Realme-யின் 3வது லட்டு.. வெவ்வேறு விலைகளில் புதிய 5G போன்கள்.. பேக் டூ பேக் அறிமுகம்.. எந்த மாடல்கள்?
ரியல்மி (Realme) நிறுவனமானது அதன் அடுத்த பட்ஜெட் விலை 5ஜி ஸ்மார்ட்போன் ஆக புதிய ரியல்மி பி4 லைட் 5ஜி மாடலை வருகிற மார்ச் 17 ஆம் தேதியன்று இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளதை உறுதிப்படுத்தியுள்ள நிலையில், இந்த "புதிய 5ஜி ஸ்மார்ட்போன்" வரிசையில் மேலும் 2 மாடல்களும் இணையும் என்பது போல் தெரிகிறது.
ரியல்மி நிறுவனம் அதன் ரியல்மி பி4 சீரிஸின் கீழ் ரியல்மி பி4ஆர் 5ஜி என்கிற இன்னொரு 5ஜி ஸ்மார்ட்போனையும், கூடவே அதன் ரியல்மி 16 சீரிஸின் கீழ் ரியல்மி 16டி 5ஜி என்கிற புதிய மாடலையும் இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளதாக ஒரு டிப்ஸ்டர் அபிஷேக் யாதவ் (@yabhishekhd தெரிவித்துள்ளார்.

இவ்விரு ஸ்மார்ட்போன்களின் சரியான வெளியீட்டு தேதி இன்னும் வெளியிடப்படவில்லை என்றாலும், வெளியான லீக் ஆனது இவ்விரு ஸ்மார்ட்போகளுமே விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் என்பதை குறிக்கிறது. கூடவே ரியல்மி பி4ஆர் 5ஜி மற்றும் ரியல்மி 16டி 5ஜி ஆகிய 2 மாடல்களின் கலர் ஆப்ஷன்கள் மற்றும் ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள் குறித்த விவரங்களும் பகிரப்பட்டுள்ளது
ரியல்மி 16டி 5ஜி ஸ்மார்ட்போனின் ஸ்டோரேஜ் மற்றும் கலர் ஆப்ஷன்கள்: இது 6GB + 128GB, 8GB + 128GB, மற்றும் 8GB + 256GB ஆகிய ரேம் மற்றும் ஸ்டோரேஜ் ஆப்ஷன்களின் கீழ் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறத. இந்த ரியல்மி 16 சீரீஸ் ஸ்மார்ட்போன் அரோரா க்ரீன், ஸ்டார்லைட் பிளாக் மற்றும் ஸ்டார்லைட் ரெட் ஆகிய கலர்களில் வாங்க கிடைக்கலாம்
மாடல் பெயர் குறிப்பிடுவது போலவே இது இந்தியாவில் சமீபத்தில் வெளியிடப்பட்ட ரியல்மி 16 ப்ரோ 5ஜி (Realme 16 Pro 5G) மற்றும் ரியல்மி 16 ப்ரோ பிளஸ் 5ஜி (Realme 16 Pro Plus 5G) ஆகிய மாடல்களுடன் இணையும் மூன்றாவது போனாக இருக்கலாம்.
நினைவூட்டும் வண்ணம் ரியல்மி 16 ப்ரோ 5ஜி மற்றும் ரியல்மி 16 ப்ரோ பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன்கள் கடந்த 2026 ஆம் ஆண்டு ஜனவரி 6 ஆம் தேதி அன்று இந்தியாவில் ரூ.39,999 மற்றும் ரூ.31,999 என்ற ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டன.
ரியல்மி பி4ஆர் 5ஜி ஸ்மார்ட்போனின் ஸ்டோரேஜ் மற்றும் கலர் ஆப்ஷன்கள்: இது 4GB + 128GB, 6GB + 128GB, மற்றும் 6GB + 256GB ஆகிய ரேம் மற்றும் ஸ்டோரேஜ் ஆப்ஷன்களின் கீழ் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறத. இந்த ரியல்மி பி4 சீரீஸ் ஸ்மார்ட்போன் லேவண்டர் க்ளேர், சிலவர் க்ளேர் மற்றும் டைட்டானியம் க்ளேர் ஆகிய கலர்களில் வாங்க கிடைக்கலாம்
இது ரியல்மி பி4 சீரீஸின் கீழ் இணையும் புதிய 5ஜி மாடலாக இருக்கும் இந்த சீரீஸின் கீழ் ஏற்கனவே ரியல்மி பி4, ரியல்மி பி4 ப்ரோ, ரியல்மி பி4எக்ஸ், ரியல்மி பி4 பவர் மற்றும் ரியல்மி பி4 லைட் 4ஜி உள்ளிட்ட 5 மாடல்கள் உள்ளன. இதற்கிடையில் இதே சீரீஸின் கீழ் ரியல்மி பி4 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் (மார்ச் 17) அறிமுகம் செய்யவுள்ளதை ரியல்மி உறுதிப்படுத்தியுள்ளது.
இந்நிலையில் தான் ரியல்மி பி4ஆர் 5ஜி ஸ்மார்ட்போன் குறித்த லீக் வெளியாகியுள்ளது. ஆக ரியல்மி பி4 சீரிஸின் கீழ் அறிமுகமும் 7வது மாடலாக இது இருக்கலாம். மாடல் பெயர் குறிப்பிடுவது போலவே, ரியல்மி பி4 லைட் 5ஜி ஸ்மார்ட்போனானது முன்னதாக வெளியான ரியல்மி பி4 லைட் 4ஜி ஸ்மார்ட்போனின் "5ஜி வேரியண்ட்" ஆக இருக்கும்,


Click it and Unblock the Notifications








