இப்படி ஒரு OPPO போனுக்கு தான்.. இங்க பலரும் வெயிட்டிங்.. இந்த வருஷம் முழுக்க ஆர்டர் பிச்சிக்கும் போலயே!
ஒப்போ (OPPO) கம்பெனி கிட்ட இருந்து இப்படி ஒரு ஸ்மார்ட்போனை தானே இவ்ளோ நாளா எதிர்பார்த்தோம் என்று கூறவைக்கும்படியாக.. அட்டகாசமான அம்சங்களுடன் 2 புதிய ஒப்போ போன்கள் ஜன.12 ஆம் தேதியன்று இந்தியாவில் அறிமுகமாக உள்ளன. அதென்ன மாடல்கள்? என்ன விலை? என்னென்ன அம்சங்கள்?
என்ன மாடல்? நாம் இங்கே பேசுவது ஒப்போ ரெனோ 11 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை பற்றித்தான். இதன்கீழ் ஒப்போ ரெனோ 11 ப்ரோ (Oppo Reno 11 Pro) மற்றும் ஒப்போ ரெனோ 11 (Oppo Reno 11) என 2 மாடல்கள், ஜனவரி 12 ஆம் தேதியன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளன.

என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? உறுதிப்படுத்தப்பட்ட அம்சங்களை பொறுத்தவரை, ஒப்போ ரெனோ 11 மற்றும் ஒப்போ ரெனோ 11 ப்ரோ ஆகிய 2 ஸ்மார்ட்போன்களுமே ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) அடிப்படையிலான கலர்ஓஎஸ் 14 (ColorOS 14) கொண்டு இயங்கும்.
கூடுதலாக, இவ்விரு ஒப்போ ரெனோ ஸ்மார்ட்போன்களுமே 3 முக்கிய ஆண்ட்ராய்டு அப்டேட்கள் (Android Updates) மற்றும் நான்கு ஆண்டுகள் வரையிலான செக்யூரிட்டி அப்டேட்களை (Security Updates) பெறும் என்றும் உறுதியளிக்கப்பட்டுள்ளது. அதாவது இவ்விரு ஸ்மார்ட்போன்களுமே ஆண்ட்ராய்டு 17 வரையிலான ஓஎஸ் அப்டேட்டை பெறும் என்று அர்த்தம்.

ஒப்போ ரெனோ 11 சீரிஸின் சிப்செட்களை பொறுத்தவரை, ரெனோ 11 மாடலானது மீடியாடெக் டைமன்சிட்டி 7050 சிப்செட் (MediaTek Dimensity 7050 SoC) உடன் வரும். மறுகையில் உள்ள ரெனோ 11 ப்ரோ மாடலானது மீடியாடெக் டைமன்சிட்டி 8200 சிப்செட் (MediaTek Dimensity 8200 SoC) கொண்டு இயங்கும்.
ஒப்போ ரெனோ 11 சீரீஸில் கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்கள்: இரண்டுமே 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.70-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஓஎல்இடி கர்வ்டு டிஸ்பிளேக்களை கொண்டுள்ளது. இரண்டுமே 50 மெகாபிக்சல் மெயின் கேமராவை உள்ளடக்கிய ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பையும், 32 மெகாபிக்சல் செல்பீ கேமராவையும் கொண்டுள்ளது.

இவ்விரு ஸ்மார்ட்போன்களுக்கும் இடையேயான முக்கிய வேறுபாட்டை பொறுத்தவரை, ஒப்போ ரெனோ 11 ப்ரோவில் 80W சூப்பர் ஃபிளாஷ் சார்ஜ் ஆதரவுடன் 4,700எம்ஏஎச் பேட்டரி உள்ளது. மறுகையில் உள்ள ஒப்போ ரெனோ 11 ஆனது 67W சூப்பர் ஃபிளாஷ் சார்ஜுஜிற்கான ஆதரவுடன் 4,800எம்ஏஎச் பேட்டரியை கொண்டுள்ளது.
மேலும் இவ்விரு ஸ்மார்ட்போன்களுமே ரேம் மற்றும் ஸ்டோரேஜ் நிர்வாகத்தை மேம்படுத்தக்கூடிய ட்ரினிட்டி எஞ்சினை கொண்டுள்ளது. மேலும் ஏஐ எனேபிள்டு ஸ்மார்ட் டச், புதுப்பிக்கப்பட்ட ஃபைல் டாக், ஸ்மார்ட் இமேஜ் மேட்டிங் அம்சம் மற்றும் ஸ்மார்ட் சார்ஜிங் போன்ற பல ஏஐ அம்சங்களையும் கொண்டுள்ளது.
என்ன விலை? ஒப்போ ரெனோ 11 ஸ்மார்ட்போனின் பேஸிக் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.30,000 க்குள் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மறுகையில் உள்ள ஒப்போ ரெனோ 11 ப்ரோ ஸ்மார்ட்போன் சுமார் ரூ..40,000 க்குள் அறிமுகம் செய்யப்படலாம். இரண்டுமே ஜனவரி 12 ஆம் தேதி நடக்கும் இந்திய அறிமுகத்திற்கு பின் பிளிப்கார்ட் வழியாக விற்பனை செய்யப்படும்.
நினைவூட்டும் வண்ணம் இதற்கு முன் வெளியான ஒப்போ ரெனோ 10 சீரீஸின்கீழ் மொத்தம் 3 மாடல்கள் அறிமுகமானது: ஒப்போ ரெனோ 10 5ஜி (Oppo Reno 11 5G), ஒப்போ ரெனோ 10 ப்ரோ 5ஜி (Oppo Reno 11 Pro 5G) மற்றும் ஒப்போ ரெனோ 10 ப்ரோ பிளஸ் 5ஜி (Oppo Reno 11 Pro+ 5G). இந்த சீரீஸின் ஹை-எண்ட் வேரியண்ட் ஆன ப்ரோ பிளஸ் மாடல் தற்போது ரூ.37,999 க்கு வாங்க கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








