Home
Mobile

வெச்சி செஞ்சிட்டாங்க.. ரூ.4000 விலை குறைப்பு.. ரூ.16999-க்கு 3D டிஸ்பிளே.. SONY கேமரா.. 16GB ரேம்.. எந்த போன்?

என்னங்க சொல்றீங்க, சோனி சென்சாரும், 3டி கர்வ்ட் டிஸ்பிளேவும் இருக்குற போன் ரூ.16,999 பட்ஜெட்ல கிடைக்குதா? என்று மூக்கில் விரல் வைக்கும்படியான டிஸ்கவுண்ட்டில் ரியல்மி பி1 ப்ரோ 5ஜி (Realme P1 Pro 5G) விற்பனைக்கு கிடைக்கிறது. 45W சூப்பர்வூக் சார்ஜிங், 5000mAh பேட்டரி, 16 ஜிபி ரேம், 256ஜிபி மெமரி போன்ற மற்ற பீச்சர்களிலும் பின்னிப்பெடல் எடுக்கும் இந்த ரியல்மி போனுக்கு பிளிப்கார்ட் விற்பனையில் (Flipkart Sale) கிடைக்கும் டிஸ்கவுண்ட் விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ரூ.20000 பட்ஜெட்டைவிட மலிவான விலைக்கு 3டி கர்வ்ட் டிஸ்பிளே போன் வாங்க விரும்பினால், டிஸ்பிளே மட்டுமல்லாமல் பட்டையை கிளப்பும் கேமரா, பேட்டரி மற்றும் சிப்செட் பர்ஃபாமென்ஸ் கொடுக்கும் இந்த ரியல்மி பி1 ப்ரோ 5ஜி போனானது பெஸ்ட் ஆப்ஷனாக இருக்கிறது. முழு பீச்சர்களை பார்த்துவிட்டு நீங்களே முடிவெடுங்கள்.

வெச்சி செஞ்சிட்டாங்க.. ரூ.4000 விலை குறைப்பு.. ரூ.16999-க்கு 3D போன்!

ரியல்மி பி1 ப்ரோ 5ஜி அம்சங்கள் (Realme P1 Pro 5G Specifications): வாட்டர் டச் கன்ட்ரோல் கொண்ட 6.7 இன்ச் (2412 × 1080 பிக்சல்கள்) 3டி கர்வ்ட் அமோலெட் (3D Curved AMOLED) டிஸ்பிளே பேக் செய்துள்ளது. இந்த டிஸ்பிளேவில் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) மற்றும் 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கிடைக்கிறது. 950 பீக் பிரைட்னஸ் எதிர்பார்க்கலாம்.

மேலும், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 360Hz டச் சாம்பிளிங் ரேட் கொடுக்கிறது. ஆகவே, பெஸ்ட் டிஸ்பிளே அவுட்புட் எதிர்பார்க்கலாம். லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) பேஸ்டு ரியல்மி யுஐ 5.0 (realme UI 5.0) மற்றும் கேமிங் பிரியர்களுக்கான அவுட்புட் கொடுக்கும்படி அட்ரினோ 710 ஜிபியு (Adreno 710 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது.

இந்த பட்ஜெட்டில் டிஸ்பிளேவுக்கு நிகராக பிரீமியம் அவுட்புட் கொடுக்கும்படி ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 4என்எம் (Octa Core Snapdragon 6 Gen 1 4nm) சிப்செட் வருகிறது. ஸ்லிம் பாடி இருந்தும் 5000mAh பேட்டரி வருகிறது. இந்த பேட்டரிக்கு டைப் சி போர்ட் (Type C Port) மற்றும் 45W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் (Super VOOC Fast Charging) வருகிறது.

கேமராவிலும் பிரீமியம் காட்டும்படி சோனி எல்ஒய்டி 600 (Sony LYT 600) சென்சார் மற்றும் ஓஐஎஸ் (OIS) டெக்னாலஜி கொண்ட 50 எம்பி மெயின் கேமரா வருகிறது. இந்த கேமராவுடன் ஹைனிக்ஸ் எச்ஐ846டபுள்யூ (Hynix Hi846W) சென்சாருடன் 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா கிடைக்கிறது. லைட் ஃப்யூசன் என்ஜின் (Light Fusion Engine) சப்போர்ட் கிடைக்கிறது.

இந்த என்ஜின் மூலம் லைட் மற்றும் ஷேடோ போட்டோக்களில் பிரீமியம் அவுட்புட் எதிர்பார்க்கலாம். இதேபோல எச்டி என்ஹான்ஸ் கொண்ட அல்ட்ரா எச்டிஆர் என்ஜின் (Ultra HDR Engine), நைட்போட்டோகிராபிக்கு நைட் ஐ என்ஜின் (Night Eye Engine) போன்ற பிரத்யேக பீச்சர்கள் வருகின்றன. இந்த ரியல்மி பி1 ப்ரோ 5ஜியில் 16 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது.

இந்த ரியல்மி போனின் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.22,999 பட்ஜெட்டில் இருந்தது. இப்போது, பிளிப்கார்ட் விற்பனையில் ரூ.20,999 பட்ஜெட்டில் கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டிலும் ரூ.4000 உடனடி டிஸ்கவுண்ட் பெற்று கொள்ளலாம். ஐசிஐசிஐ மற்றும் எச்டிஎப்சி பேங்க் கஸ்டமர்களுக்கு இந்த சலுகை கொடுக்கப்படுகிறது. ஆகவே, ரூ.16,999 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம்.

Best Mobiles in India

English summary
19 Percent Disocount on Realme P1 Pro 5G With 256GB Storage in Flipkart Sale Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X