அவசரப்பட்டு வேற Phone வாங்கிடாதீங்க.. ரூ.20,000 பட்ஜெட்ல.. அடுத்த மாசம் அறிமுகமாகும் 2 புதிய OnePlus போன்கள்!
ரூ.20,000 - ரூ.25,000 பட்ஜெட்டில் புதிய ஸ்மார்ட்போன் வாங்கும் திட்டம் உங்களிடம் இருந்தால்.. இன்னும் சிறிது நாட்கள் காத்திருக்கவும். இன்னும் சரியாக சொல்ல வேண்டுமென்றால் ஜூன் வரை காத்திருக்கவும். ஏனென்றால் அடுத்த மாதம் 2 புதிய ஒன்பிளஸ் போன்கள் இந்தியாவில் அறிமுகமாகின்றன.
ஒன்பிளஸ் நிறுவனம் அதன் நோர்ட் சீரிஸின் கீழ் ஒன்பிளஸ் நோர்ட் 4 (OnePlus Nord 4) மற்றும் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ லைட் (OnePlus Nord CE 4 Lite) என்கிற 2 மாடல்களை அடுத்த மாதம் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது. இவ்விரு மாடல்களும் என்ன விலைக்கு வரும்? என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? இதோ விவரங்கள்:

என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? லீக்ஸ்டர் அபிஷேக் யாதவின் கூற்றுப்படி, இவ்விரு ஒன்பிளஸ் இரண்டு ஸ்மார்ட்போன்களும் முந்தைய சீரிஸை விட மாறுபட்ட மற்றும் மேம்படுத்தப்பட்ட சிப்செட்டை கொண்டிருக்கும். நோர்ட் 4 மாடலானது குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 பிளஸ் ஜென் 3 சிப்செட் (Qualcomm Snapdragon 7+ Gen 3 SoC) மூலம் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மறுகையில் உள்ள நோர்ட் சிஇ 4 லைட் மாடல் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 சிப்செட் (Qualcomm Snapdragon 6 Gen 1 SoC) கொண்டு இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஒன்பிளஸ் நோர்ட் 4 மாடலானது இந்த ஆண்டின் தொடக்கத்தில் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்பிளஸ் ஏஸ் 3வி (OnePlus Ace 3V) ஸ்மார்ட்போனின் ரீபிராண்டட் வெர்ஷனாக (Rebranded Version) இருக்கும் என்றும் நம்பப்படுகிறது.
நினைவூட்டும் வண்ணம் ஒன்பிளஸ் ஏஸ் 3வி ஆனது 50 மெகாபிக்சல் ஓஐஎஸ் (OIS) மெயின் கேமரா உடனான டூயல் ரியர் கேமரா அமைப்பு (Dual Rear Camera Setup), 16 மெகாபிக்சல் செல்பீ கேமரா, ஸ்னாப்டிராகன் 7 பிளஸ் ஜென் 3 சிப்செட் சிப்செட், 16ஜிபி வரை LPDDR5X ரேம் மற்றும் 512ஜிபி வரை UFS 4.0 ஸ்டோரேஜ், ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் போன்ற முக்கிய அம்சங்களை கொண்டுள்ளது.
ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 லைட் ஸ்மார்ட்போனில் எதிர்பார்க்கப்படும் அம்சங்களை பொறுத்தவரை, இது 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி அல்லது 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் அறிமுகம் செய்யப்படலாம். மேலும் இது ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 சிப்செட் மூலம் இயக்கப்படும் என்றும் கருதப்படுகிறது.
மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 67வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்கை (67W Fast Charging) ஆதரிக்கும் ஒரு பெரிய 5,500எம்ஏஎச் பேட்டரி பேக் செய்யப்படலாம். கடைசியாக ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 லைட் ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) அடிப்படையிலான நிறுவனத்தின் சொந்த ஆக்சிஜன் ஓஎஸ் (OxygenOS) உடன் அனுப்பப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்பார்க்கப்படும் விலை நிர்ணயத்தை பொறுத்தவரை, இந்திய சந்தையில் ஒன்பிளஸ் நோர்ட் 4 ஸ்மார்ட்போன் ரூ. 25,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படலாம். அதேசமயம் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 லைட் மாடலின் விலை ரூ.20,000 க்குள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது இவ்விரு ஸ்மார்ட்போன்களுமே கடந்த ஆண்டு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்பிளஸ் நோர்ட் 3 (OnePlus Nord 3) மற்றும் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட் (OnePlus Nord CE 3 Lite) ஆகியவற்றின் விலைக்கு ஏற்ப இருக்கும்.


Click it and Unblock the Notifications








