இன்னும் 2 வாரம் தான்.. அதுக்கப்புறம் இந்த 2 போன்களும் தான் மார்க்கெட்ல கிங்-ஆ இருக்கும்!

|

வருகிற டிசம்பர் 8 ஆம் தேதியன்று - ஒட்டுமொத்த இந்திய ஸ்மார்ட்போன் சந்தையை அதகளப்படுத்த போகும் அளவிற்கு - இரண்டு புதிய ப்ரோ லெவல் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன!

அதென்ன ஸ்மார்ட்போன்கள்? அதகளம் செய்யும் அளவிற்கு அப்படி என்ன அம்சங்களை பேக் செய்கிறது? அவைகள் என்ன விலைக்கு வெளியாகும்? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்!

இரண்டுமே ப்ரோ மாடல்கள் தான்!

இரண்டுமே ப்ரோ மாடல்கள் தான்!

நாம் இங்கே பேசும் இரண்டு ஸ்மார்ட்போன்களுமே சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ரியல்மியின் புத்தம் புதிய மொபைல் போன்கள் ஆகும்.

அவைகள் ரியல்மி 10 ப்ரோ (Realme 10 Pro) மற்றும் ரியல்மி 10 ப்ரோ பிளஸ் (Realme 10 Pro Plus) ஸ்மார்ட்போன்கள் ஆகும்!

15 நிமிடங்களில் 100% சார்ஜ் ஆகும் Xiaomi-யின் ஃபேமஸ் ஆன 5G Phone மீது திடீர் விலைக்குறைப்பு!15 நிமிடங்களில் 100% சார்ஜ் ஆகும் Xiaomi-யின் ஃபேமஸ் ஆன 5G Phone மீது திடீர் விலைக்குறைப்பு!

இந்த ஸ்மார்ட்போன்கள் எதன் வழியாக வாங்க கிடைக்கும்?

இந்த ஸ்மார்ட்போன்கள் எதன் வழியாக வாங்க கிடைக்கும்?

ரியல்மி நிறுவனத்தின் இந்த இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களுமே வருகிற டிசம்பர் 8 ஆம் தேதியன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளன.

இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், இந்த ஸ்மார்ட்போன்கள் குறிப்பிட்ட தேதியன்று, மதியம் 12.30 மணிக்கு தொடங்கும் வெளியீட்டு நிகழ்வின் போது அறிமுகம் செய்யப்படும்.

வழக்கம் போல, இந்த அறிமுக நிகழ்வானது நிறுவனத்தின் சமூக ஊடக சேனல்களின் வழியாக லைவ் ஸ்ட்ரீம் செய்யப்படும் மற்றும் Flipkart வழியாக வாங்க கிடைக்கும்!

Relame 10 Pro: என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்?

Relame 10 Pro: என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்?

ரியல்மி 10 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 1080x2400 பிக்சல் ரெசல்யூஷனை கொண்ட 6.7 இன்ச் அளவிலான ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இது 120Hz ரெஃப்ரெஷ் ரேட்டையும் வழங்குகிறது!

இது 12ஜிபி வரையிலான ரேம் மற்றும் 256ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜி உடன் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 1080 சிப்செட்டை கொண்டுள்ளது; அதாவது இது ஒரு 5ஜி ஸ்மார்ட்போன் ஆகும்.

Redmi அங்குட்டு போ.. Realme இங்குட்டு போ! வெறும் ரூ.14,799 க்கு புது மாடலை இறக்கிவிட்ட OnePlus!Redmi அங்குட்டு போ.. Realme இங்குட்டு போ! வெறும் ரூ.14,799 க்கு புது மாடலை இறக்கிவிட்ட OnePlus!

என்ன கேமரா, எவ்வளவு mAh பேட்டரி?

என்ன கேமரா, எவ்வளவு mAh பேட்டரி?

டூயல் சிம் ஆதரவுடன் வரும் ரியல்மி 10 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது Android 13 ஓஎஸ் கொண்டு இயங்குகிறது.

கேமராக்களை பொறுத்தவரை, இது 108எம்பி மெயின் சென்சார் + 2எம்பி போட்ரைட் கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. முன்பக்கத்தை பொறுத்தவரை, இது 16எம்பி செல்பீ ஷூட்டர் உள்ளது.

கடைசியாக, Relame 10 Pro 5G ஆனது 33W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது!

Relame 10 Pro Plus: என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்?

Relame 10 Pro Plus: என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்?

மறுகையில் உள்ள Realme 10 Pro+ ஸ்மார்ட்போன் ஆனது 1080x2412 பிக்சல் ரெசல்யூஷனை கொண்ட 6.7-இன்ச் அளவிலான ஃபுல் எச்டி+ 120Hz டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. மீடியாடெக் 1080 சிப்செட்டை பேக் செய்வதால் இதுவும் கூட ஒரு 5G ஸ்மார்ட்போன் ஆகும்.

மேலும் இது இன்-டிஸ்ப்ளே ஃபிங்கர் பிரிண்ட் சென்சார், ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ், 108MP + 8MP + 2MP என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப், 16MP செல்பீ கேமரா மற்றும் 67W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5000mAh பேட்டரி போன்ற அம்சங்களையும் பேக் செய்கிறது!

நல்லதே நடக்கும்! 13 ஆண்டுகளுக்கு பிறகு ISRO செய்யப்போகும் காரியம்! கொஞ்சம் மிஸ் ஆனாலும் மானம் போயிடும்!நல்லதே நடக்கும்! 13 ஆண்டுகளுக்கு பிறகு ISRO செய்யப்போகும் காரியம்! கொஞ்சம் மிஸ் ஆனாலும் மானம் போயிடும்!

என்ன விலைக்கு வரும்?

என்ன விலைக்கு வரும்?

எதிர்பார்க்கப்படும் விலை நிர்ணயத்தை பொறுத்தவரை, Realme 10 Pro ஸ்மார்ட்போனின் 8GB + 256GB ஆப்ஷன் ஆனது தோராயமாக ரூ.18,300 க்கு வெளியாகலாம்.

மறுகையில் உள்ள Realme 10 Pro+ ஸ்மார்ட்போனின் 8GB + 128GB ஆப்ஷன் ஆனது தோராயமாக ரூ.19,500 க்கு அறிமுகம் செய்யப்படலாம்.

மேற்கண்ட விலைகள் சீன விலை நிர்ணயம் ஆகும். இந்திய விலையும் அதே அளவில் தான் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
2 New 5G Smartphones Coming to India From China Realme 10 Pro Series Launching on December 8th

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X