களைகட்டும் மே மாசம்.. POCO-க்கு போட்டியாக OPPO-வின் 2 புது போன்கள்.. என்ன மாடல்? என்ன விலை?
2024 மே மாதமானது சற்றே மந்தமாகத்தான் ஆரம்பித்தது. ஆனால் இப்போது சூடு பிடித்துவிட்டது. பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு தத்தம் புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளன. முன்னதாக போக்கோ நிறுவனம் அதன் எஃப்6 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் அறிமுகத்தை உறுதி செய்திருந்தது.
தற்போது ஒப்போ நிறுவனம் மிகவும் பிரபலமான அதன் ரெனோ சீரிஸின் கீழ் புதிய மாடல்களை அறிமுகம் செய்யபோவதை உறுதிப்படுத்தியுள்ளது. அது ஒப்போ ரெனோ 12 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் ஆகும். இது சரியாக எப்போது அறிமுகமாகும்? இந்த சீரிஸின் கீழ் மொத்தம் எத்தனை மாடல்கள் இருக்கும்? என்ன விலைக்கு வரும்? என்ன அம்சங்களை பேக் செய்யும்? இதோ விவரங்கள்:

ஒப்போ 11 சீரீஸின் அப்கிரேடட் வெர்ஷனாக வரும் ஒப்போ ரெனோ 12 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் ஆனது இந்த மாத இறுதியில்.. இன்னும் சரியாக சொல்ல வேண்டும் என்றால் மே 23 ஆம் தேதியன்று சீனாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளன. இந்த சீரிஸின் கீழ் ரெனோ 12 (Reno 12) மற்றும் ரெனோ 12 ப்ரோ (Reno 12 Pro) என மொத்தம் 2 மாடல்கள் அறிமுகமாகும் என்பதையும் ஒப்போ உறுதிப்படுத்தியுள்ளது.
ஒப்போ 12 குறித்த டீஸரில் சில்வர் கலர் ஆப்ஷனை காண முடிகிறது. ஆகவே இவ்விரு ஸ்மார்ட்போன்களில் ஒன்று சில்வர் பினிஷ் உடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மறுகையில் உள்ள ரெனோ 12 ப்ரோ மாடலானது பர்பிள் கலர் ஆப்ஷனில் தோன்றுகிறது. மேலும் இரண்டு போன்களுமே பளபளப்பான பினிஷ் மற்றும் மேல் இடது மூலையில் நீள்வட்ட வடிவிலான ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளன.
இதுதவிர்த்து ரெனோ 12 சீரீஸ் போன்களை பற்றிய வேறு எந்த விவரங்களையும் ஒப்போ பகிரவில்லை. இருப்பினும் லீக்ஸ் தகவல்களின் அடிப்படையில் வெண்ணிலா ஒப்போ ரெனோ 12 ஸ்மார்ட்போன் ஆனது மீடியாடெக் டைமன்சிட்டி 8250 சிப்செட் (MediaTek Dimensity 8250 SoC) மூலம் இயக்கப்படும்; அதே சமயம் ப்ரோ வேரியண்ட் ஆனது மீடியாடெக் டைமன்சிட்டி 9200 பிளஸ் சிப்செட் (MediaTek Dimensity 9200+ SoC) உடன் வரும்.
மேலும் இரண்டு மாடல்களிலுமே 50-மெகாபிக்சல் ட்ரிபிள் ரியர் கேமரா யூனிட்கள் இடம்பெறும். முக்கிய வேறுபாடுகளை ப்ரோ மாடலில் காணலாம். இது 6.7 இன்ச் 120ஹெர்ட்ஸ் 1.5கே டிஸ்பிளே, 80W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவு, 50 மெகாபிக்சல் செல்பீ கேமரா, 50 மெகாபிக்சல் ப்ரைமரி ரியர் சென்சார் மற்றும் 2எக்ஸ் ஆப்டிகல் ஜூம் உடன் 50 மெகாபிக்சல் போர்ட்ரெய்ட் சென்சார் ஆகியவற்றை பேக் செய்யும்
விலை நிர்ணயத்தை பொறுத்தவரை.. பெரும்பாலும் இது ரெனோ 11 சீரீஸின் விலையுடன் ஒற்றுப்போகலாம். நினைவூட்டும் வண்ணம் ஒப்போ ரெனோ 11 சீரீஸ் ஆனது கடந்த ஜனவரி மாதம் இந்தியாவில் அறிமுகமானது. இதன் கீழ் ஒப்போ ரெனோ 11 5ஜி (Oppo Reno 11 5G) மற்றும் ஒப்போ ரெனோ 11 ப்ரோ 5ஜி (Oppo Reno 11 Pro 5G) வெளியானது.
ப்ரோ வேரியண்டின் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஆப்ஷன் ரூ.39,999 க்கும், வெண்ணிலா வேரியண்ட்டின் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ,29,999 க்கும் இந்தியாவில் அறிமுகமானது. இதைப்போலவே ரெனோ 12 ப்ரோ மாடலானது ரூ.40,000 க்குள் என்கிற பட்ஜெட்டிலும், ரெனோ 11 மாடலானது ரூ.30,000 க்குள் என்கிற பட்ஜெட்டிலும் அறிமுகம் செய்யப்படலாம்.
முன்னரே குறிப்பிட்டபடி, போக்கோ நிறுவனமானது அதன் எஃப் சீரிஸின்கீழ், வருகிற மே 23 ஆம் தேதி அன்று இந்தியாவிலும் உலகளவிலும் ஒரு புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யவுள்ளது. அது போக்கோ எஃப்6 ப்ரோ (Poco F6 Pro) மாடலாகும். இது சீனாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. அதே நாளில் போக்கோ எஃப்6 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








