எனக்கு END-ஏ கிடையாது டா.. 4G ஆதரவு, 15 நாள் பேட்டரி உடன் NOKIA 108, NOKIA 125 2024 மாடல்கள் அறிமுகம்!
நோக்கியா (NOKIA) பிராண்டிங்கின் கீழ் மொபைல் போன்கள் மற்றும் ஸ்மார்ட்போன்களை தயாரிக்கும் உரிமம் பெற்றுள்ள எச்எம்டி க்ளோபல் (HMD Global) நிறுவனமானது கடந்த சில மாதங்களாகவே நோக்கியாவின் பெயரை புறக்கணித்துவிட்டு, நோக்கியா லோகோவிற்கு (NOKIA Logo) பதிலாக தனது சொந்த எச்எம்டி லோகோ (HMD Logo) உடனான மொபைல் போன்கள் மற்றும் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது.
இது நோக்கியா ரசிகர்கள் மத்தியில் சலசலப்பையும்.. "அவ்ளோதான் நோக்கியா கதை முடிந்தது" என்கிற வருத்தத்தையும் ஏற்படுத்தி இருந்தது. இதற்கிடையில் "எனக்கு எண்ட்டே கிடையாது டா!" என்று கூறும்படியாக.. நோக்கியா நிறுவனத்தின் 2 பிரபலமான மொபைல் போன்கள், சொந்த நோக்கியா பிராண்டிங்கின் கீழ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

நோக்கியா நிறுவனத்தின் பிரபலமான கிளாசிக் மொபைல் போன்களான நோக்கியா 108 (NOKIA 108) மற்றும் நோக்கியா 125 (NOKIA 125) ஆகிய மாடல்களின் 2024 வெர்ஷன்கள் (2024 Versions) அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. சுவாரசியமாக இவ்விரு மாடல்களுமே 4ஜி ஆதரவுடன் (4G Support) வருகின்றன. வேறு என்னென்ன அம்சங்களை கொண்டுள்ளன? இவைகளின் விலை நிர்ணயம் என்ன? இதோ விவரங்கள்:
முக்கிய அம்சங்களை பொறுத்தவரை இவ்விரு மாடல்களுமே - வயர்டு மற்றும் வயர்லெஸ் மோடுகளுடன் (Wired and Wireless Mode) கூடிய எஃப்எம் ரேடியோ (FM Radio) உடன் வருகிறது மற்றும் எம்பி3 பிளேயரையும் (MP3 Player) கொண்டுள்ளது. மேலும் 2 போன்களிலும் நோக்கியாவின் கிளாசிக் ஸ்னேக் கேம் (Classic Snake Game) உள்ளது. டிஸ்பிளே அளவும் ஒரே மாதிரியாக இருக்கிறது; இரண்டுமே 2.0 இன்ச் டிஸ்பிளேவை கொண்டுள்ளன!
முக்கிய வேறுபாட்டை பொறுத்தவரை நோக்கியா 108 4ஜி (2024) மாடல் ஆனது 1450mAh பேட்டரியை கொண்டுள்ளது மற்றும் நோக்கியா 125 4ஜி (2024) மாடல் ஆனது 1000mAh பேட்டரியை பேக் செய்கிறது அதாவது நோக்கியா 125 4ஜி (2024) மாடல் ஆனது சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நோக்கியா 110 4ஜி 2024 (Nokia 110 4G 2024) மாடலின் ரீபிராண்டட் வெர்ஷனை (Rebranded Version) போல இருக்கிறது. அதே நேரத்தில் நோக்கியா 108 4ஜி (2024) மாடலின் அம்சங்கள் எச்எம்டி 105 4ஜி (HMD 105 4G) மாடலுடன் பொருந்துகின்றன.
விரிவான அம்சங்களை பொறுத்தவரை, நோக்கியா 108 4ஜி (2024) மற்றும் நோக்கியா 125 4ஜி (2024) ஆகிய இரண்டு மாடல்களிலும் வாய்ஸ் ரெக்கார்டர் (Voice Recorder) மற்றும் டூயல் பிளாஷ் லைட் (Dual Flash Light) உள்ளன. மேலும் இரண்டு போன்களுமே 2000 காண்டாக்ட்களை சேமிப்பதற்கான ஸ்பேஸை (Space for saving up to 2000 contacts) கொண்டுள்ளன.
ரேம் மற்றும் ஸ்டோரேஜை பொறுத்தவரை 128எம்பி ரேம் மற்றும் 64எம்பி மெமரியை (128MB RAM and 64MB Internal Storage) கொண்டுள்ளன. சுவாரசியமாக இது மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்டிற்கான ஆதரவையும் (MicroSD Card Slot Support) கொண்டுள்ளது. இதன் மூலம் இவ்விரு போன்களின் ஸ்டோரேஜையும் மேலும் நீட்டிக்கலாம்.
முன்னரே குறிப்பிட்டபடி இரண்டுமே நோக்கியாவின் பழைய ஸ்னேக் கேமுடன் வருகின்றன. கூடவே கிளவுட் ஆப்ஸ் மற்றும் சர்வீஸ்களையும் (Cloud Apps and Services) வழங்குகின்றன. நோக்கியா 108 4ஜி (2024) மாடலின் 1450mAh பேட்டரியை ஒருமுறை சார்ஜ் செய்தால் 15 நாட்கள் வரை ஸ்டேண்ட்பை டைம்-ஐ (15 days of standby time) வழங்கும் என்று கூறப்படுகிறது.
நோக்கியா 108 4ஜி மற்றும் நோக்கியா 125 4ஜி 2024 வெர்ஷன்கள் விலை விவரங்கள்: இவ்விரு மாடல்களின் விலை மற்றும் விற்பனை விவரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இருப்பினும் இரண்டுமே நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளன. நோக்கியா 108 4ஜி 2024 மாடல் ஆனது பிளாக் (Black) மற்றும் சியான் (Cyan) கலர்களில் கிடைக்கிறது, அதே நேரத்தில் நோக்கியா 125 4ஜி 2024 மாடல் ஆனது ப்ளூ (Blue) மற்றும் டைட்டானியம் (Titanium) ஷேட்களில் வருகிறது.


Click it and Unblock the Notifications