இது போன் இல்ல.. POCO-வின் புயல்.. 16GB ரேம், 1TB ஸ்டோரேஜ், 120W ஹைப்பர் சார்ஜிங்.. என்ன மாடல்? என்ன விலை?
போக்கோ நிறுவனமானது அதன் எஃப் சீரிஸின்கீழ், வருகிற மே 23 ஆம் தேதி அன்று இந்தியாவிலும் உலகளவிலும் ஒரு புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யவுள்ளது. அதென்ன மாடல்? அது என்ன விலைக்கு வரும்? என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? இதோ விவரங்கள்:
என்ன மாடல்? மே 23 அறிமுகமாக போவது போக்கோ எஃப்6 ப்ரோ (Poco F6 Pro) மாடல் தான். இது ரெட்மி கே70 (Redmi K70) ஸ்மார்ட்போனின் ரீபிராண்டட் வெர்ஷன் ஆக இருக்கும் என்பது போல் தெரிகிறது. ஏனென்றால் போக்கோ எஃப்6 ப்ரோவின் ரியர் கேமரா செட்டப் டிசைன் (Rear Camera Setup Design) ஆனது அச்சுஅசலாக ரெட்மி கே70 மாடலை போலவே உள்ளது.

என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? அறிமுகத்திற்கு முன்னதாகேவ போக்கோ எஃப்6 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது தற்போது அமேசான் யூரோப் வலைதளத்தில் (Amazon Europe Website) பட்டியலிடப்பட்டுள்ளது, அதன் வழியாக போக்கோ எஃப்6 ப்ரோவின் சில முக்கிய அம்சங்கள் மற்றும் விலை விவரங்களை அறிய முடிகிறது.
அதன் வழியாக, போக்கோ எஃப்6 ப்ரோவானது குவால்காமின் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் (Qualcomm's Snapdragon 8 Gen 2 SoC) மூலம் இயக்கப்படும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 50 மெகாபிக்சல் ட்ரிபிள் ரியர் கேமரா யூனிட்டை (Triple Rear Camera Setup) பேக் செய்யும்.
மேலும் போக்கோ எஃப்6 ப்ரோவானது 120W வயர்டு ஹைப்பர்சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவு (120W Wired HyperCharge Fast Charging Support) உடனான 5,000எம்ஏஎச் பேட்டரியை கொண்டிருக்கும் என்பதையும் அமேசான் லிஸ்டிங் வெளிப்படுத்துகிறது. இதுதவிர்த்து அமேசான் வழியாக வேறு எந்த அம்சங்களும் உறுதிப்படுத்தப்படவில்லை.
எதிர்பார்க்கப்படும் அம்சங்களை பொறுத்தவரை, போக்கோ எஃப்6 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate), 4000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் (Peak Brightness) மற்றும் 3,840ஹெர்ட்ஸ் பிடபுள்யூஎம் டிம்மிங் ரேஷியோ (PWN Dimming Ratio) உடனான 6.4-இன்ச் டபுள்யூக்யூஎச்டி பிளஸ் ஃப்ளோ அமோஎல்இடி டிஸ்பிளேவை (WQHD+ Flow AMOLED Display) கொண்டிருக்கலாம்.
பெரும்பாலும் போக்கோ எஃப்6 ப்ரோவானது எம்ஐயுஐ 14 (MIUI 14) உடன் தான் அனுப்பப்படும் மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட்டை (USB Type-c Port) பேக் செய்யும். கலர் ஆப்ஷன்களை பொறுத்தவரை, போக்கோ எஃப்6 ப்ரோ ஸ்மார்ட்போனிற்கான அமேசான் யூரோப் லிஸ்டிங் ஒயிட் கலர் விருப்பத்தை காட்சிப்படுத்துகிறது. மேலும் அதிகாரப்பூர்வ டீஸர் ஆனது பிளாக் கலர் ஆப்ஷனை காட்டுகிறது. எனவே, இது உலகளவில் குறைந்தது 2 கலர்களில் வாங்க கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
என்ன விலைக்கு வரும்? அமேசான் ஐரோப்பா வலைத்தளத்தின்படி, போக்கோ எஃப்6 ப்ரோ ஸ்மார்ட்போனின் 16ஜிபி ரேம் + 1டிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.56,000 க்கு அறிமுகம் செய்யப்படலாம். இதற்கிடையில், ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 3 சிப்செட் (Snapdragon 8s Gen 3 SoC) உடன் கூடிய வெண்ணிலா போக்கோ எஃப்6 (POCO F6) ஸ்மார்ட்போன் ஆனது வருகிற மே 23 அன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன், கடந்த 2024 ஏப்ரல் மாதம் சீனாவில் வெளியிடப்பட்ட ரெட்மி டர்போ 3 (Redmi Turbo 3) ஸ்மார்ட்போனின் ரீபிராண்டட் வெர்ஷன் ஆக இருக்கும் என்று கூறப்படுகிறது. வெண்ணிலா போக்கோ எஃப்6 ஸ்மார்ட்போன் ஆனது 6.7 இன்ச் 1.5கே ஓஎல்இடி டிஸ்பிளே ( 1.5K OLED Display), 50 மெகாபிக்சல் டூயல் ரியர் கேமரா செட்டப், 90W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரி போன்ற அம்சங்களை பேக் செய்யலாம்.


Click it and Unblock the Notifications








