Home
Mobile

பொங்கி எழுந்த POCO.. அடுத்தடுத்து 2 புதிய போன்கள்.. ஒன்று பட்ஜெட் மாடல்.. மற்றொன்று மிட்-ரேன்ஜ்!

சீன மொபைல் நிறுவனமான போக்கோ அதன் போக்கோ எக்ஸ்5 ப்ரோ 5ஜி (Poco X5 Pro 5G) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்த கையோடு மேலும் 2 புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய உள்ளது. அதிலொன்று பட்ஜெட் விலை மாடலாகவும், இன்னொன்று மிட்-ரேன்ஜ் மாடலாகாவும் இருக்கும்!

POCO அறிமுகம் செய்யவுள்ள அடுத்த ஸ்மார்ட்போன்

போக்கோ எக்ஸ்5 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியதன் மூலம் இந்நிறுவனம் தனது மிட்-ரேன்ஜ் மொபைல் பிரிவை அப்டேட் செய்தது. நினைவூட்டும் வண்ணம் போக்கோ எக்ஸ்5 ப்ரோ 5ஜி போனின் விலை ரூ.22,999 ஆகும்.

அடுத்தடுத்து 2 புதிய POCO போன்கள்! ஒன்று பட்ஜெட், மற்றொன்று மிட்-ரேன்ஜ

தற்போது இந்நிறுவனம் அதன் பட்ஜெட் மொபைல் பிரிவை அப்டேட் செய்யும் நோக்கத்தின் கீழ் போக்கோ சி55 (POCO C55) ஸ்மார்ட்போனின் இந்திய அறிமுகத்தை உறுதிப்படுத்தியுள்ளது.

வழக்கம் போல இந்த போக்கோ ஸ்மார்ட்போனும் கூட சீனாவில் அறிமுகமான ஏதோவொரு ரெட்மி ஸ்மார்ட்போனின் ரீபிராண்டட் வெர்ஷனாக (Rebranded Version) இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

அதாவது போக்கோ சி55 மாடலானது ரெட்மி 12சி (Redmi 12C) மாடலின் மறுபெயரிடப்பட்ட பதிப்பாக இந்தியாவிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும், போக்கோ நிறுவனம் போக்கோ சி55 ஸ்மார்ட்போனின் சரியான இந்திய வெளியீட்டு தேதியை இன்னும் அறிவிக்கவில்லை; வெறுமனே "விரைவில் வரும்" என்று மட்டும் ட்வீட் செய்துள்ளது. இது இந்த பிப்ரவரி மாதத்திற்குள்ளயே அறிமுகமானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!

POCO C55 விலை மற்றும் அம்சங்கள்

போக்கோ சி55 ஸ்மார்ட்போனின் இந்திய விலை நிர்ணயம் ரூ.10,000 க்குள் தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அம்சங்களை பொறுத்தவரை, இது 6.71-இன்ச் எச்டி+ எல்சிடி டிஸ்பிளேவை கொண்டிருக்கும். மேலும் 6ஜிபி வரையிலான ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜுடன் மீடியாடெக் ஹீலியோ ஜி85 சிப்செட் மூலம் இயக்கப்படும்.

கேமராக்களை பொறுத்தவரை டூயல் ரியர் கேமரா செட்டப் இடம்பெறலாம், அதில் 50எம்பி மெயின் கேமரா இருக்கலாம். முன்பக்கத்தில் 5MP செல்பீ கேமரா இருக்கலாம். கடைசியாக இந்த பட்ஜெட் விலை போக்கோ ஸ்மார்ட்போனில் 5,000mAh பேட்டரி பேக் செய்யப்படலாம் மற்றும் அது 10W சார்ஜிங்கை ஆதரிக்கலாம்.

POCO X5 GT ஸ்மார்ட்போனும் வருகிறது

போக்கோ சி55 ஸ்மார்ட்போனை தொடர்ந்து, போக்கோ எக்ஸ்5 சீரிஸின் கீழ் போக்கோ எக்ஸ்5 ஜிடி என்கிற இன்னொரு மாடலும் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் பிஐஎஸ் (BIS - Bureau of Indian Standards) வலைதளத்தில் காணப்பட்டுள்ளதால், இதுவும் கூடிய விரைவில் இந்திய சந்தையில் அறிமுகமாகும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

மறுபடியும்.. போக்கோ எக்ஸ்5 ஜிடி மாடலும் கூட ஒரு ரீபிராண்டட் ஸ்மார்ட்போனாகவே வரும். இது ரெட்மி நோட் 12 டர்போவின் (Redmi Note 12 Turbo) மறுபெயரிடப்பட்ட பதிப்பாக இந்தியாவில் அறிமுகமாகலாம்!

POCO X5 GT விலை மற்றும் அம்சங்கள்

இது உண்மையாகவே ரெட்மி நோட் 12 டர்போவின் ரீ பிராண்டட் வெர்ஷனாக வெளியாகும் பட்சத்தில், இது 6.67-இன்ச் OLED FHD+ டிஸ்பிளே, 50MP ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப், 67W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5500mAh பேட்டரி போன்ற முக்கிய அம்சங்களை எதிர்பார்க்கலாம். விலை நிர்ணயத்தை பொறுத்தவரை ரூ.29,999 க்கு அறிமுகம் செய்யப்படலாம்!

Best Mobiles in India

English summary
2 New POCO Smartphones to Launch in India Soon Check POCO C55 and POCO X5 GT Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X