Home
Mobile

குவியும் ஆர்டர்! அவுட் ஆப் ஸ்டாக் ஆகிடும் போலயே.. முழுசா ரூ.16,000 டிஸ்கவுண்ட் பெற்ற Samsung போன்! என்ன மாடல்?

சாம்சங் (Samsung) நிறுவனத்தின் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஒன்றின் மீது முழுதாக ரூ.16,000 தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது, அதென்ன மாடல்? அதன் அசல் விற்பனை விலை என்ன? டிஸ்கவுண்ட்டிற்கு பிறகான ஆஃபர் விலை என்ன? இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாமா? அல்லது 2024 வரை காத்திருக்கலாமா? இதோ விவரங்கள்:

என்ன மாடல்? ரூ.16,000 தள்ளுபடியை பெற்றுள்ளது சாம்சங் கேலக்ஸி இஸட் ஃபோல்ட் 5 (Samsung Galaxy Z Fold 5) ஸ்மார்ட்போன் தான். இந்த சலுகை சாம்சங் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான சாம்சங் இந்தியா (Samsung India Website) வழியாக அணுக கிடைக்கிறது.

முழுசா ரூ.16,000 டிஸ்கவுண்ட் பெற்ற Samsung போன்! என்ன மாடல்?

அசல் விலை VS ஆஃபர் விலை: தற்போது சாம்சங் இந்தியா வலைதளத்தில் கேலக்ஸி இஸட் ஃபோல்ட் 5 ஸ்மார்ட்போன் ரூ.1,54,999 என்கிற ஆரம்ப விலையில் பட்டியலிடப்பட்டுள்ளது. நீங்கள் இதை எச்டிஎப்சி வங்கி கிரெடிட் கார்டு (HDFC bank credit card) வழியாக வாங்கினால் உங்களுக்கு ரூ.9,000 உடனடி தள்ளுபடி (Isntant Discount) கிடைக்கும்.

இதன் மூலம் கேலக்ஸி இஸட் ஃபோல்ட் 5-ன் விலையை ரூ.1,45,999 ஆக குறைக்கலாம். கூடுதலாக, சாம்சங் வழங்கும் எக்ஸ்சேஞ்ச் போனஸ் சலுகை (Exchange bonus offer) வழியாக உங்களுக்கு கூடுதலாக ரூ.7,000 தள்ளுபடியும் கிடைக்கும். இப்படியாக சாம்சங் கேலக்ஸி இஸட் ஃபோல்ட் 5-ன் இறுதி விலையை (Final Price) ரூ.1,38,999 ஆக குறைக்க முடியும். அதாவது உங்களுக்கு முழுதாக ரூ.16,000 டிஸ்கவுண்ட் கிடைக்கும்.

முழுசா ரூ.16,000 டிஸ்கவுண்ட் பெற்ற Samsung போன்! என்ன மாடல்?

எக்ஸ்சேஞ்ச் போனஸின் கீழ் கிடைக்கும் சலுகையானது வேறுபடும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இது நீங்கள் எக்ஸ்சேன்ஜ் செய்யும் பழைய ஸ்மார்ட்போனின் மாடல் மற்றும் அதன் தற்போதைய நிலையை பொறுத்து வேறுபடும். ஒருவேளை நீங்கள் பழைய போனை எக்ஸ்சேன்ஜ் செய்ய விரும்பாவிட்டாலும் கூட, எச்டிஎப்சி வங்கி கிரெடிட் கார்டு வழியிலான ரூ.9,000 தள்ளுபடி கிடைக்கும்.

இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாமா அல்லது 2024 வரை காத்திருக்கலாமா? எங்களை பொறுத்தவரை அடுத்த மாதம் வரை காத்திருப்பதே புத்திசாலித்தனம். ஏனென்றால் ஜன 26 ஆம் தேதிக்கு முன்பாக அதாவது இந்தியாவின் குடியரசு தினத்திற்கு (Republic Day) முன்பாக அமேசான் (Amazon), பிளிப்கார்ட் (Flipkart) உட்பட அனைத்து ஆன்லைன் விற்பனையாளர்களும் தத்தம் சிறப்பு விற்பனைகளை (Special Sales) அறிவிப்பார்கள்.

முழுசா ரூ.16,000 டிஸ்கவுண்ட் பெற்ற Samsung போன்! என்ன மாடல்?

அந்த நேரத்தில் கேலக்ஸி இஸட் ஃபோல்ட் 5-ன் விலை இன்னும் குறையலாம். இந்த இடத்தில் ஒன்பிளஸ் நிறுவனத்தின் முதல் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனான ஒன்பிளஸ் ஒப்பன் (OnePlus Open) மாடலையும் நீங்கள் கருத்தில் கொள்ளலாம். தற்போது இதுவும் தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. பிளிப்கார்ட் வலைத்தளத்தில் தற்போது இது ரூ.3,504 பிளாட் தள்ளுபடியை (Flat Offer) பெற்றுள்ளது. நினைவூட்டும் வண்ணம் இந்தியாவில் இது ரூ.1,39,999 க்கு அறிவிக்கப்பட்டது.

ஆனால் பிளிப்கார்ட் வலைதளத்தில் தற்போது ஒன்பிளஸ் ஓப்பன் ஸ்மார்ட்போன் ரூ.1,36,495 க்கு வாங்க கிடைக்கிறது. இந்த டீல் எப்போது காலாவதியாகும் (Expire) என்று தெரியவில்லை. ஆர்வமுள்ளவர்கள் உடனே முந்தவும். 2024 குடியரசு தின சிறப்பு விற்பனைகளின் (Republic Day Sale 2024) போது ஒன்பிளஸ் ஓப்பன் மீதும் தள்ளுபடி கிடைக்குமா என்று கேட்டால்.. அதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை; கிடைக்காமல் கூட போகலாம்!

முழுசா ரூ.16,000 டிஸ்கவுண்ட் பெற்ற Samsung போன்! என்ன மாடல்?

சாம்சங் VS ஒன்பிளஸ் - இரண்டில் எந்த ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனை வாங்கலாம்? இவ்விரு ஃபோல்டபிள் போன்களும் அவற்றின் சொந்த வழியில் சிறந்தவைகளாக விளங்குகின்றன. உங்கள் பட்ஜெட் என்ன, நீங்கள் எந்த பிராண்ட்டை அதிகம் நம்புகிறீர்கள், உங்களுக்கு தேவையான அம்சங்கள் எது? எதற்கு நீங்க;ள் அதிக முக்கியத்துவம் கொடுப்பீர்கள்? என்பதை பொறுத்து சாம்சங் கேலக்ஸி இஸட் ஃபோல்ட் 5 அல்லது ஒன்பிளஸ் ஓப்பன் ஆகிய இரண்டில் ஒன்றை வாங்கலாம்!

More from GizBot

Best Mobiles in India

English summary
2 Foldable Smartphones Gets Great Discount Samsung Galaxy Z Fold 5 OnePlus Open Buy or not
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X