அடுத்த வாரம் வியூவ்சோனிக் புதிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்

By Super
|
அடுத்த வாரம் வியூவ்சோனிக் புதிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்
டெல்லி: ஆன்ட்ராய்டு ஓஎஸ் மற்றும் 3டி தொழில்நுட்பங்கள் கொண்ட இரண்டு ஸ்மார்ட்போன்களை அடுத்த வாரம் வியூவ்சோனிக் அறிமுகப்படுத்துகிறது.

வி350 மற்றும் வியூவ்பேடு-4 என்ற குறியீட்டு பெயர்களில் வரும் இந்த போன்களில் ஒன்று வியூவ்பேடு 4.1 இஞ்ச் தொடுதிரை கொண்டதாகவும், வி-350 போன் 3.5 இஞ்ச் கொண்ட தொடுதிரையுடன் வருகிறது.

வியூவ்பேடு போன் ஒரு ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸருடன் வருகிறது. இந்த போன் வியூவ்சோனிக் நிறுவனத்தின் சொந்த இன்டர்பேஸ் கொண்டது.

வி350 போன் டியூவல் சிம் வசதியுடன் வரும் இரண்டாவது ஆன்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்ட போன் என்ற சிறப்பம்சத்துடன் வருகிறது.

ஆன்ட்ராய்டு 2.2 ப்ரேயோ ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்ட இந்த போன் ஒரே சமயத்தில் இரண்டு நெட்வொர்க் சர்வீஸ்களில் இயங்கும். எச்விஜிஏ கெப்பாஸிட்டிவ் டச்ஸ்கிரீன், ஆட்டோ ஃபோகஸ் உடன் 5 மெகாபிக்செல் கேமரா, 32 ஜிபி வரை சேமிப்பு திறனை அதிகரிக்கும் வசதி, வை-பை, புளூடூத் 2.1 வெர்ஷன், ஜிபிஎஸ் நேவிகேஷன் ஆகிய சகல தொழில்நுட்ப வசதிகளையும் பெறலாம்.

வியூவ்பேடு-4 போன் ஆன்ட்ராய்டு ஜிஞ்சர்பேர்டு ஓஎஸ் கொண்டதாக இருக்கும். 720பி ஹைடெபினிஷன் ரெக்கார்டிங், ப்ளேபேக், அப்லோடு மற்றும் மினி எச்டிஎம்ஐ டிஸ்பிளே அவுட்புட் ஆகிய அம்சங்களுடன் வருகிறது.

ஆட்டோ ஃபோகஸ் கொண்ட 5 மெகாபிக்செல் கேமரா, புளூடூத் 2.1 வெர்ஷன், வை-பை ஒயர்லெஸ் வீடியோ காலிங் வசதி, ஆடியோ முகப்பு கேமரா உள்ளிட்ட தொழில்நுட்ப அம்சங்களை நிரம்ப பெற்றிருக்கிறது வியூவ்பேடு-4 தொடுதிரை போன்.

புதிய வியூவ்சோனிக் வியூவ்பேடு 4 ஜிபிஎஸ் அப்ளிகேஷன்களை பெறுவதற்கு உதவுகிறது. இரண்டு போன்களும் அனைத்து நவீன தொழில்நுட்பங்கள் கொண்ட போன்களாகவே இருக்கின்றன.

இதில், வியூவ்சோனிக் வி-350 போன் ரூ.17,000 விலையிலும், வியூவ்பேடு போன் ரூ.20,000 விலையிலும் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X