OnePlus 12 க்கு போட்டியாக 2 சீன நிறுவனங்களின் புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யவுள்ளன!
2024-ல் ஒன்பிளஸ் நிறுவனத்திற்கு பெரிய-பெரிய போட்டிகள் காத்திருப்பது போல் தெரிகிறது. ஜன.23 அன்று ஒன்பிளஸ் 12 இந்தியாவில் அறிமுகமாவதற்கு முன்பாகவே அதை காலி செய்துவிட வேண்டும் என்கிற நோக்கத்தின் கீழ் 2 சீன ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் பக்காவான "ஸ்கெட்ச்" ஒன்றை போட்டுள்ளனர்.
அதென்ன ஸ்கெட்ச்? அதென்ன நிறுவனங்கள்? ஒன்பிளஸ்-க்கு எதிரான ஸ்கெட்ச்சை போட்டுள்ளது விவோ (Vivo) மற்றும் ரெட்மி (Redmi) நிறுவனங்கள் தான். இவ்விரு நிறுவனங்களும் அவசர அவசரமாக (அதாவது ஒன்பிளஸ் 12 இந்திய அறிமுகத்திற்கு முன்னதாக) தத்தம் புதிய ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளன.

அதென்ன ஸ்மார்ட்போன்கள்? எப்போது அறிமுகம்? விவோ நிறுவனத்தின் மிகவும் பிரபலமான கேமரா போன்களான விவோ எக்ஸ்100 சீரீஸ் (Vivo X100 Series) மற்றும் ரெட்மி நிறுவனத்தின் மிகவும் பிரபலனான நோட் சீரிஸ் போன்களான ரெட்மி நோட் 13 சீரீஸ் (Redmi Note 13 Series) ஆகிய இரண்டுமே ஜனவரி 4 ஆம் தேதியன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளன.
அதாவது ஜன.23 அன்று அறிமுகமாகும் ஒன்பிளஸ் 12-க்கு முன்பாகவே விவோ மற்றும் ரெட்மியின் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் விற்பனையை தொடங்கி இருக்கும். விவோ எக்ஸ்100 சீரீஸ் மற்றும் ரெட்மி நோட் 13 சீரீஸின் விலை நிர்ணயம் எப்படி இருக்கும்? இந்த போன்கள் எப்படி ஒன்பிளஸ் 12-க்கு போட்டியாக இருக்கும்? இதோ விவரங்கள்:

ரெட்மி நோட் 13 சீரீஸ் என்ன விலைக்கு வரும்? இந்திய சந்தையில் ரெட்மி 13 ஸ்மார்ட்போன் ரூ.15,000 பட்ஜெட்டிலும், ரெட்மி நோட் 13 ப்ரோ ஸ்மார்ட்போன் ரூ.25,000 பட்ஜெட்டிலும், ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் ரூ.30,000 பட்ஜெட்டிலும் அறிமுகம் செய்யப்படலாம்.
விவோ எக்ஸ்100 சீரீஸ் என்ன விலைக்கு வரும்? சீனாவில் விவோ எக்ஸ்100 மற்றும் விவோ எக்ஸ்100 ப்ரோ மாடலானது இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.56,500 க்கும், ரூ.50,000 க்கும் அறிமுகமானது. ஹாங்காங்கில் இவைகள் முறையே ரூ.85,224 க்கும், ரூ.63,917 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ஹாங்காங் சந்தை போன்ற விலையை நாம் இந்தியாவிலும் எதிர்பார்க்கலாம்.

ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன் என்ன விலைக்கு வரும்? ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனின் பேஸிக் 12ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ரூ.59,999 முதல் ரூ.62,999 க்குள் என்கிற விலைக்குள்ளும், 16ஜிபி ரேம் + 512ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.64,999 முதல் ரூ.67,999 க்குள் என்கிற விலைக்குள்ளும் அறிமுகம் செய்யப்படலாம்.
ரெட்மி நோட் 13 சீரிஸ் VS விவோ எக்ஸ்100 சீரிஸ் VS ஒன்பிளஸ் 12: கேமரா சென்ட்ரிக் ஸ்மார்ட்போன்களை தேடுபவர்கள் நிச்சயம் விவோ எக்ஸ்100 பக்கமே சாய்வார்கள். ரூ.80,000 பட்ஜெட்டில் வரும் விவோ எக்ஸ்100 ப்ரோ மாடலை வாங்கவில்லை என்றாலும் கூட ஒன்பிளஸ் 12-ஐ போலவே ரூ,60,000 பட்ஜெட்டில் வரும் விவோ எக்ஸ்100 மாடலை வாங்கலாம்.
பட்ஜெட்டே ஒரு பிரச்சனை தான் என்பவர்கள் விவோ எக்ஸ்100 சீரீஸ் பக்கமும் செல்ல மாட்டார்கள்; ஒன்பிளஸ் 12 பக்கமும் செல்ல மாட்டார்கள். ரூ.15,000 - ரூ.30,000 பட்ஜெட்டில் வரும் ரெட்மி நோட் 13 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் பக்கமே சாய்வார்கள். ஆகமொத்தம் எப்படி பார்த்தாலும் ஒன்பிளஸ் 12-ன் இந்திய விற்பனையை இவ்விரு ஸ்மார்ட்போன்கள் சீரீஸ்களுமே சரித்து விடப்போகின்றன.
விவோ எக்ஸ்100 சீரீஸ் என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? ப்ரோ வேரியண்ட் ஆனது 6.78-இன்ச் AMOLED 8T LTPO கர்வ்டு டிஸ்பிளே, ஆக்டா-கோர் 4என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி 9300 சிப்செட், 16GB வரை LPDDR5 ரேம் மற்றும் 1TB வரை UFS4.0 இன்பில்ட் ஸ்டோரேஜ் போன்ற முக்கிய அம்சங்களை பேக் செய்கிறது.
கேமராக்களை பொறுத்தவரை, ஸெய்ஸ் பிராண்டட் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பில் ஓஐஎஸ் ஆதரவு உடனான 50-மெகாபிக்சல் சோனி IMX989 1-இன்ச் சென்சார் + 50-மெகாபிக்சல் அல்ட்ரா வைட்-ஆங்கிள் கேமரா + 50-மெகாபிக்சல் ஸெய்ஸ் ஏபிஓ சூப்பர் டெலிஃபோட்டோ கேமரா உள்ளது. முன்பக்கத்தில், 32 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா உள்ளது.
ஐபி68 ரேட்டிங் உடன் வரும் விவோ எக்ஸ்100 ஸ்மார்ட்போன் 100W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவு உடனான 5,400mAh பேட்டரியை பேக் செய்கிறது. விவோ நிறுவனத்தின் கூற்றுப்படி, வெறும் 12.5 நிமிடங்களில் இது பேட்டரியை பூஜ்ஜியத்தில் இருந்து 50 சதவீதம் வரை நிரப்பும்.
மறுகையில் உள்ள வெண்ணிலா வேரியண்ட் ஆனது ப்ரோ மாடலில் உள்ள அதே டிஸ்பிளேவை கொண்டுள்ளது. ஆனால் இது 4என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி 9300 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது 16GB வரையிலான LPDDR5 RAM மற்றும் 1TB வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜை கொண்டுள்ளது. மேலும் ஐபி68 ரேட்டிங், 120W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, 5,000mAh பேட்டரியை கொண்டுள்ளது
கேமராக்களை பொறுத்தவரை, இது ஸெய்ஸ் பிராண்டட் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்புடன் வருகிறது. அதில் ஓஐஎஸ் ஆதரவு உடனான 50-மெகாபிக்சல் சோனி IMX920 VCS பயோனிக் மெயின் கேமரா + 50-மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமரா + 100x தெளிவான ஜூமிங்கை வழங்கும் 64-மெகாபிக்சல் ஸெய்ஸ் சூப்பர்-டெலிஃபோட்டோ கேமரா உள்ளது. முன்பக்கத்தில், இது 32-மெகாபிக்சல் செல்ஃபி கேமரா உள்ளது.


Click it and Unblock the Notifications








