Home
Mobile

இந்த டிப்பார்ட்மென்ட்ல.. நான் தான் ராஜா.. விற்பனைக்கு வந்தன Asus-ன் 2 அல்டிமேட் போன்கள்.. என்ன விலை?

பெஸ்ட் கேமிங் ஸ்மார்ட்போன்கள் (Best Gaming Smartphones) என்கிற தேடலில் ஆசஸ் (Asus) நிறுவனத்தின் ஆர்ஓஜி போன் சீரிஸ் (ROG Phone Series) மாடல்களை அவ்வளவு எளிதாக கடந்து சென்றுவிட முடியாது. அந்த வரிசையில் லேட்டஸ்ட் ஆக 2 மாடல்கள் சேர்ந்தன.

ஆர்ஓஜி என்று சுருக்கமாக அழைக்கப்படும் ரிபப்ளிக் ஆஃப் கேமர்ஸ் என்பது ஆசஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமாகும். கேமிங் போன்கள் மீது மட்டுமே கவனம் செலுத்தும் இந்நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன்களாக ஆர்ஓஜி போன் 7 (ROG Phone 7) மற்றும் ஆர்ஓஜி போன் 7 அல்டிமேட் (ROG Phone 7 Ultimate) அறிமுகம் செய்யப்பட்டன.

Asus ROG Phone 7 சீரீஸ்: இந்திய விற்பனை ஆரம்பம்.. என்ன விலை?

தற்போது இந்த 2 போன்களுமே இந்தியாவில் வாங்க கிடைக்கின்றன.இவ்விரு போன்களுமே விஜய் சேல்ஸ் (ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன்) வழியாக வாங்க கிடைக்கிறது. மேலும் இந்த போன்கள் ஆசஸ் இந்தியா இ-ஸ்டோர் (Asus India e-Store), ஆசஸ் எக்ஸ்க்ளூஸிவ் ஸ்டோர்ஸ், ஆர்ஓஜி ஸ்டோர்ஸ் வழியாகவும் கூட வாங்க கிடைக்கும்.

12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜுடன் வரும் ஆசஸ் ஆர்ஓஜி போன் 7 ஆனது ரூ.74,999 க்கு வாங்க கிடைக்கும். இது பாண்டம் பிளாக் (Phantom Black) மற்றும் ஸ்டார்ம் ஒயிட் (Storm White) என்கிற 2 கலர் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படுகிறது.

மறுகையில் உள்ள ஆசஸ் ஆர்ஓஜி போன் 7 அல்டிமேட்டின் 16 ஜிபி ரேம் + 512 ஜிபி ஆப்ஷன் ரூ.99,999 க்கு வாங்க கிடைக்கிறது. இது ஆர்ஓஜி விஷன் PMOLED ரியர் கஸ்டமைசபிள் டிஸ்பிளே, ஏரோஆக்டிவ் கூலர் 7 உடனான ஏரோஆக்டிவ் போர்ட்டல் டோர் மற்றும் காப்பர் ஹீட்ஸின்க் ஃபின்ஸ் போன்றவைகளுடன் வருகிறது.

மற்ற அம்சங்களை பொறுத்தவரை, இரண்டிலுமே 165ஹெர்ட்ஸ் 6.78-இன்ச் AMOLED HDR10+ டிஸ்பிளே உள்ளன. இவைகள் 720ஹெர்ட்ஸ் வரையிலான டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் 23எம்எஸ் டச் லேட்டன்சியையும் ஆதரிக்கின்றன. மேலும் கேம்கூல் 7 கூலிங் சிஸ்டத்துடன் லேட்டஸ்ட் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 மொபைல் பிளாட்ஃபார்ம் மூலம் இயக்கப்படுகின்றன.

இந்த ஸ்மார்ட்போன்களில் உள்ள ஏர்டிரிக்கர் அல்ட்ராசோனிக் ட்ரிக்கர் பட்டன்கள் (AirTrigger Ultrasonic Trigger Buttons) மற்றும் கேம் கன்ட்ரோலுக்கான 10 மோஷன் கண்ட்ரோல் கெஸ்சர்கள் (10 Motion Control Gestures) ஆனது கன்சோல் போன்ற கேமிங் (Console-like Gaming) அனுபவத்தை வழங்குகின்றன.

ஸ்டீரியோ ஸ்பாஷியல் இம்மர்ஷனுக்காக (Stereo spatial immersion), இவைகள் டைராக் ஆடியோ (Dirac Audio) மற்றும் டைராக் விர்டுவோ (Dirac Virtuo) மூலம் இயக்கப்படும் 7-மேக்னட்டிக் சிமெட்ரிக்கல் ஸ்டீரியோ லவுட்ஸ்பீக்கர்களுடன் (7-magnet Symmetrical Stereo Loudspeakers) வருகின்றன. இந்த போன்கள் 3.5 மிமீ ஹெட்ஃபோன் ஜாக்கையும் ஆதரிக்கின்றன.

கேமராக்களை பொறுத்தவரை, இந்த 2 கேமிங் ஸ்மார்ட்போன்களுமே 50Mஎம்பி சோனி IMX766 பிளாக்ஷிப் ரியர் கேமராவை வழங்குகின்றன, இது லோ-லைட் செயல்திறன், 8கே ரெக்கார்டிங், இஐஎஸ் மற்றும் எச்டிஆர்10 வீடியோ போன்ற ஆதரவுகளை வழங்குகிறது, முன்பக்கத்தில் 32எம்பி செல்பீ கேமரா உள்ளது; அது இஐஎஸ் உடனான 4கே வீடியோ ரெக்கார்டிங்கை ஆதரிக்கிறது.

பேட்டரியை பொறுத்தவரை, 65W ஹைப்பர்சார்ஜ் ஆதரவை வழங்கும் 6000mAh பேட்டரியை கொண்டுள்ளன. ஆனால் பாக்ஸில் 30W ஹைப்பர்சார்ஜ் அடாப்டர் தான் உள்ளது. இது தவிர வைஃபை 7 (WiFi 7)கனெக்டிவிட்டி, மல்டி-லிங்க் ஆப்ரேஷன் (Multi-Link Operation), ஹைப்பர்ஃபியூஷன் (HyperFusion) தொழில்நுட்பம் போன்ற அம்சங்களையும் வழங்குகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
2 Latest Gaming Phones Asus ROG Phone 7 and ROG Phone 7 Ultimate Now Availbale To Buy in India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X