Home
Mobile

Realme ஃபார்முக்கு வந்துட்டான்யா.. டிச.16 இல் 2 புதிய 5ஜி போன்கள் அறிமுகம்.. ரெண்டுமே பட்ஜெட் விலை!

1 ஆண்டுக்கு ஒரு சில ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்யும் பிராண்டுகளுக்கு மத்தியில் "கிட்டத்தட்ட" ஒவ்வொரு மாதமும் புதிய மாடல்களை அறிமுகம் செய்யும் பிராண்ட் ஆக இருந்து வந்த ரியல்மி (Realme) - தற்போது மீண்டும் ஃபார்முக்கு வந்துள்ளது போல் தெரிகிறது.

இந்நிறுவனம் மிகவும் சமீபத்தில் தான் இந்திய சந்தையில், பிளாக்ஷிப் பிரிவின் கீழ் ரியல்மி ஜிடி 8 ப்ரோ (Realme GT 8 Pro) மாடலை அறிமுகம் செய்த கையோடு, பட்ஜெட் விலையில் ரியல்மி பி4எக்ஸ் 5ஜி (Realme P4x 5G) மாடலையும் அறிமுகம் செய்தது.

Realme ஃபார்முக்கு வந்துட்டான்யா.. டிச.16 இல் 2 புதிய 5ஜி போன்கள்!

இன்னும் சொல்லப்போனால் ரியல்மி பி4எக்ஸ் 5ஜி மாடலின் விற்பனையே இன்று (டிசம்பர் 10) தான் தொடங்கியது. இதற்கிடையில் இந்நிறுவனம் வருகிற டிசம்பர் 16 ஆம் தேதி அன்று - மேலும் 2 புதிய 5ஜி ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யவுள்ளது.

அது - ரியல்மி நார்சோ 90 சீரீஸ் (Realme Narzo 90 Series) ஸ்மார்ட்போன்கள் ஆகும். இந்த சீரீஸின் கீழ் ரியல்மி நார்சோ 90 (Realme Narzo 90) மற்றும் ரியல்மி நார்சோ 90எக்ஸ் (Realme Narzo 90x) என்கிற 2 மாடல்கள் அறிமுகம் செய்யப்படலாம் என்றும், இரண்டுமே ஏஐ அடிப்படையிலான டூல்களுடன், மிகவும் போட்டிதன்மை வாய்ந்த விலையில் அறிமுகம் செய்யப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

அமேசான் இந்தியா (Amazon India) மற்றும் ரியல்மி இந்தியா (Realme India) வலைத்தளம் வழியாக டீஸ் செய்யப்பட்டு வரும் இந்த ஸ்மார்ட்போன்களின் பெரும்பாலான முக்கிய அம்சங்கள் இப்போதைக்கு மறைக்கப்பட்டுள்ளன. வெளியீட்டு நாள் மிகவும் நெருக்கமாக இருப்பதால், அவைகள் கூடிய விரைவில் வெளிப்படுத்தப்படலாம்.

எதிர்பார்க்கப்படும் அம்சங்களை பொறுத்தவரை, ரியல்மி நார்சோ 90 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது கார்பன் பிளாக் மற்றும் விக்டரி கோல்ட் கலர் ஆப்ஷன்களில் வரும். இது 6GB + 128GB, 8GB + 128GB, 8GB + 256GB மற்றும் 12GB + 256GB ஸ்டோரேஜ் ஆப்ஷன்களின் கீழ் அறிமுகம் செய்யப்படலாம்

ரியல்மி நார்சோ 90 5ஜி மாடல் ஆனது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.78-இன்ச் FHD+ OLED டிஸ்பிளே, 50 மெகாபிக்சல் ப்ரைமரி ரியர் கேமரா, மீடியாடெக் டைமன்சிட்டி 7300 சிப்செட் (MediaTek Dimensity 7300 SoC) மற்றும் 80W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 6,500mAh பேட்டரி ஆகிய அம்சங்களை பேக் செய்யலாம்.

ரியல்மி நார்சோ 90 5ஜி சீரீஸ் என்ன விலைக்கு அறிமுகம் செய்யப்படலாம்? இந்தியாவில் ரியல்மி நார்சோ 90 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ.20,000 க்குள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மறுகையில் உள்ள ரியல்மி நார்சோ 90எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ரூ.17,999 க்கு அறிமுகம் செய்யப்படலாம். சரியான விலை விவரங்கள் டிசம்வர் 16 அன்று நடக்கும் வெளியீட்டு நிகழ்வில் அறிவிக்கப்படும்.

இன்று முதல் விற்பனைக்கு வந்த ரியல்மி பி4எக்ஸ் 5ஜி விலை விவரங்கள்: இந்தியாவில் ரியல்மி பி4எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.15,499 க்கு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதே ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஆப்ஷன் மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் முறையே ரூ.16,999 மற்றும் ரூ.17,999 க்கு அறிமுகம் செய்யபட்டுள்ளது.

ரியல்மி பி4எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது மேட் சில்வர், எலிகண்ட் பிங்க் மற்றும் லேக் கிரீன் ஆகிய 3 கலர்களில் வாங்க கிடைக்கும். முன்னரே குறிப்பிட்டபடி இந்த போனின் விற்பனை இன்று (டிசம்பர் 10 ஆம் தேதி முதல்) தொடங்கியது. இது பிளிப்கார்ட் (Flipkart) மற்றும் ரியல்மி நிறுவனத்தின் ஆன்லைன் ஸ்டோர் வழியாக வாங்க கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
2 New 5G Phones Under Realme Narzo 90 Series Launching in India on December 16
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X