Home
Mobile

வாங்குனா இந்த Motorola போனை வாங்கணும்.. ஜூன் 25 வரைக்கும் பல்லை கடிச்சிக்கிட்டு வெயிட் பண்ணுங்க!

மோட்டோரோலா (Motorola) நிறுவனம் தனது லேட்டஸ்ட் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஆன மோட்டோரோலா எட்ஜ் 50 அல்ட்ராவை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து ஒருசில நாட்களே ஆகும் நிலைப்பாட்டில், இந்நிறுவனம் தனது அடுத்த ஃபிளிப் போன்களின் வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது. அது மோட்டோரோலா ரேஸ்ர் 50 சீரிஸ் ஆகும். இதன்கீழ் 2 மாடல்கள் அறிமுகமாகும்: ஒரு ஸ்டாண்டர்ட் மற்றும் அல்ட்ரா வெர்ஷன். இது சரியாக எப்போது அறிமுகமாகும்? என்ன விலைக்கு வரும்? என்ன அம்சங்களை பேக் செய்யும்? இதோ விவரங்கள்:

மோட்டோரோலா ரேஸ்ர் 50 சீரிஸ் எப்போது அறிமுகமாகும்? இவ்விரு ஸ்மார்ட்போன்களும் ஜூன் 25 ஆம் தேதி உலக சந்தைகளுக்கு வரும் என்று மோட்டோரோலா நிறுவனம் உறுதி செய்துள்ளது. இந்தியாவில் சரியாக எப்போது அறிமுகமாகும் என்கிற தேதி இன்னும் வெளியிடப்படவில்லை என்றாலும் கூட, நிச்சயம் இவ்வியிரு மாடல்களும் கூடிய விரைவில் இங்கே அறிமுகமாகும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

வாங்குனா இந்த Motorola போனை வாங்கணும்.. ஜூன் 25 வரை வெயிட் பண்ணுங்க!

மோட்டோரோலா நிறுவனம் கடந்த ஆண்டு பின்பற்றிய லான்ச் டைம்லைனை வைத்து பார்க்கும் போது மோட்டோரோலா ரேஸ்ர் 50 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் உலக சந்தைகளில் அறிமுகமானஅடுத்த மாதமே இந்தியாவிற்கும் வரக்கூடும். ஆக ஜூலை மாத வாக்கில் மோட்டோரோலா ரேஸ்ர் 50 மற்றும் மோட்டோரோலா ரேஸ்ர் 50 அல்ட்ரா ஸ்மார்ட்போன்களின் இந்திய அறிமுகத்தை நாம் எதிர்பார்க்கலாம்.

மோட்டோரோலா ரேஸ்ர் 50 சீரிஸ் என்ன விலைக்கு வரும்? இவ்விரு ஸ்மார்ட்போன்களின் விலையும் கடந்த ஆண்டு இந்தியாவில் இருந்ததை போலவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் உலக சந்தைகளில் பழைய விலை வரம்பில் தான் 2024 மாடல்களை அறிமுகம் செய்ய மோட்டோரோலா நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி பார்த்தால் மோட்டோரோலா ரேஸ்ர் 50 ஸ்மார்ட்போன் ஆனது இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமார் ரூ.80,460 க்கு அறிமுகம் செய்யப்படலாம். மறுகையில் உள்ள மோட்டோரோலா ரேஸ்ர் 50 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் 12ஜிபி ரேம் + 512ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது சுமார் ரூ.107,310 க்கு அறிமுகம் செய்யப்படலாம்.

இங்கே சுவாரசியமான விஷயம் என்னவென்றால்.. மேற்கண்ட விலைகள் உண்மையான ஐரோப்பிய விலைகளாக மாறினாலும் கூட இந்தியாவில் இந்த அளவிற்கு அதிகமான விலை நிர்ணயம் அறிவிக்கப்படாது; இதைவிட மிகவும் குறைவான விலைகளே அறிவிக்கப்படும் .நினைவூட்டும் வண்ணம் மோட்டோரோலா ரேஸ்ர் 40 அல்ட்ரா இந்தியாவில் ரூ.89,999 க்கும், மோட்டோரோலா ரேஸ்ர் 40 ரூ.59,999 க்கும் தான் அறிமுகமானது. பெரும்பாலும் அடுத்த தலைமுறை மாடல்களும் இதே போன்ற விலை வரம்பின்கீழ் தான் இந்தியாவில் அறிமுகப்படும்.

மோட்டோரோலா ரேஸர் 50 அல்ட்ராவில் எதிர்பார்க்கப்படும் முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, இது ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 3 சிப்செட், 50எம்பி மெயின் சென்சார் மற்றும் 50எம்பி 2எக்ஸ் டெலிஃபோட்டோ கேமரா, 6.9-இன்ச் FHD+ மெயின் டிஸ்பிளே மற்றும் 3.6-இன்ச் கவர் டிஸ்பிளே மற்றும் 4000mAh பேட்டரி போன்றவைகளை கொண்டிருக்கலாம்.

மறுகையில் உள்ள மோட்டோரோலா ரேஸர் 50 ஸ்மார்ட்போனில் மிகப்பெரிய 3.63-இன்ச் கவர் டிஸ்பிளே, முந்தைய மாடலில் காணப்பட்ட அதே 6.9-இன்ச் FHD+ பேனல், 4200mAh பேட்டரி, மீடியாடெக் டைமன்சிட்டி 7300எக்ஸ் சிப்செட் போன்றவைகளை பேக் செய்யலாம். மேற்கண்ட அம்சங்கள் எல்லாமே லீக்ஸ் வழியாக கிடைத்த விவரங்கள் ஆகும் என்பதால், அறிமுகத்தின் போது அம்சங்களில் சில மாற்றங்கள் இருக்கலாம் என்பதையும் இங்கே குறிப்பிட விரும்புகிறோம்.

சமீபத்தில் இந்தியாவில் அறிமுகமான மோட்டோரோலா எட்ஜ் 50 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் விலை மற்றும் விற்பனை விவரங்களை பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்போனின் 12ஜிபி + 512ஜிபி ஆப்ஷன் ரூ.59,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அறிமுக சலுகையின் ஒரு பகுதியாகஇது ரூ.49,999 என்கிற தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது; கூடவே ரூ.5,000 இன்ஸ்டன்ட் பேங்க் ஆபரும் அறிவிக்கப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
2 New Motorola Foldable Phones Razr 50 and Razr 50 Ultra Price Leaked Ahead Launch on June 25
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X