ஜூலை 15க்கு அப்புறம்.. பலரோட கையிலும் இந்த 2 Realme போன்களும் தான் இருக்கும்.. கம்மி விலை.. தரமான அம்சங்கள்!
ரியல்மியின் (Realme) லேட்டஸ்ட் 5ஜி ஸ்மார்ட்போன்களாக நார்சோ 60 (Narzo 60) மற்றும் நார்சோ 60 ப்ரோ (Narzo 60 Pro) இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இவ்விரு ஸ்மார்ட்போன்களின் விலை, அம்சங்கள், விற்பனை மற்றும் அறிமுக சலுகைகள் குறித்த விவரங்கள் இதோ:
ரியல்மி நார்சோ 60 5ஜி சீரீஸ் விலை மற்றும் விற்பனை: இந்த சீரீஸின் பேஸிக் வேரியண்ட் ஆன ரியல்மி நார்சோ 60 ஆனது காஸ்மிக் பிளாக் மற்றும் மார்ஸ் ஆரஞ்சு என்கிற 2 கலர் ஆப்ஷன்களில் அறிமுகமாகி உள்ளது. மறுகையில் உள்ள ப்ரோ வேரியண்ட் ஆனது காஸ்மிக் நைட் மற்றும் மார்டியன் சன்ரைஸ் கலர்களில் வாங்க கிடைக்கும்.

விலையை பொறுத்தவரை, நார்சோ 60 5ஜி-யின் 8ஜிபி + 128ஜிபி ஆப்ஷன் ரூ.17,999 க்கும், 8ஜிபி + 256ஜிபி ஆப்ஷன் ரூ.19,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரியல்மி நார்சோ 60 ப்ரோ 5ஜி-யின் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஆப்ஷன் ரூ 23,999 க்கும், 12ஜிபி + 256ஜிபி ஆப்ஷன் ரூ.26,999 க்கும், 12ஜிபி + 1டிபி ஆப்ஷன் ரூ. 29,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
விற்பனையை பொறுத்தவரை, இவ்விரு ஸ்மார்ட்போன்களின் ப்ரீ-ஆர்டர்கள் இன்று (ஜூலை 6) மதியம் 1 மணி முதல் தொடங்கியது. இது வருகிற 15 ஆம் தேதி தொடங்கும் அமேசான் ப்ரைம் டே 2023 விற்பனையின் போது அமேசான் இந்தியா வலைத்தளம் வழியாக அதிகாலை 12 மணி முதல் விற்பனைக்கு வரும்.
ரியல்மி நார்சோ 60 5ஜி மாடலை ப்ரீ-ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.1,000 தள்ளுபடி கிடைக்கும். ஐசிஐசிஐ வங்கி அல்லது எஸ்பிஐ வங்கி கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தினால் நார்சோ 60 ப்ரோ 5ஜி-ஐ வாங்கினால் ரூ.1,500 உடனடி தள்ளுபடி கிடைக்கும்.இந்த போன்களை ரியல்மி இந்தியா இணையதளத்திலும் வாங்கலாம்.
ரியல்மி நார்சோ 60 5ஜி அம்சங்கள்: வெண்ணிலா மாடலான நார்சோ 60 ஆனது 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 2400 x 1080 பிக்சல்கள் உடனான 6.43-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் சூப்பர் அமோஎல்இ கர்வ்டு டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் அடிப்படையிலான ரியல்மி யுஐ 4.0 (அவுட்-ஆஃப்-தி-பாக்ஸ்) மூலம் இயங்குகிறது.
மீடியாடெக் டைமன்சிட்டி 6020 (MediaTek Dimensity 6020) சிப்செட் மூலம் இயக்கப்படும் ரியல்மி நார்சோ 60 5ஜி ஆனது "16ஜிபி" வரையிலான ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது. அதாவது இதன் 16ஜிபி ரேம் என்றால் 8ஜிபி ஃபிஸிக்கல் ரேம் ஆகும் மற்றது 8ஜிபி விர்ச்சுவல் ரேம் ஆகும். இன்டர்னல் ஸ்டோரேஜை பொறுத்தவரை மற்றும் 256ஜிபி வரை செல்கிறது.
கேமராக்களை பொறுத்தவரை, 64 மெகாபிக்சல் மெயின் கேமராவை கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 16 மெகாபிக்சல் செல்பீ கேமராவை கொண்டுள்ளது. இது 33W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5000mAh பேட்டரியை கொண்டுள்ளது. இதன் காஸ்மிக் பிளாக் ஆப்ஷன் 182 கிராம் எடையையும், மார்ஸ் ஆரஞ்சு ஆப்ஷன் ஒரு கிராம் அதிக எடையையும் கொண்டுள்ளது.
ரியல்மி நார்சோ 60 ப்ரோ 5ஜி அம்சங்கள்: இது 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் (2,400 x 1,080 பிக்சல்ஸ்) சூப்பர் அமோஎல்இடி கர்வ்டு டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்ட ரியல்மி யுஐ 4.0 மூலம் இயங்குகிறது.
மீடியாடெக் டைமன்சிட்டி 7050 5ஜி (MediaTek Dimensity 7050 5G) சிப்செட் மூலம் இயக்கப்படும் ரியல்மி நார்சோ 60 பட்டோ 5ஜி ஆனது 24ஜிபி வரையிலான ரேம் மற்றும் 1டிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜுடன் இணைக்கப்பட்டுள்ளது. வழக்கம் போல 24ஜிபி ரேம் என்பது 12ஜிபி ஃபிஸிக்கல் ரேம் + 12ஜிபி டைனமிக் ரேம் ஆகும்.
கேமராக்களை பொறுத்தவரை, ஆப்டிகல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் (ஓஐஎஸ்) உடனான 100-மெகாபிக்சல் மெயின் கேமராவை கொண்டுள்ளது. இதன் கேமரா யூனிட்டில் ஆட்டோ-ஜூம் அம்சமும் உள்ளது. முன்பக்கத்தில் 16 மெகாபிக்சல் செல்பீ கேமரா சென்சார் உள்ளது.
5,000mAh பேட்டரியுடன் வரும் நார்சோ 60 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனானது 67W Sசூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவையும் கொண்டுள்ளது. காஸ்மிக் நைட் ஆப்ஷன் மாடலின் எடை 185 கிராம் ஆகும்; மறுகையில் உள்ள மார்டியன் சன்ரைஸ் கலர் ஆப்ஷன் ஆனது (வீகன் லெதர் ஃபினிஷ் காரணமாக) 191 கிராம் எடையை கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications








