2 நாட்களுக்கு சார்ஜ் போட வேண்டாம்.. பொளந்து விட்ட POCO.. 8500mAh பேட்டரி உடன் புதிய போன்.. என்ன மாடல்?
ஆரம்பிக்கும் போதே - ஷாவ்மீ (Xiaomi) நிறுவனத்தின் துணை நிறுவனம் ரெட்மி (Redmi) மட்டுமல்ல போக்கோவும் (POCO) தான் என்பதை தெளிவுபடுத்தி விடுகிறேன். இல்லை என்றால் - தலைப்பில் போக்கோ என்று போட்டுவிட்டு.. நான் ஏன் இங்கே ரெட்மி ஸ்மார்ட்போனை பற்றி பேசிக்கொண்டு இருக்கிறேன் என்கிற குழப்பம் உங்களுக்குள் எழலாம்.
ரெட்மி பிராண்டிங்கின் கீழ் சீனாவில் மட்டுமே ஸ்பெஷல் ஆக அறிமுகமாகும் மாடல்கள் இந்திய சந்தைக்கு வரும்போது போக்கோ பிராண்டிங்கின் கீழ் வருவது கடந்த பல ஆண்டுகளாக நடந்து வரும் "மார்க்கெட்டிங் (தந்திரம்) வழக்கம் ஆகும். இது உங்களுக்கு ஏற்கனவே தெரியுமென்றால்.. நேரடியாக விஷயத்திற்குள் இறங்கி விடலாம்.

சீனாவில் - ரெட்மி டர்போ 5 மேக்ஸ் (Redmi Turbo 5 Max) ஸ்மார்ட்போன் ஆனது 9000mAh பேட்டரி உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதே ஸ்மார்ட்போன் - இந்திய சந்தையில் போக்கோ எக்ஸ்8 ப்ரோ மேக்ஸ் (Poco X8 Pro Max) ஆக அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் போக்கோ எக்ஸ்8 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் ஆனது 8500mAh பேட்டரி உடன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம் என்கிற தகவல் கிடைத்துள்ளது. பேட்டரி கெப்பாசிட்டியில் உள்ள இந்த சிறிய தரமிறக்கம் ஆனது பிராந்திய பாதுகாப்பு மற்றும் சான்றிதழ் தேவைகள் காரணமாக இருக்கலாம். இருப்பினும் கூட மற்ற பெரும்பாலான ஸ்மார்ட்போன்களுடன் ப்பிடும்போது - கண்டிப்பாக இது முன்னணியில் இருக்கும்.
பேப்பர்கிங்13 (PaperKing13) வழியாக கிடைத்துள்ள இந்த தகவலில் போக்கோ எக்ஸ்8 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனின் 8500mAh பேட்டரி ஆனது 100W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் இணைக்கப்படும் என்றும் குறிப்பிடுகிறது. ஆக இவ்வளவு பெரிய பேட்டரியுடன், ஒரு முழு சார்ஜில் - போக்கோ எக்ஸ்8 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் ஆனது ஈசியாக 2 நாட்கள் வரையிலான பேட்டரி லைஃப்பை வழங்கலாம்.
8000mAh பேட்டரி உடன் வரும் ஷாவ்மீ 17 மேக்ஸ்: ஷாவ்மீ (Xiaomi) நிறுவனம் அதன் அடுத்த ஷாவ்மீ 17 சீரீஸ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது. அது ஷாவ்மீ 17 மேக்ஸ் (Xiaomi 17 Max) ஸ்மார்ட்போன் ஆகும். முன்னதாக வெளியான தகவல் - இது 8000mAh பேட்டரி மற்றும் ஷாவ்மீ 17 மாடலை போன்ற கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் தற்போது வெளியாகியுள்ள ஒரு புதிய லீக் ஆனது, ஷாவ்மீ 17 மேக்ஸ் ஸ்மார்ட்போன் ஆனது இன்னும் திறமையான கேமரா அமைப்பை கொண்டிருக்கும் என்று கூறுகிறது. டிப்ஸ்டர் டிஜிட்டல் சாட் ஸ்டேஷனின் சமீபத்திய கூற்றுப்படி, ஷாவ்மீ 17 மேக்ஸ் ஸ்மார்ட்போன் ஆனது 1/1.4 இன்ச் அளவுள்ள 200எம்பி சாம்சங் ISOCELL HPE ப்ரைமரி சென்சாரை கொண்டிருக்கும்.
மேலும் இது 1/1.953 இன்ச் 50எம்பி சோனி IMX8-சீரிஸ் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ சென்சாருடன் இணைக்கப்பட்டு இருக்கும். கூடவே இதன் கேமரா செட்டப்பில் 50எம்பி அல்ட்ராவைடு லென்ஸும் இடம்பெறலாம். ஒப்பிடுகையில் "வெண்ணிலா" ஷாவ்மீ 17 ஸ்மார்ட்போனின் ப்ரைமரி, டெலிஃபோட்டோ மற்றும் அல்ட்ராவைடு கேமராக்களில் 50எம்பி சென்சார்கள் உள்ளது.
ஷாவ்மீ 17 மேக்ஸ் ஆனது ஒரு நான்-ப்ரோ மாடல் என்பதால், இதில் இரண்டாம் நிலை ரியர் டிஸ்பிளே இடம்பெற வாய்ப்பில்லை. ஆக தற்போதைக்கு செக்கென்டரி டிஸ்பிளேவானது ஷாவ்மீ 17 ப்ரோ (Xiaomi 17 Pro) மற்றும் ஷாவ்மீ 17 ப்ரோ மேக்ஸ் (Xiaomi 17 Pro Max) மாடல்களில் கிடைக்கிறது. ஆனால் புதிய மேக்ஸ் மாடலின் ரியர் டிசைன் ஆனது ஸ்டாண்டர்ட் ஷாவ்மீ 17 மாடலை போலவே இருக்கும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications








