Home
Mobile

வந்துட்டான்.. Samsung-கிட்ட பலரும் எதிர்பாத்த 2 5G போன்கள்.. விற்பனை வெளுத்து வாங்க போகுது.. என்ன விலை?

உங்கள் நட்பு அல்லது குடும்ப வட்டாரத்தில், 10 பேர் சாம்சங் (Samsung) ஸ்மார்ட்போன்களை வைத்து இருந்தால். அதில் 7 போன்கள் கேலக்ஸி எம்-சீரீஸ் (Galaxy M-Series) மாடல்களாக இருக்கும். அந்த அளவிற்கு சாம்சங்கின் கேலக்ஸி எம்-சீரீஸ் போன்கள் இந்தியர்கள் மத்தியில் மிகவும் பிரபலம்!

அப்படியான கேலக்ஸி எம்-சீரீஸின் கீழ் சாம்சங் நிறுவனம் ஒரு புதிய மாடலை அறிமுகம் செய்யவுள்ளது; அதுவும் 5ஜி நெட்வொர்க் ஆதரவுடன்! அதென்ன மாடல்? அதன் விலை நிர்ணயம் எப்படி இருக்கும்? அது என்னென்ன முக்கிய அம்சங்களை பேக் செய்யும்? வேறு என்னென்ன சாம்சங் ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாக தயார் நிலையில் உள்ளன? இதோ விவரங்கள்:

வந்துட்டான்.. Samsung-கிட்ட பலரும் எதிர்பாத்த 2 5G போன்கள்!

சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எம்15 5ஜி (Samsung Galaxy M15 5G) என்கிற புதிய மாடலை உலகளவில் அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது. இது 25W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உடனான ஒரு பெரிய பேட்டரியை பேக் செய்யும். பெரும்பாலும் அது 5880mAh ஆக இருக்கும்; அதிகபட்சம் 6,000mAh வரை நீடிக்கப்படலாம்.

மேலும் இது ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) உடன் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. டிஸ்பிளேவை பொறுத்தவரை, இதில் 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (90Hz Refresh Rate) மற்றும் எப்எச்டி பிளஸ் ரெசல்யூஷன் உடனான 6.5-இன்ச் சூப்பர் அமோஎல்இடி டிஸ்பிளேவை (Super AMOLED Display) கொண்டிருக்கலாம்.

வந்துட்டான்.. Samsung-கிட்ட பலரும் எதிர்பாத்த 2 5G போன்கள்!

மீடியாடெக் டைமன்சிட்டி 6100 பிளஸ் (MediaTek Dimensity 6100 Plus SoC) சிப்செட் மூலம் இயக்கப்பபடலாம் என்று எதிர்பார்க்கப்படும் இந்த சாம்சங் ஸ்மார்ட்போன் ஆனது 8ஜிபி வரையிலான ரேம் மற்றும் 256ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜுடன் வரலாம்.

கேமராக்களை பொறுத்தவரை, சாம்சங் கேலக்ஸி எம்15 5ஜி ஸ்மார்ட்போனில் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை (Triple Rear Camera Setup) எதிர்பார்க்கலாம். அதில் 50எம்பி மெயின் கேமரா + 5எம்பி அல்ட்ராவைடு லென்ஸ் கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா இடம்பெறலாம்.

வந்துட்டான்.. Samsung-கிட்ட பலரும் எதிர்பாத்த 2 5G போன்கள்!

சாம்சங் கேலக்ஸி எம்15 5ஜி ஸ்மார்ட்போனின் இந்திய விலை நிர்ணயம் ரூ.16,000-க்குள் இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால் இது ரூ.15,990-க்கு அறிமுகம் செய்யப்படலாம். இருப்பினும் கேலக்ஸி எம்15 5ஜி ஸ்மார்ட்போனின் உலகளாவிய வெளியீட்டு தேதி (Global Launch Date) இன்னும் அறிவிக்கப்படவில்லை; விரைவில் அது தொடர்பான அறிக்கை வெளியாகலாம்.

கேலக்ஸி எம்15 5ஜி-க்கு முன்னதாகவே சாம்சங் கேலக்ஸி எப்15 5ஜி (Samsung Galaxy F15 5G) ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகிவிடும் என்பது போல் தெரிகிறது. ஏனென்றால் இந்த ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் (Flipkart) வலைத்தளத்தில் "கம்மிங் சூன்" (Coming Soon)டேக்கின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ளது. சுவாரசியமாக இதுவும் ரூ.15,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வந்துட்டான்.. Samsung-கிட்ட பலரும் எதிர்பாத்த 2 5G போன்கள்!

இது 90ஹெர்ட்ஸ் ரெப்ரெஷ் ரேட் (90Hz Refresh Rate) உடனான 6.5-இன்ச் எப்எச்டி பிளஸ் சூப்பர் அமோஎல்இடி டிஸ்பிளே, மீடியாடெக் டைமன்சிட்டி 6100+ சிப்செட் (MediaTek Dimensity 6100+ Processor), ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ், 25W சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 6,000mAh பேட்டரி, 50எம்பி மெயின் கேமரா, 13எம்பி செல்பீ கேமரா போன்ற முக்கிய அம்சங்களை பேக் செய்யும்.

சாம்சங் தொடர்பான மற்ற லேட்டஸ்ட் அப்டேட்களை பொறுத்தவரை, சாம்சங் நிறுவனம் அதன் கேலக்ஸி ரிங்கை (Samsung Galaxy Ring) இந்த ஆண்டு ஜூலை மாதம் நடக்கவுள்ள கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வில் (Galaxy Unpacked Event) அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த மாதம் கேலக்ஸி எஸ்24 சீரீஸ் (Galaxy S24 Series) உடன் அறிவிக்கப்பட்ட கேலக்ஸி ரிங் உடன் புதிய கேலக்ஸி இஸட் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன்களும் (Galaxy Z Foldable Smartphones) அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
2 New Samsung 5G Phones Launching Soon Check Galaxy M15 5G and Galaxy F15 5G Price Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X