - ரூ.25000 என்கிற பட்ஜெட்டில் அறிமுகமாகும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
2 New Samsung 5G Smartphones Launching in India on Dec 26 Galaxy A15 5G Galaxy A25 5G Price Specs
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X