Home
Mobile

ஆர்டர் மிரளுது.. ரூ.24,000 பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 16GB ரேம்.. OIS கேமரா.. எந்த மாடல்?

அமேசான் தள்ளுபடியில் 3டி கர்வ்ட் டிஸ்பிளே, 16 ஜிபி ரேம், ஓஐஎஸ் கேமரா, 44W ஃபாஸ்ட் சார்ஜிங், 5000mAh பேட்டரி போன்ற பக்கா அம்சங்களை கொண்ட விவோ வி29இ 5ஜி (Vivo V29e 5G) போன் வெறும் ரூ.24,000 பட்ஜெட்டில் கிடைக்கிறது.

விவோ வி29இ 5ஜி அம்சங்கள் (Vivo V29e 5G Specifications): இந்த விவோ போனில் 6.78 இன்ச் (2400 × 1080 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 3டி கர்வ்ட் அமோலெட் (AMOLED) டிஸ்பிளேவாகும். இந்த டிஸ்பிளேவில் 1300 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் டிசிஐ பி3 கலர் காமட் சப்போர்ட் வருகிறது.

 ரூ.24,000 பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 16GB ரேம்.. OIS கேமரா.. எந்த மாடல்?

இந்த விவோ வி29இ மாடலில் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 695 8என்எம் (Octa Core Snapdragon 695 8nm) சிப்செட் வருகிறது. அதோடு ஆண்ட்ராய்டு 13 (Android 13) ஓஎஸ் மற்றும் கேமிங் பிரியர்களுக்கான அட்ரினோ 619எல் ஜிபியு (Adreno 619L GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. அதேபோல ஃபன்டச் ஓஎஸ் 13 (Funtouch OS 13) கொண்டுள்ளது.

இந்த போனில் 8 ஜிபி ரேம் + 8 ஜிபி விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) சப்போர்ட் வருகிறது. அதோடு 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி ஆகிய 2 வேரியண்ட்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன. மேலும், 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி (microSD) கார்டு சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆகவே, டூயல் நானோ சிம் சிலாட் (Dual Nano SIM Slot) மட்டுமல்லாமல், மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் வருகிறது. இந்த விவோ போனில் 44W ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. இந்த பேட்டரிக்கு டைப்-சி (Type-C) சப்போர்ட் வருகிறது. இன்-டிஸ்பிளே பிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வருகிறது. பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர் வருகிறது.

 ரூ.24,000 பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 16GB ரேம்.. OIS கேமரா.. எந்த மாடல்?

இந்த விவோ வி29இ போனில் 64 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) வருகிறது. இந்த கேமராவில் ஓஐஎஸ் (OIS) டெக்னாலஜி பயன்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல 50 எம்பி செல்பீ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த கேமராவில் டூயல் வீயூ, சூப்பர் மூன், ஸ்லோவ் மோஷன், மூவிஸ் லைட் எஃபெக்ட், நைட், போர்ட்ராய்டு, லைவ் போட்டோ போன்ற பல்வேறு பீச்சர்கள் வருகின்றன. அதேபோல டைப் - சி ஆடியோ (Type-C Audio) சப்போர்ட் கொண்டுள்ளது.

இந்த விவோ வி29இ போனில் 5ஜி எஸ்ஏ (5G SA), டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE), ப்ளூடூத் 5.1 (Bluetooth 5.1), வை-பை 6 (Wi-Fi 6) மற்றும் ஜிபிஎஸ் (GPS) ஆகிய கனெக்டிவிட்டி அம்சங்கள் வருகின்றன. இந்த விவோ போனில் ஆர்டிஸ்டிக் ப்ளூ (Artistic Blue) மற்றும் ஆர்டிஸ்டிக் ரெட் (Artistic Red) ஆகிய 2 கலர்கள் விற்பனைக்கு வருகின்றன.

இதன் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.25,990ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், அமேசான் (Amazon) தளத்தில், ரூ.1250 தள்ளுபடியுடன் ரூ.24,740 விலைக்கு கிடைக்கிறது. இந்த தள்ளுபடியை எச்டிஎப்சி பேங்க் கிரெடிட் கார்டு பயன்படுத்தி பெற்று கொள்ளலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
19 Percent Discount on Vivo V29e 5G With Snapdragon 695 in Amazon Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X