Home
Mobile

மார்ச் 11 முதல் விற்பனை.. மொத்த மார்க்கெட்டும் இந்த 2 போனுக்கு கீழ வரப்போகுது.. நச் விலை, நறுக் அம்சங்கள்!

ஷாவ்மீ (Xiaomi) நிறுவனத்திடம் இருந்து, ஒட்டுமொத்த இந்தியர்களும் எதிர்பார்த்த 2 ஸ்மார்ட்போன்கள் இன்று (மார்ச் 7 ஆம் தேதி) இந்திய சந்தையில் அறிமுகமானது. அதென்ன ஸ்மார்ட்போன்கள்? என்ன விலை? என்னென்ன அம்சங்கள்? எப்போது முதல் விற்பனை? என்னென்ன சலுகைகள்? இதோ விவரங்கள்:

என்ன மாடல்கள்? ஷாவ்மீ நிறுவனம் அதன் ஷாவ்மீ 14 சீரிஸின்கீழ் ஷாவ்மீ 14 (Xiaomi 14) மற்றும் ஷாவ்மீ 14 அல்ட்ரா (Xiaomi 14 Ultra) என்கிற 2 மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. ஷாவ்மீ நிறுவனம் அதன் அல்ட்ரா வேரியண்ட்டை இந்தியாவில் அறிமுகம் செய்வது இதுவே முதல் முறை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

Xiaomi 14, 14 Ultra இந்தியாவில் அறிமுகம்: விலை, அம்சங்கள்!

ஷாவ்மீ 14 அல்ட்ரா முக்கிய அம்சங்கள்: இது 120Hz ரெப்ரெஷ் ரேட் உடனான 6.73-இன்ச் LTPO AMOLED மைக்ரோ-கர்வ்டு டிஸ்பிளேவை கொண்டுள்ளது. ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான ஹைப்பர்ஓஎஸ் மூலம் இயங்குகிறது.

கேமராக்களை பொறுத்தவரை இது குவாட் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. அதில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) உடனான 50 மெகாபிக்சல் சோனி LYT900 மெயின் கேமரா மற்றும் முறையே 3.2x ஆப்டிகல் ஜூம் மற்றும் 5x ஆப்டிகல் ஜூம் உடனான இரண்டு 50 மெகாபிக்சல் சோனி IMX858 சென்சார்கள் மற்றும் கடைசியாக 50 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமரா உள்ளது.

Xiaomi 14, 14 Ultra இந்தியாவில் அறிமுகம்: விலை, அம்சங்கள்!

ஷாவ்மீ 14 அல்ட்ராவின் முன்பக்கத்தில் 32 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 90W வயர்டு, 80W வயர்லெஸ் மற்றும் 10W வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரியை பேக் செய்கிறது. கடைசியாக இது தூசி மற்றும் ஸ்பிளாஷ் எதிர்ப்பிற்கான ஐபி68 ரேடிங்கையும் கொண்டுள்ளது.

ஷாவ்மீ 14 முக்கிய அம்சங்கள்: ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான ஹைப்பர்ஓஎஸ் உடன் வரும் இந்த ஸ்மார்ட்போன் 6.36-இன்ச் LTPO AMOLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது 12ஜிபி LPDDR5 ரேம் மற்றும் 512ஜிபி UFS 4.0 ஸ்டோரேஜுடன் இணைந்து 4என்எம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் மூலம் இயங்குகிறது.

Xiaomi 14, 14 Ultra இந்தியாவில் அறிமுகம்: விலை, அம்சங்கள்!

கேமராக்களை பொறுத்தவரை, இதில் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் உள்ளது. அதில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) உடனான 50-மெகாபிக்சல் லைட் ஃப்யூஷன் 900 இமேஜ் சென்சார், ஓஐஎஸ் உடனான
50-மெகாபிக்சல் 75மிமீ ப்ளோட்டிங் டெலிஃபோட்டோ கேமரா மற்றும் 50-மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா உள்ளது. முன்பக்கத்தில் 32-மெகாபிக்சல் செல்பீ கேமராவை கொண்டுள்ளது.

டால்பி அட்மாஸ் ஆதரவுடன் நான்கு மைக்ரோஃபோன் சீரீஸ் மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்களை கொண்டுள்ள ஷாவ்மீ 14 ஸ்மார்ட்போன் ஆனது தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபி68 ரேட்டிங் கட்டமைப்பையும் கொண்டுள்ளது. கடைசியாக இது 90W வயர்டு சார்ஜிங் மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 4,610mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.

ஷாவ்மீ நிறுவனத்தின் கூற்றுப்படி இதன் 90W ஹைப்பர்சார்ஜ் தொழில்நுட்பம் ஆனது 31 நிமிடங்களில் பேட்டரியை 0 முதல் 100 சதவீதம் வரை நிரப்பும். மறுகையில் உள்ள இதன் 50W வயர்லெஸ் சார்ஜிங் ஆனது 46 நிமிடங்களில் பூஜ்ஜியத்திலிருந்து 100 சதவிகிதம் வரை பேட்டரியை நிரப்புவதாக கூறப்படுகிறது.

என்ன விலை? ஷாவ்மீ 14 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் சிங்கிள் 16ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.99,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது பிளாக் மற்றும் ஒயிட் கலர் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கும். இந்த ஸ்மார்ட்போனின் முன்பதிவு மார்ச் 11 ஆம் தேதி முதல் தொடங்கும். ரூ.9999 செலுத்தி முன்பதிவு செய்பவர்களுக்கு ஏப்ரல் 8 முதல் டெலிவரி தொடங்கும். வழக்கமான விற்பனை ஏப்ரல் 12 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு தொடங்கும்.

மறுகையில் உள்ள ஷாவ்மீ 14 ஸ்மார்ட்போனின் 12ஜிபி ரேம் + 512ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.69,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது கிளாசிக் ஒயிட், ஜேட் க்ரீன் மற்றும் மேட் பிளாக் என்கிற 3 கலர் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கும். இது அமேசான், பிளிப்கார்ட் வழியாக மார்ச் 11 ஆம் தேதி மதியம் 12 மணி முதல் வாங்க கிடைக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
2 New Flagship Phones Xiaomi 14 Xiaomi 14 Ultra Launched in India Price Pre Order Sale From March 11
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X