Jio Phone-க்கு வேட்டு.. ஆள் ஆளுக்கு 2 ஆர்டர் போட்றாங்க.. 4G ஆதரவுடன் NOKIA 220 மற்றும் NOKIA 235 அறிமுகம்!
4ஜி ஆதரவுடன் இந்தியாவில் வாங்க கிடைக்கும் ஜியோ போன்ளுக்கு போட்டியாக நோக்கியா நிறுவனமானது 2 புதிய 2024 பீச்சர் போன் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. அவைகள் நோக்கியா 220 4ஜி (Nokia 220 4G) மற்றும் நோக்கியா 235 4ஜி (Nokia 235 4G) மாடல்கள் ஆகும். இவ்விரு போன்களும் நோக்கியா 3210 மாடல் (Nokia 3210) உடன் இணைந்து இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. நோக்கியா 220 4ஜி மற்றும் நோக்கியா 235 4ஜி மாடல்களின் விலை என்ன? என்னென்ன அம்சங்களை பேக் செய்கின்றன? எங்கே வாங்குவது? இதோ விவரங்கள்:
இவ்விரு போன்களிலும் 4ஜி ஆதரவை (4G Support) தவிர்த்து வேறு என்ன ஸ்பெஷல்? புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட இவ்விரு பீச்சர் போன்களுமே 2.8-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளேவுடன் வருகிறது. நோக்கியா நிறுவனத்தின் கூற்றுப்படி, இவ்விரு மாடல்களுமே 9.8 மணிநேர பேட்டரி லைஃப்பை வழங்கும்.

சுவாரசியமாக இவ்விரு போன்களுமே யுபிஐ (UPI) பரிவர்த்தனைகள் மற்றும் கிளவுட் ஆப்களுக்கான ஆதரவை கொண்டுள்ளது. குறிப்பாக நோக்கியா 235 4ஜி மாடலானது இண்டர்நெட் மூலம் பொழுதுபோக்கு, வணிகம் அல்லது எஜுகேஷன் கன்டென்ட்-ஐ அணுக உதவுகிறது. கடைசியாக இவ்விரு மாடல்களுமே நோக்கியாவின் ஐகானிக் மற்றும் கிளாசிக் ஸ்னேக் கேம்-ஐ ப்ரீ இன்ஸ்டால்டு செய்துள்ளன.
நோக்கியா 220 4ஜி மற்றும் நோக்கியா 235 4ஜி 2024 மாடல்களின் மற்ற அம்சங்கள்: இரண்டு மாடல்களுமே 64எம்பி ரேம் மற்றும் 128எம்பி இன்பில்ட் ஸ்டோரேஜுக்கான ஆதரவுடன் யுனிசாக் டி107 சிப்செட்கள் மூலம் இயக்கப்படுகின்றன. மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக ஸ்டோரேஜ் திறனை 32ஜிபி வரை விரிவாக்கவும் முடியும். இவ்விரு போன்களுமே எஸ்30+ ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்குகின்றன.

நோக்கியா 220 4ஜி 2024 மாடலின் பேக் பேனலில் எல்இடி டார்ச் மட்டுமே பொருத்தப்பட்டிருந்தாலும், நோக்கியா 235 4ஜி 2024 ஆனது 2 மெகாபிக்சல் ரியர் கேமரா சென்சார் உடன் வருகிறது. மேலும் இரண்டு போன்களும் 1,450mAh நீக்கக்கூடிய பேட்டரியை பேக் செய்கின்றன மற்றும் யூஎஸ்பி டைப்-சி சார்ஜிங் போர்ட்களை கொண்டுள்ளன.
நோக்கியா 220 4ஜி மற்றும் நோக்கியா 235 4ஜி 2024 ஆகிய இரண்டுமே 3.5மிமீ ஆடியோ ஜாக்குகளை கொண்டுள்ளது மற்றும் எம்பி3 பிளேயர் ஆதரவுடன் வயர்டு மற்றும் வயர்லெஸ் எப்எம் ரேடியோ இணைப்பையும் ஆதரிக்கின்றன. யுபிஐ ஆதரவை பொறுத்தவரை இந்திய தேசிய கொடுப்பனவு கழகத்தால் (NPCI) அங்கீகரிக்கப்பட்ட யுபிஐ ஆப் உடன் ப்ரீ-இண்ஸ்டால்டு செய்யப்பட்டுள்ளன.

மேலும் இவ்விரு மாடல்களிலும் உள்ள பில்ட்-இன் கிளவுட் ஆப்ஸ் வழியாக பயனர்கள் யூட்யூப் ஷார்ட்ஸ் மற்றும் யூட்யூப் மியூசிக் மற்றும் நியூஸ் மற்றும் வானிலை அறிவிப்புகளை அணுக முடியும். இவ்விரு மாடல்களுடன் அறிமுகமான நோக்கியா 3210 மாடலும் கூட மேற்கண்ட பெரும்பாலான அம்சங்களை கொண்டுள்ளது. அதன் விலை மற்றும் விரிவான அம்சங்களை அறிய இங்கே கிளிக் செய்யவும்.
நோக்கியா 220 4ஜி மற்றும் நோக்கியா 235 4ஜி 2024 மாடல்களின் விலை மற்றும் விற்பனை விவரங்கள்: நோக்கியா 220 4ஜி 2024 மாடல் ஆனது இந்தியாவில் ரூ.3,249 க்கும், நோக்கியா 235 4ஜி 2024 மாடல் ஆனது ரூ.3,749 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இவ்விரு பீச்சர் போன்களும் பிரபல இகாமர்ஸ் வலைத்தளமான அமேசான் இந்தியா மற்றும் நோக்கியா பிராண்டட் போன்களை தயாரிக்கும் உரிமம் பெற்றுள்ள எச்எம்டி நிறுவனத்தின் எச்எம்டி இந்தியா இணையதளம் மற்றும் ஆஃப்லைன் ரீடெய்ல் ஸ்டோர்களின் வழியாக வாங்க கிடைக்கின்றன. நோக்கியா 220 4ஜி 2024 ஆனது பிளாக் மற்றும் பீச் கலர் ஆப்ஷன்களிலும், அதேசமயம் நோக்கியா 235 4ஜி 2024 ஆனது பிளாக், ப்ளூ மற்றும் பர்பிள் கலர் ஆப்ஷன்களிலும் வெளியாகியுள்ளது,


Click it and Unblock the Notifications








